புகைப்படக்காரர்களுக்கு ஃபிளையிங் கிஸ்... செலிபிரிட்டி போல் நடந்துகொள்ளும் ஆலியா பட் மகள்...
பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் மற்றுல் ஆலியா பட் மகளான ராகா புகைப்படக்காரர்களுக்கு ஹாய் சொல்லி க்யூட்டாக ஃபிளையிங் கிஸ் கொடுத்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது
ரன்பீர் கபூர் ஆலியா பட்
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர்களானஅலியா பட் மற்றும் நடிகர் ரன்பீர் கபூர் காதலித்து கடந்த 2022 ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். திருமணமான அதே ஆண்டு நவம்பர் மாதம் ஆலியா மற்றும் ரன்பீருக்கு ராகா என்கிற பெண் குழந்தை பிறந்தார். ஒருபக்கன் ரன்பீர் கபூருக்கு அனிமல் படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்தது. இன்னொரு பக்கம் ஆலியா பட் தேசிய விருது , அடுத்தடுத்து கமர்சியல் வெற்றிப் படங்கள் என கலக்கி வருகிறார். இவர்கள் மட்டுமில்லாமல் இவர்களின் மகண் ராகா கபூர் பாலிவுட்டில் புகழ்பெற்ற குழந்தைகளில் ஒருவராக பேசப்படுகிறார்.
பாலிவுட்டின் பணக்காரக் குழந்தை
ரன்பீர் மற்றும் ஆலியா பட் சமீபத்தில் மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதியில் புதிய பங்களா ஒன்றை கட்டியுள்ளனர். ரன்பீர் கபூரின் தாத்தாவான ராஜ் கபூருக்கு சொந்தமான இந்த பங்களா அவரது இறப்புக்குப் பின் ரன்பீருக்கு சொந்தமாகியுள்ளது. இப்படியான நிலையில் இந்த பங்களாவை புதுப்பிக்கும் பணிகளை கடந்த சில ஆண்டுகளாக செய்து வருகின்றனர் ரன்பீர் மற்றும் ஆலியா. ஏற்கனவே பாந்த்ரா பகுதியில் இந்த தம்பதிக்கு சொந்தமாக 60 கோடி மதிப்புள்ள நான்கு அபார்ட்மெண்ட் உள்ளன. தற்போது தனது தாத்தாவின் பழைய வீட்டை 250 கோடி ரூபாய் மதிப்பில் தனது மனைவி ஆலியாவுடன் சேர்ந்து புதுப்பித்துள்ளார் ரன்பீர் கபூர். 250 கோடி மதிப்புள்ள இந்த வீட்டை ரன்பீர் மற்றும் ஆலிய தங்களது ஒரே மகளான ராகா கபூரின் பெயரில் பதிவு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் பாலிவுட் சினிமாவில் மிகப்பெரிய பணக்கார குழந்தை என்கிற அந்தஸ்த்தை பெற்றுள்ளார் ராகா கபூர்.
புகைப்படக்காரர்களுக்கு முத்தம் கொடுத்த ராகா
ஆரம்பத்தில் ஊடகங்களை விட்டு ராகாவை பாதுகாத்து வைத்த பெற்றோர்கள் தற்போது அவரையும் எல்லா இடங்களுக்கும் அழைத்து செல்கிறார்கள். ராகாவும் தனக்கு கிடைக்கும் ஊடக கவனத்தை ரசிக்கவே செய்கிறார். ஒவ்வொரு முறை பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது அவர் அவர்களுக்கு உற்சாகமாக கையசைத்து ஹாய் சொல்கிறார். மேலும் கிளம்பிச் செல்லும் போது புகைபப்டக்காரர்களுக்கு ஃபிளையிங் கிஸ் ஒன்றும் கொடுப்பதை அவர் வழக்கமாக வைத்துள்ளார். அந்த மாதிரி அவர் முத்தம் கொடுத்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவ்வளவு சின்ன வயதிலேயே செலிபிரிட்டி வாழ்க்கைக்கு ராகா பழகியுள்ளதை பேசுபொருளாகியுள்ளது
#RahaKapoor's cutest 'hi' and flying kisses to the Paparazzi!#RanbirKapoor #AliaBhatt pic.twitter.com/6B859uCKcY
— Gulte (@GulteOfficial) December 27, 2024