மேலும் அறிய

Anbumani: கூட்டணி என்றால் வாயை மூட வேண்டுமா ? திருமாவளவனுக்கு அன்புமணி சரமாரி கேள்வி..

Anbumani Ramadoss: "ஆளுங்கட்சியை சார்ந்தவர்கள் குற்றச்செயலில் ஈடுபடுவதால் காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதில்லை என தெரிவித்தார்"

அடுத்த ஆண்டு வரவேற்க  தமிழ்நாடு புதுவை எல்லையில் பாமக சார்பில் பொதுக்குழு நடைபெற உள்ளது, தமிழக அரசுக்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேற்ற வாய்ப்புகள் இருக்கிறது அன்புமணி ராமதாஸ் பேட்டி.

அன்புமணி ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பு

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவிற்கு டெல்லி சென்று அஞ்சலி செலுத்திவிட்டு, சென்னை விமான நிலையம் வந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்பொழுது அவர் கூறியதாவது : இந்தியா தலைசிறந்த தலைவரை இழந்து இருக்கிறது, இந்தியாவில் 10 ஆண்டுகள் பிரதமராக பணியாற்றிய  டாக்டர் மன்மோகன் சிங்  எனக்கு ஐந்தாண்டு காலம் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஆக பணியாற்றுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த ஐந்தாண்டு காலமும் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து இந்தியாவை முன்னேற்றத்திற்காக எந்த திட்டத்தையும் கொண்டு வரலாம்.

108 ஆம்புலன்ஸ் திட்டம்:

நூறு விழுக்காடு சுதந்திரம் கொடுத்தார், என்னோடு துணையாக இருந்து, புகையிலை லாபி, மது லாபி  என அனைத்தையும் எதிர்த்து எனக்கு முழு பாதுகாப்பு கொடுத்து துணையாக இருந்தார்.‌ அவரால்தான் 108 ஆம்புலன்ஸ் திட்டம், பொது இடங்களில் புகை பிடிக்கக் கூடாது என்ற சட்டம், உணவு பாதுகாப்பு சட்டம் என பல சட்டங்களை கொண்டு வர முடிந்தது.

அடுத்த ஆண்டு வரவேற்க  தமிழ்நாடு புதுவை எல்லையில் பொதுக்குழு நடைபெற உள்ளது , தமிழக அரசுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்புகள் இருக்கிறது. காவல்துறை முதல்வருக்கு கீழே இயங்குகிறது, முதல்வருக்கு நேரமில்லை என்றால் இந்த துறையை வேறு ஏதேனும் அமைச்சருக்கு கொடுங்கள், தொடர்ந்து சட்ட ஒழுங்கு கெட்டுப் போய் இருக்கிறது.

இதையும் படிங்க: Dictator Stalin: ஹிட்லரை தாண்டி.. பெரும் கொலைகளை செய்த சர்வாதிகாரி, லட்சக்கணக்கில் குவிந்த பிணங்கள்..!

கஞ்சா விற்பனை: 

நீதிமன்ற வளாகத்தில் கொலை நடக்கிறது, மருத்துவமனையில் கத்தியால் குத்துகின்றனர், கல்லூரி வளாகத்தில் பாலியல் வன்கொடுமை நடைபெறுகிறது, கடந்த மூன்று ஆண்டுகளில் 6000 கொலைகள் நடைபெற்றிருக்கிறது, எனக்கு மிகப்பெரிய கவலை என்னவென்றால்  இந்தியாவில் மிகப்பெரிய சிறு தொழில் முதலில் இருக்கிறது அதுதான் கஞ்சா விற்பனை, தமிழக அரசு நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை, தஞ்சாவூர் பண்ணையில் முக்கிய குற்றவாளி யார் என்பதை கண்டறியவில்லை, ஆளுங்கட்சியை சார்ந்தவர்கள் குற்றச்செயலில் ஈடுபடுவதால் காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதில்லை என தெரிவித்தார்.

பல்கலைக்கழக மாணவி சர்ச்சை:

அண்ணாமலை சாட்டையால்  அடித்துக் கொண்டது தொடர்பான கேள்விக்கு, தமிழக மக்களின் கவனத்தையும் ஊடக கவனத்தையும் ஈர்ப்பதற்காக அப்படி செய்திருக்கலாம் என்று நினைக்கிறேன். பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக சிபிஐ விசாரணை செய்தால் நல்லது. பெண்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை, இது அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டுமில்லை அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை, பல்கலைக்கழக மாணவி தொடர்பாக நாளை பொது குழுவில் முடிவு எடுப்போம் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: Anna University Issue: பாதிக்கப்பட்ட மாணவியையே குற்றம்சாட்டுவதா? காவல்நிலையம் வரவே பயப்படும் சாமானியர்கள்- நீதிபதிகள் சரமாரிக் கேள்விகள்

