NASA Spacewalk: நாசாவின் 257-வது விண்வெளி நடைப்பயணம்.. மின் திறனை அதிகரிக்க சோலார் பேனல் பொறுத்தப்பட்டது..
இரண்டு விண்வெளி வீரர்கள் இன்று 7 மணி நேர spacewalk மேற்கொண்டு சர்வதேச விண்வெளி நிலையத்தில் மின் திறனை அதிகரிக்க இரண்டு சோலார் பேனல்களை iROSAவில் பொறுத்தினர்.
இரண்டு விண்வெளி வீரர்கள் இன்று 7 மணி நேர spacewalk மேற்கொண்டு சர்வதேச விண்வெளி நிலையத்தில் மின் திறனை அதிகரிக்க இரண்டு சோலார் பேனல்களை iROSAவில் பதித்தனர். நாசா விண்வெளி வீரர்களான ஜோஷ் கசாடா மற்றும் ஃபிராங்க் ரூபியோ ஆகியோர் இந்த spacewalk மேற்கொண்டனர்.
.@NASA spacewalker Josh Cassada works on the roll-out solar array shortly before its deployment on the station's Port-4 truss segment. https://t.co/yuOTrZ4Jut pic.twitter.com/EW5zEuskmk
— International Space Station (@Space_Station) December 22, 2022
போர்ட் டிரஸ்ஸில் உள்ள 4A பவர் சேனலில் சோலார் பேனல் நிறுவப்பட்டுள்ளது இது மின் உற்பத்தி திறனை 30% வரை அதிகரிக்கும், மேலும் நிலையத்தின் மொத்த மின்சாரம் 160 கிலோவாட்டிலிருந்து 215 கிலோவாட் வரை அதிகரிக்கும். இந்த அதிகரித்த மின் திறன் அடுத்து 2030 வரை நாசா மேற்கொள்ளும் விண்வெளி திட்டதிற்கு உதவிகரமாக இருக்கும் என நம்பப்படுகிறது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் மேம்பாடுகள் மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக மேற்கொள்ளப்படும் spacewalkல் இது 257வது விண்வெளி நடைப்பயணம் ஆகும், மேலும் இரு விண்வெளி வீரர்களுக்கும் இது மூன்றாவது விண்வெளி நடைப்பயணமாகும்" என்று நாசா தெரிவித்துள்ளது. இரண்டு விண்வெளி வீரர்களும் திட்டமிடப்பட்ட ஆறு மாத அறிவியல் பயணத்தின் மத்தியில், விஞ்ஞான அறிவை மேம்படுத்தவும், எதிர்கால மனித மற்றும் ரோபோ ஆய்வுப் பணிகளுக்கான புதிய தொழில்நுட்பங்களை நிரூபிக்கவும் மைக்ரோ கிராவிட்டி ஆய்வகத்தில் பணிபுரிகின்றனர்.
இந்த நடைபயணம் ஒரு நாள் முன்னதாக நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தவிர்க்க முடியாத சூழல் காரணமாக இன்று ஒத்திவைக்கப்பட்டது. இன்று திட்டமிட்டப்படி நடக்கவில்லை என்றால் டிசம்பர் 27ஆம் தேதி நடத்த முடிவு செய்திருந்தனர்.
இதற்கு முன்னதாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) இரண்டு ரஷ்ய விண்வெளி வீரர்களின் விண்வெளி நடைபயணம் (spacewalk) ரத்து செய்யப்பட்டது. சோயுஸ் (soyus) விண்கலத்தில் இருந்து துகள்கள் வெளியேறுவதை விமானக் கட்டுப்பாட்டாளர்கள் கவனித்ததைத் தொடர்ந்து விண்வெளி நடைபயணம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.