ஜெர்மனி: ரயில் மோதி விபத்து: அப்பளம்போல் நசுங்கிய கார் - இளம்பெண் உள்பட 3 பேர் பலி
ஜெர்மனியில் கார் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகினர். ஜெர்மனி நாட்டின் ஹனோவர் நகரில் இந்த விபத்து நடந்துள்ளது.
ஜெர்மனியில் கார் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகினர். ஜெர்மனி நாட்டின் ஹனோவர் நகரில் இந்த விபத்து நடந்துள்ளது.
ஞாயிரன்று அதிகாலை 4.50 மணிக்கு ஏ6 ஆட்டோபேன் பகுதிக்கு அருகே உள்ள நியூஸ்டாட் வடக்கு ரயில்வே கிராஸிங்கில் இந்த விபத்து நடந்தது. இந்த விபத்து தொடர்பாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், கார் மீது ரயில் முழு வேகத்தில் மோதியதால் கார் இழுத்துச் செல்லப்பட்டது. ரயில்வே லெவல் கிராஸிங்கில் தடுப்பு வேலி கீழே இறக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் அது முழுச் சாலையையும் கவர் செய்யாது என்பதால் அதன் வழியே கார் வேகமாக நுழைந்துள்ளது. விபத்தில் 24 வயது நிரம்பிய கார் ஓட்டுநர், அதே வயதுடைய இளம் பெண் ஒருவர் மற்றும் இளைஞர் ஒருவர் என மூன்று பேர் பலியாகினர். ரயிலில் இருந்த 42 பயணிகளில் ஒரே ஒருவருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. நிகழ்விடத்தில் மீட்புக் குழுவினர் குவிந்தனர்.
ரயில் கார் மீது மோதிய வேகத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் கார் பல மீட்டர் இழுத்துச் செல்லப்பட்டது. அதிலிருந்த இருக்கைகள் பல மீட்டர் தொலைவுக்கு தூக்கி வீசப்பட்டிருந்தனர். இதனால் அந்த ரயில் பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மீட்புக் குழுவினர் காரை அப்புறப்படுத்தினர். ரயில்வே ஊழியர்கள் டிராக்கை சரி பார்த்தனர். எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பரிசோதனை செய்த பின்னரே ரயில் புறப்படும் எனும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹனோவர் நீன்பெர்க் இடையேயான ரயில் போக்குவரத்து மதிய உணவு வேளைக்குப் பின்னரே சரியாகும் எனத் தெரிகிறது. அதேபோல் ஓல்டன்பெர்க் மற்றும் ஹனோவர் இடையேயான ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. பல ரயில்கள் ரத்தாகியுள்ளன.
தேசிய ரயில்வே துறையானது ஹனோவர் மற்றும் எம்டன் இடையேயான இன்டர்சிட்டி ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்படுவதால் அந்த ரயில்கள் தாமதமாக இயங்கலாம் என்று அறிவித்துள்ளது. ஜெர்மனி ரயில்வே நெட்வொர்க் சார்பில் தேசம் தழுவிய போராட்டம் நடந்த இரண்டு நாட்களில் இந்த விபத்து நடந்துள்ளது. வேலை நிறுத்தத்தால் ஏற்கெனவே 2 நாட்களில் ஆயிரக் கணக்கான ரயில் சேவைகள் முடங்கியிருந்தன.