பல்கலைக்கழக மாணவி சர்ச்சையை அரசியல் ஆக்காதீர்கள் என்று திருமாவளவன் கூறியது தொடர்பான கேள்விக்கு, கூட்டணி சென்றுவிட்டால் சுய தன்மையை இழந்து விட வேண்டுமா ?  இதைப் பற்றி பேசினால் தானே  மற்ற பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும், கூட்டணிக்கு சென்றால் அனைவரும் வாயை மூடிக்கொண்டு மௌனமாக இருக்க வேண்டுமா? என கேள்வி எழுப்பினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Anna University Issue: பாதிக்கப்பட்ட மாணவியையே குற்றம்சாட்டுவதா? காவல்நிலையம் வரவே பயப்படும் சாமானியர்கள்- நீதிபதிகள் சரமாரிக் கேள்விகள்
Anna University Issue: பாதிக்கப்பட்ட மாணவியையே குற்றம்சாட்டுவதா? காவல்நிலையம் வரவே பயப்படும் சாமானியர்கள்- நீதிபதிகள் சரமாரிக் கேள்விகள்
Nitish Reddy: குலசாமியே! மானத்தைக் காப்பாற்றிய நிதிஷ் செஞ்சுரி! கதறிய கங்காரு பாய்ஸ்!
Nitish Reddy: குலசாமியே! மானத்தைக் காப்பாற்றிய நிதிஷ் செஞ்சுரி! கதறிய கங்காரு பாய்ஸ்!
Top 10 News: குறைகிறதா தனிநபர் வரிச்சுமை? ரூ.152 கோடிக்கு மது விற்பனை -  டாப் 10 செய்திகள்
Top 10 News: குறைகிறதா தனிநபர் வரிச்சுமை? ரூ.152 கோடிக்கு மது விற்பனை - டாப் 10 செய்திகள்
ஷாக்! 43 லட்சம் செக் பவுன்ஸ் வழக்குகள்! தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை லட்சமா?
ஷாக்! 43 லட்சம் செக் பவுன்ஸ் வழக்குகள்! தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை லட்சமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anna University Issue: பாதிக்கப்பட்ட மாணவியையே குற்றம்சாட்டுவதா? காவல்நிலையம் வரவே பயப்படும் சாமானியர்கள்- நீதிபதிகள் சரமாரிக் கேள்விகள்
Anna University Issue: பாதிக்கப்பட்ட மாணவியையே குற்றம்சாட்டுவதா? காவல்நிலையம் வரவே பயப்படும் சாமானியர்கள்- நீதிபதிகள் சரமாரிக் கேள்விகள்
Nitish Reddy: குலசாமியே! மானத்தைக் காப்பாற்றிய நிதிஷ் செஞ்சுரி! கதறிய கங்காரு பாய்ஸ்!
Nitish Reddy: குலசாமியே! மானத்தைக் காப்பாற்றிய நிதிஷ் செஞ்சுரி! கதறிய கங்காரு பாய்ஸ்!
Top 10 News: குறைகிறதா தனிநபர் வரிச்சுமை? ரூ.152 கோடிக்கு மது விற்பனை -  டாப் 10 செய்திகள்
Top 10 News: குறைகிறதா தனிநபர் வரிச்சுமை? ரூ.152 கோடிக்கு மது விற்பனை - டாப் 10 செய்திகள்
ஷாக்! 43 லட்சம் செக் பவுன்ஸ் வழக்குகள்! தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை லட்சமா?
ஷாக்! 43 லட்சம் செக் பவுன்ஸ் வழக்குகள்! தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை லட்சமா?
Anna University Issue: மாணவிகள் செல்போனில் காவல் உதவி செயலி: கல்லூரிகள் உறுதிசெய்ய அமைச்சர் செழியன் உத்தரவு
Anna University Issue: மாணவிகள் செல்போனில் காவல் உதவி செயலி: கல்லூரிகள் உறுதிசெய்ய அமைச்சர் செழியன் உத்தரவு
Vijayakanth: ஆயிரக்கணக்கில் குவிந்த தொண்டர்கள்! ஸ்தம்பித்த போலீஸ்! தடையை மீறி தேமுதிக பிரம்மாண்ட பேரணி!
Vijayakanth: ஆயிரக்கணக்கில் குவிந்த தொண்டர்கள்! ஸ்தம்பித்த போலீஸ்! தடையை மீறி தேமுதிக பிரம்மாண்ட பேரணி!
Sleeping Tablets: தூக்க மாத்திரை பயன்படுத்துகிறீர்களா? உங்களுக்கு பெரிய ஆபத்து இருக்கு..! உடனே செய்ய வேண்டியவை..
Sleeping Tablets: தூக்க மாத்திரை பயன்படுத்துகிறீர்களா? உங்களுக்கு பெரிய ஆபத்து இருக்கு..! உடனே செய்ய வேண்டியவை..
இப்பவாது வருவீங்களா? அண்ணன் விஜயகாந்திற்கு நேரில் அஞ்சலி செலுத்துவாரா தம்பி விஜய்?
இப்பவாது வருவீங்களா? அண்ணன் விஜயகாந்திற்கு நேரில் அஞ்சலி செலுத்துவாரா தம்பி விஜய்?
Embed widget