மேலும் அறிய

Ranil Wickremesinghe: இலங்கை தமிழர்களின் பிரச்சனை.. தமிழ் கட்சி தலைவர்களுடன் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க சந்திப்பு..

இலங்கையில் இருக்கும் தமிழர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க தமிழ் கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இலங்கை அதிபராக ரணில் விக்ரமசங்க பதவி ஏற்றது முதல் அங்கு இருக்கும் தமிழர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். இதற்காக தமிழ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையும் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் இலங்கை தலைநகர் கொழும்புவில் அதிபர் ரணில் விக்ரமசிங்க தமிழ் கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்களுக்கான நில உரிமைகளை வழங்குதல், மீள்குடியேற்றம் மற்றும் நல்லிணக்கம், 13வது திருத்தச் சட்டம் தொடர்பான சட்டங்களை அமல்படுத்துவது உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியாவில் அகதி முகாம்களில் உள்ள இலங்கையர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பிரச்சனைகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது என்று இலங்கை அதிபர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.         

இலங்கையில் தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கும் இடையிலான இனப்பிரச்சினையைத் தீர்க்கும் முயற்சியில் 1987 ஆம் ஆண்டு 13 வது திருத்தம் நிறைவேற்றப்பட்டது. அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனே ஆகியோர் கையெழுத்திட்ட இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இது செய்யப்பட்டது. அந்த நேரத்தில் தமிழ் கிளர்ச்சி வேகமாக நடைபெற்றது, பின்னர் அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் (LTTE) இடையே மோதல் போக்கு நிலவியது.  குறிப்பாக தனித் தமிழ் நாடு கோரிக்கையை முன்வைத்தது இந்த கிளர்ச்சி நடைப்பெற்றது. அதுமட்டுமின்றி ராணுவத்தையும் களமிறக்கி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. 2009 ஆம் ஆண்டு வேலுப்பிள்ளை பிரபாகரனின் மறைவுக்கு பின் அந்த அமைப்பு வீழ்ச்சியடைந்தது குறிப்பிடத்தக்கது.  

1948 இல் ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து இலங்கையில் உள்ள தமிழர்கள் கிழக்கு மற்றும் வடக்கு பிராந்தியங்களில் அரசியல் சுயாட்சியைக் கோரியுள்ளனர். கல்வி, விவசாயம், நிலம், காவல்துறை, நிதி மற்றும் வீட்டுவசதி ஆகியவற்றின் மீதான அதிகாரங்களை நாட்டின் ஒன்பது மாகாணங்களுக்கு இந்த திருத்தச்சட்டம் வழங்கும். எனினும், நாட்டில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களால் அது முழுமையாக தற்போது வரை நடைமுறைப் படுத்தப்படவில்லை. மேலும், ஆங்கிலத்தை இணைப்பு மொழியாகவும், தமிழை அலுவல் மொழியாகவும் ஆக்குவதற்கும் வழிவகுத்தது. 

