(Source: ECI/ABP News/ABP Majha)
Sri Lanka Economy Crisis: வரலாறு காணாத அளவில் உணவு பற்றாக்குறை - தவிக்கும் இலங்கை மக்கள் !
இலங்கை நாட்டில் உணவு பொருட்களின் விலை வேகமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் கடந்த சில மாதங்களாக பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் மற்றும் பொருளாதார மந்தநிலை காரணமாக அந்நாட்டில் மிகவும் மோசமான சூழல் உருவாகியுள்ளது. இதனால் அங்கு வேலையிண்மை மற்றும் பணவீக்கம் ஆகியவை அதிகரித்துள்ளது. இதை சரி செய்ய அந்நாட்டு அரசு புதிய பணத்தை அச்சிட தொடங்கியது. அரசின் இந்த நடவடிக்கை பணவீக்கம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை ஆகியவை அதிகரித்துள்ளது.
உணவு பொருட்களின் விலை வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக காய்கறிகளின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக சில்லறை விற்பனையில் ஒரு கிலோ கேரட்டின் விலை தற்போது 540 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதேபோல் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் பச்சை மிளகாய்வின் விலையும் வேகமாக அதிகரித்துள்ளது. அங்கு ஒரு கிலோ பச்சை மிளகாய் 250 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. இவை தவிர இலங்கையின் முக்கியமான வேளாண் பயிர்களில் ஒன்றான நெல் பயிர் உற்பத்தியும் மிகவும் குறைந்துள்ளது. அங்கு அதிகமாக நெல் விளையும் அம்பாறை மாவட்டத்தில் நெல் உற்பத்தி மிகவும் குறைவாக அமைந்துள்ளது. இதன்காரணமாக அங்கு அரிசி உற்பத்தி மற்றும் அரிசியின் விலையும் வேகமாக அதிகரித்துள்ளது.
மேலும் உணவு பொருட்களுடன் சேர்ந்து அங்கு சில அத்தியாவசிய பொருட்களின் விலையும் வேகமாக உயர்ந்துள்ளது. இந்த திடீர் விலை உயர்விற்கு இலங்கை அரசின் தவறான பொருளாதார கொள்கை மற்றும் வெளியுறவு கொள்கை என்று சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர். ஏனென்றால் இலங்கை அரசு சமீப நாட்களாக சீன அரசு ஆதரவாக இருக்கும் நிலைப்பாடுகளை எடுத்து வருகிறது. அத்துடன் சீன அரசுடன் அதிகம் நட்பு பாராட்டி வருகிறது. இதன்காரணமாக இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் உதவிகள் இலங்கைக்கு சரியாக கிடைக்கைவ்ல்லை என்று சிலர் குற்றசாட்டி வருகின்றனர்.
அத்துடன் இலங்கை நாட்டின் முக்கிய ஏற்றுமதி நாடுகளான ஐரோப்பிய நாடுகளும் தற்போது இலங்கை பொருட்களை வாங்குவதில் அதிக நாட்டம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக இலங்கையின் பொருளாதாரம் மிகவும் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிகிறது. கொரோனா பெருந்தொற்று உடன் சேர்ந்து இலங்கை அரசின் தவறான நடவடிக்கைகளும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: அதிர்ச்சி.. இளம்பெண்ணுக்கு 8 வயது சிறுவன் உட்பட மூவரால் பாலியல் தொந்தரவு.. போலீஸ் கொடுத்த ட்ரீட்மெண்ட்