மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
ராஜபக்சேக்களை அரசியலில் இருந்து அகற்ற நினைப்பது வெறும் கனவுதான்: இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை வலுப்படுத்தும் பணிகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வெற்றிகரமாக நடைபெற்று வருவதாகவும் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.
ராஜபக்சேக்களை அரசியலில் இருந்து அகற்ற யாராவது தயாரானால் அது வெறும் கனவாகவே போகும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்
நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை அழிக்க எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை எனவும் சூளுரைத்துள்ளார். முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தொடர்ந்தும் பொதுஜன பெரமுனவின் தலைமைப் பொறுப்பில் செயற்படுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக்க அனுருத்த குறிப்பிட்டுள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சியை வலுப்படுத்த முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து இருப்பதாக அவர் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்திருக்கிறார். எதிர்காலத்தில் பொதுஜன பெரமுன வலுப்பெற்று மீண்டும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் என்றும் கூறினார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை வலுப்படுத்தும் பணிகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வெற்றிகரமாக நடைபெற்று வருவதாகவும் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.
கட்சியின் தேசிய அமைப்பாளரான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை ஆட்சிக்கு கொண்டுவர ஏற்கனவே பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் இந்திக அனுருத்த குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் நடந்தால் மக்கள் கட்சியை ஆதரிப்பார்களா இல்லையா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் என கூறியுள்ளார்.
அதேபோல், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தனது கட்சியின் தலைவராக தொடர்ந்து செயற்படுவார் எனவும் எதிர்வரும் தேர்தலில் அவரது தலைமையில் கட்சி போட்டியிடும் எனவும் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் சூளுரைத்துள்ளார்.
ஏற்கனவே மக்கள் போராட்டம் நடத்தி அக்கட்சியின் முக்கிய தலைவர்களை வீட்டுக்கு அனுப்பி இருக்கம் நிலையில் மீண்டும் அந்த கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் ஆட்சியைப் பிடிப்போம் என கூறி வருவது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போதைய ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய ஆட்சியும் ராஜபக்ச குடும்பத்தின் நிழல் ஆட்சியாக தான் நடைபெறுகிறது என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனை வலுப்படுத்த தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
ஐபிஎல்
இந்தியா
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion