Solar Eclipse 2022 : நிறைவடைந்தது சூரிய கிரகணம்...! கண்டுகளித்த மக்கள்...!
Solar Eclipse 2022 : இந்தியாவில் பகுதி நேர சூரிய கிரகணம் முடிவடைந்தது. சூரிய கிரணத்தை தொலைநோக்கு உதவியுடன் மக்கள் பார்த்து ரசித்தனர்.
Solar Eclipse 2022 : இந்தியாவில் பகுதி நேர சூரிய கிரகணம் முடிவடைந்தது. சூரிய கிரகணத்தை தொலைநோக்கு உதவியுடன் மக்கள் பார்த்து ரசித்தனர்.
சூரிய கிரகணம் ஒரு அரிய வானியல் நிகழ்வு. இந்த ஆண்டின் இரண்டாவது நிகழ்வான பகுதியளவு சூரிய கிரகணம் நிகழ்வு தற்போது நிறைவடைந்தது. இந்தியாவின் சில பகுதிகளில் இதைக் காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளில் தென்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திரன் சூரியனை முழுவதுமாக மறைத்து, அதன் கதிர்கள் பூமியில் படுவதைத் தடுக்கும் போது சூரிய கிரணம் ஏற்படுகிறது.
சூரிய கிரகணம்:
பூமியானது சூரியனைச் சுற்றிவரும் பாதையை உள்ளடக்கிய தளம் எக்லிப்டிக் தளம் என்றழைக்கப்படுகிறது. நிலவு பூமியை மற்றொரு சிறிய நீள்வட்டப்பாதையில் சுற்றிவருகிறது. ஆனால் பூமி சூரியனை சுற்றிவரும் தளத்தில் நிலவு பூமியைச் சுற்றுவதில்லை (சுமார் 5 டிகிரி சாய்கோணத்தில் சுற்றிவரும்).
எனவே ஒவ்வொரு சுற்றின் போதும் நிலவு எக்லிப்டிக் தளத்தை இருமுறை சந்திக்கும் சில நேரங்களில் பூமியையும் சூரியனையும் இணைக்கும் நேர்க்கோட்டில் நிலவு எக்லிப்டிக் தளத்தைக் கடக்கும்போது மட்டும் சூரிய கிரகணம் நிகழ்கிறது.
புது டெல்லி, ஜம்மு காஷ்மீர், ஒடிசா, புவனேஷ்வர், ஹரியானா, குருஷேத்ரா மற்றும் பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் பகுதியளவு சூரிய கிரகணம் தோன்றியது.
- புது டெல்லியில் மாலை 4.28 மணிக்கு தொடங்கிய சூரிய கிரகணம் 5.42 மணிக்கு முடிவடைந்தது.
#PartialSolarEclipse seen in the sky of Delhi
— ANI (@ANI) October 25, 2022
(Pic Source: Arjan Bedi) pic.twitter.com/Q8dDA7eyFq
- மும்பையில் மாலை 4.49 மணிக்கு தொடங்கிய சூரிய கிரகணம் மாலை 6.09 மணிக்கு முடிவடைந்தது.
- கொல்கத்தாவில் மாலை 4.51 மணிக்கு தொடங்கிய சூரிய கிரகணம் மாலை 5.04 மணிக்கு முடிவடைந்தது
- சென்னையில் மாலை 5.13 மணிக்கு தொடங்கிய சூரிய கிரகணம் மாலை 5.45 மணிக்கு முடிவடைந்தது.
#PartialSolarEclipse witnessed in Chennai, Tamil Nadu. pic.twitter.com/KrQ2bNjMX2
— ANI (@ANI) October 25, 2022
- பெங்களூருவில் மாலை 5.12 மணிக்கு தொடங்கிய சூரிய கிரகணம் மாலை 5.56 மணிக்கு முடிவடைந்தது.
#PartialSolarEclipse as seen in Bengaluru, Karnataka. pic.twitter.com/q9Wo5zZo1Q
— ANI (@ANI) October 25, 2022
ஐரோப்பாவின் சில பகுதிகளிலும், மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்காவின் வடகிழக்கு பகுதிகள், மேற்கு ஆசிய பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் பகுதியளவு சூரிய கிரகணம் தென்பட்டது. உலக அளவில் சூரிய கிரகணம் 14:19 (IST) மணிக்கு ஆரம்பித்து, 18:32 (IST) மணிக்கு முடிந்து என்பது குறிப்பிடத்தக்கது.