இந்த ஒப்பந்தம் போடப்பட்டதிலிருந்து, 13 வது திருத்தத்தை அமுல்படுத்துமாறு இந்தியா அழுத்தம் கொடுத்து வந்தது. ஒருங்கிணைந்த  இலங்கையை உருவாக்குவதற்கு, இன சமூகங்களுக்கிடையிலான பிரச்சினையில் நீண்டகால நல்லிணக்கத்திற்காக தமிழ் பிரதேசங்களுக்கு அதிகாரப் பகிர்வு அவசியம் என இந்தியா வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்று இலங்கை அதிபர் தமிழ் கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நெய்யில் அதிக கலப்படம்" திருப்பதி லட்டு விவகாரம்.. திருமலை திருப்பதி தேவஸ்தானம் பகீர்!
Tirupati Laddu: 300 வருட பாரம்பரியம், மெட்ராஸ் பங்கு, 6 மாற்றங்கள் - திருப்பதி லட்டு பிரசாதத்தின் வரலாறு
Tirupati Laddu: 300 வருட பாரம்பரியம், மெட்ராஸ் பங்கு, 6 மாற்றங்கள் - திருப்பதி லட்டு பிரசாதத்தின் வரலாறு
Lubber Pandhu Review : சிக்ஸரா? டக் அவுட்டா? ஹரிஷ் கல்யாண் Vs அட்டகத்தி தினேஷின் லப்பர் பந்து - விமர்சனம் இதோ..!
Lubber Pandhu Review : சிக்ஸரா? டக் அவுட்டா? ஹரிஷ் கல்யாண் Vs அட்டகத்தி தினேஷின் லப்பர் பந்து - விமர்சனம் இதோ..!
பிளஸ் 2 மாணவிகளின் ரீல்ஸ் மோகம்; வகுப்பு ஆசிரியைக்கு சோகம்- பின்னணி இதுதான்!
பிளஸ் 2 மாணவிகளின் ரீல்ஸ் மோகம்; வகுப்பு ஆசிரியைக்கு சோகம்- பின்னணி இதுதான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tirupati laddu | BEEF, PORK கொழுப்பு..திருப்பதி லட்டு NON-VEG!ஷாக்கில் பக்தர்கள்EPS vs SP Velumani | நான் அடிச்சா தாங்கமாட்ட.. அசராமல் அடிக்கும் எடப்பாடி! SP வேலுமணிக்கு WARNING..Trichy News | திமுக கொடியுடன் ஆடு திருடும் கும்பல்..தீவிரமாக தேடும் போலீஸ்VCK vs PMK  | Graph-ஐ உயர்த்திய திருமா! விசிக ரூட்டில் பாமக?அன்புமணி மாஸ்டர் பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நெய்யில் அதிக கலப்படம்" திருப்பதி லட்டு விவகாரம்.. திருமலை திருப்பதி தேவஸ்தானம் பகீர்!
Tirupati Laddu: 300 வருட பாரம்பரியம், மெட்ராஸ் பங்கு, 6 மாற்றங்கள் - திருப்பதி லட்டு பிரசாதத்தின் வரலாறு
Tirupati Laddu: 300 வருட பாரம்பரியம், மெட்ராஸ் பங்கு, 6 மாற்றங்கள் - திருப்பதி லட்டு பிரசாதத்தின் வரலாறு
Lubber Pandhu Review : சிக்ஸரா? டக் அவுட்டா? ஹரிஷ் கல்யாண் Vs அட்டகத்தி தினேஷின் லப்பர் பந்து - விமர்சனம் இதோ..!
Lubber Pandhu Review : சிக்ஸரா? டக் அவுட்டா? ஹரிஷ் கல்யாண் Vs அட்டகத்தி தினேஷின் லப்பர் பந்து - விமர்சனம் இதோ..!
பிளஸ் 2 மாணவிகளின் ரீல்ஸ் மோகம்; வகுப்பு ஆசிரியைக்கு சோகம்- பின்னணி இதுதான்!
பிளஸ் 2 மாணவிகளின் ரீல்ஸ் மோகம்; வகுப்பு ஆசிரியைக்கு சோகம்- பின்னணி இதுதான்!
Breaking News LIVE, 20 Sep : டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: 149 ரன்களுக்கு ஆட்டமிழந்தது வங்கதேச அணி
Breaking News LIVE, 20 Sep : டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: 149 ரன்களுக்கு ஆட்டமிழந்தது வங்கதேச அணி
"அரசியலுக்காக கடவுள் பெயர பயன்படுத்துறதா" திருப்பதி லட்டு விவகாரம்.. ஜெகன் மோகன் பதிலடி!
தி.மலையில் பயங்கரம்; சென்னையை சேர்ந்த பெண் சாமியார் வெட்டி படுகொலை
தி.மலையில் பயங்கரம்; சென்னையை சேர்ந்த பெண் சாமியார் வெட்டி படுகொலை
"திருப்பதி லட்டு விவகாரத்தில் திடீர் திருப்பம்” திண்டுக்கல்லில்  இருந்து பிரச்சனைக்குரிய நெய் சப்ளை..!
Embed widget