SpaceX Starship booster: முதல்முறையாக செயல்பாட்டுக்கு வந்த ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்ஷிப் பூஸ்டர்.. புதிய சாதனை..
ஸ்பேஸ்எக்ஸின் சூப்பர் ஹெவி பூஸ்டரின் 33 ராப்டார் ராக்கெட் நேற்று சோதனை ஓட்டத்தின் போது முதல் முதலில் செயல்பாட்டிற்கு வந்தது.
ஸ்பேஸ்எக்ஸின் சூப்பர் ஹெவி பூஸ்டரின் 33 ராப்டார் ராக்கெட் நேற்று சோதனை ஓட்டத்தின் போது முதல் முதலில் செயல்பாட்டிற்கு வந்தது. இது வரவிருக்கும் மாதங்களில் அதன் முதல் சுற்றுப்பாதை விமானத்திற்கு மிக நெருக்கமாக கொண்டு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Views from drone of Booster 7's static fire test pic.twitter.com/KN4sk1nohf
— SpaceX (@SpaceX) February 9, 2023
சூப்பர் ஹெவி பூஸ்டரின் 33 ராப்டார் ராக்கெட் என்ஜின்களில் 31 என்ஜின்கள், ஸ்பேஸ்எக்ஸின் தெற்கு டெக்சாஸ் ராக்கெட் மையத்தில் சுமார் 10 வினாடிகள் செயல்படுத்தினர், சோதனைக்குப் பிறகு நிறுவனத்தின் தலைமை நிர்வாகி எலோன் மஸ்க் அதை பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்தார். 23-அடுக்கு உயர ராக்கெட், ஏவுகணை கோபுரத்தை ஒட்டிய மேடையில் (launch pad) செங்குத்தாக நிலைநிறுத்தப்பட்டது. இந்த ராக்கெட்டின் மேல்-நிலை ஸ்டார்ஷிப் விண்கலத்துடன் இணைக்கப்படும் போது, முழு வாகனமும் 394 அடி (120 மீட்டர்) உயரத்தில் உள்ள லிபர்ட்டி சிலையை விட உயரமாக இருக்கும் என கூறியுள்ளனர்.
செவ்வாய் கிரகத்திக் ஆதிக்கம் செலுத்தும் மஸ்க்கின் லட்சியங்களின் மையமாக இது அமைந்துள்ள்து. ஆனால் நாசாவின் மனிதனை நிலவுக்கு அனுப்பி ஆய்வு மேற்கொள்ளும் திட்டத்தில் முதலில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
மீண்டும் இது போன்ற சோதனை ஓட்டம் இருக்குமா என்பது பற்றி விஞ்ஞானிகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. டெக்சாஸிலிருந்து புறப்பட்டு ஹவாய் கடற்கரையில் தரையிறங்கும் மேலும் ஒரு சோதனையானது "அடுத்த மாதம் அல்லது அதனை தொடர்ந்து இருக்கும் என ஸ்பேஸ் எக்ஸ் தலைவர் க்வின் ஷாட்வெல் புதன்கிழமை தெரிவித்தார். இருப்பினும் சரியான தேதி நேற்று நடந்த சோதனையின் முடிவைப் பொறுத்தே இருக்கும் என்கின்றனர்.
இதற்கு முன் ஜூலை 2022 இதேபோன்ற சோதனை ஓட்டத்தில் என்ஜின்கள் தீ பிடித்து எரிந்தது. நேற்று 31 ராப்டார் என்ஜின்களின் சோதனையில், இதுவரை ஒரு ராக்கெட்டின் மூலம் தயாரிக்கப்பட்ட மிக அதிகமான உந்துதலுக்கு ஒரு புதிய சாதனையைப் படைத்ததுள்ளது என்றும், இது ரஷ்ய N1 க்கு 10.5 மில்லியன் பவுண்டுகளுடன் ஒப்பிடும்போது தோராயமாக 17 மில்லியன் பவுண்டுகள் மற்றும் நாசாவின் விண்வெளி ஏவுதள அமைப்புக்கு 8 மில்லியன் பவுண்டுகள் SLS ராக்கெட்டை விட அதிகம் என NASA Spaceflight இன் நேரடி ஒளிபரப்பு வர்ணனையாளர்கள் தெரிவித்தனர். N1 இன் 30 இன்ஜின்களை விட அதிக ராக்கெட் என்ஜின்கள் ஒரே நேரத்தில் செயல்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்டார்ஷிப்பின் மேம்பாட்டிற்கு NASAவிடமிருந்து $3 பில்லியன் ஒப்பந்தம் மூலம் நிதியளிக்கப்படுகிறது, இது அமெரிக்க விண்வெளி ஏஜென்சியின் பல பில்லியன் டாலர் ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் ஒரு பகுதிக்கு உதவுவதோடு, அடுத்த வரும் ஆண்டுகளில் SpaceX ராக்கெட்டைப் நாசா பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளனர். SLS மற்றும் ஸ்டார்ஷிப் ஆகியவை தற்போது ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் முன்னணியில் உள்ள இரண்டு விண்கலங்கள் ஆகும், இது செவ்வாய் கிரகத்தின் மனித ஆய்வுக்கு ஒரு படியாக சந்திரனில் நிரந்தர தளத்தை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று நாசா கூறியது.