Space X Rocket Launch: விண்ணில் சீறிப்பாய்ந்த ஸ்பேஸ்-எக்ஸ் ராக்கெட்.. பூமியின் மேற்பரப்பு நீரில் ஆய்வு.. இதுதான் முதல்முறை..
பூமியின் மேற்பரப்பு நீரின் ஆய்வை நடத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட யு.எஸ்-பிரெஞ்சு செயற்கைக்கோளை ஏற்றிக்கொண்டு ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் நேற்று அதிகாலை விண்ணில் செலுத்தப்பட்டது.
![Space X Rocket Launch: விண்ணில் சீறிப்பாய்ந்த ஸ்பேஸ்-எக்ஸ் ராக்கெட்.. பூமியின் மேற்பரப்பு நீரில் ஆய்வு.. இதுதான் முதல்முறை.. SpaceX rocket sends first global water survey mission into orbit carrying us french satellite Space X Rocket Launch: விண்ணில் சீறிப்பாய்ந்த ஸ்பேஸ்-எக்ஸ் ராக்கெட்.. பூமியின் மேற்பரப்பு நீரில் ஆய்வு.. இதுதான் முதல்முறை..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/17/2a8ea05739d77edf4b5099263d1145ab1671257230183589_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பூமியின் மேற்பரப்பு நீரின் ஆய்வை நடத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட யு.எஸ்-பிரெஞ்சு செயற்கைக்கோளை ஏற்றிக்கொண்டு ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் நேற்று அதிகாலை விண்ணில் செலுத்தப்பட்டது, இது காலநிலை மாற்றத்தின் இயக்கவியல் மற்றும் விளைவுகள் குறித்து புதிய விளகத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Liftoff! pic.twitter.com/BAvZSPaaw4
— SpaceX (@SpaceX) December 16, 2022
எலோன் மஸ்க்கின் வணிக ராக்கெட் நிறுவனத்திற்கு சொந்தமான பால்கன் 9 பூஸ்டர், லாஸ் ஏஞ்சல்ஸுக்கு வடமேற்கே சுமார் 160 மைல் (260 கிமீ) தொலைவில் உள்ள வாண்டன்பெர்க் விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. ஃபால்கன் 9 இன் மேல் நிலை, செயற்கைக்கோளை சுமந்து, ஒன்பது நிமிடங்களில் சுற்றுப்பாதையை அடைந்தது.
புவி வட்டார சுற்றுப்பாதை அடைவதற்கு சில நிமிடங்களுக்கு முன், மீண்டும் பயன்படுத்தக்கூடிய கீழ் நிலை, ராக்கெட்டில் இருந்து பிரிந்து பூமிக்கு மீண்டும் வந்தடைந்தது. அடிவாரத்தில் மெதுவாக தரையிறங்குவதற்கு முன் சோனிக் பூம்களை பயன்படுத்தியது. மேற்பரப்பு நீர் மற்றும் பெருங்கடல் நிலப்பரப்பு செயற்கைக்கோள் அல்லது SWOT, ஏவப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் சுமார் 530 மைல் (850 கிமீ) தொலைவில் அதன் சொந்த சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தபட்டது. ராக்கெட்டின் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் இது பதிவாகியுள்ளது.
சுமார் அரை மணி நேரம் கழித்து, பிரான்சின் துலூஸில் உள்ள பிரெஞ்சு விண்வெளி நிறுவனமான CNESக்கான பணிக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து செயற்கைக்கோளின் முதல் முழு சிக்னல்கள் கிடைத்து SWOT செயல்பாட்டில் உள்ளது என்பதை உறுதி செய்தது என நாசா கூறியது.
உலகின் 90%க்கும் மேலான கடல்கள், ஏரிகள், நீர்த்தேக்கங்கள் மற்றும் ஆறுகளின் உயர் வரையறை அளவீடுகளைச் சேகரிக்க, செயற்கைக்கோளின் மையப்பகுதி மேம்பட்ட மைக்ரோவேவ் ரேடார் தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு 21 நாட்களுக்கும் குறைந்தது இரண்டு முறை ரேடார் ஸ்வீப்பில் இருந்து தொகுக்கப்பட்ட தரவு பெறப்படும், இது கடல் சுழற்சி மாதிரிகளை மேம்படுத்தவும், வானிலை மற்றும் காலநிலை முன்னறிவிப்புகளை மேம்படுத்தவும் மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நன்னீர் விநியோகத்தை நிர்வகிப்பதற்கும் பயன்படுத்தப்படும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
வெப்பநிலையை ஒழுங்குபடுத்தவும், காலநிலை மாற்றத்தைக் குறைக்க உதவும் ஒரு செயல்பாடாக, வளிமண்டல வெப்பம் மற்றும் கார்பன் டை ஆக்சைடை கடல்கள் எவ்வாறு உறிஞ்சுகின்றன என்பதை ஆராய்வதே முக்கிய பணியாக இருக்கும். மனிதனின் செயல்பாடுகளால் ஏற்படும் கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வுகளால் பூமியின் வளிமண்டலத்தில் இருக்கும் 90% க்கும் அதிகமான வெப்பத்தை பெருங்கடல்கள் உறிஞ்சியுள்ளன என்பதே விஞ்ஞானிகளில் கூற்றாகும். பெருங்கடல்கள் அதிக அளவு வெப்பத்தை உறிஞ்சுவதற்குப் பதிலாக வளிமண்டலத்தில் அதனை வெளிப்படுத்துவதன் காரணம என்ன என்பதை முக்கியமாக இது கண்டுபிடிக்கும்.
இப்படி வெப்பததை வெளியிடுவதால், புவி வெப்பமடைவதை கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக தீவிரப்படுத்துகிறது. நன்னீர் உயிரிகள் தொடர்பான ஆராய்ச்சிகள் SWOT இன் மற்றொரு முக்கிய திட்டமாகும். இது 330 அடிக்கு (100 மீட்டர்) அதிகமான அனைத்து ஆறுகளின் முழு நீளத்தையும், அதே போல் 1 மில்லியனுக்கும் அதிகமான ஏரிகள் இருப்பதையும் கண்டறிந்து, கண்காணிக்கும் பணியை மேற்கொள்ளும்.
SWOT இன் ரேடார் கருவி மைக்ரோவேவ் ஸ்பெக்ட்ரமின் கா-பேண்ட் அலைவரிசையில் இயங்குகிறது, இதனால் கடும் மேக மூட்டம் மற்றும் இருளை ஊடுருவிச் சென்று தனது பணியை மேற்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)