Yemen Crisis: ஏமன் மீது சவுதி கூட்டுப்படை நடத்திய தாக்குதல்.. 1000-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பா?
ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள், ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபியில் உள்ள புதிய விமான நிலைய கட்டிடத்தில் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தினர்
ஏமனில் ஹவுத்தி கட்டுப்பாட்டுப் பகுதியில் நேற்று சவுதி கூட்டுப்படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 70 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஏமனில் சியா மற்றும் சன்னி முஸ்லீம்களிடையே நடைபெறும் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.சியா பிரிவு இசுலாமியப் போராளிகளுக்கு இரானும், சன்னிப் பிரிவு இசுலாமியப் போராளிகளுக்கு சவுதி அரேபியாவும் ஆதரவு அளித்து வருகின்றன.
இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை ஏமனில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள், ஐக்கிய அரபு அமீரகத் லைநகர் அபுதாபியில் உள்ள புதிய விமான நிலைய கட்டிடத்தில் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தினர். உயிரிழந்த மூன்று பேரில் இரண்டு பேர் இந்தியர்கள் எனவும், ஒருவர் பாகிஸ்தானியர் எனவும் உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, வட ஏமனில் ஹவுத்தி கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள சிறைச்சாலையில் நேற்று சவுதி கூட்டுப்படைகள் அதிரடி வான்வழித் தாக்குதலை நடத்தின. இந்த தாக்குதலில் மூன்று குழந்தைகள் உட்பட 70 பேர் உயிர் இழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. பலரும் படுகாயமடைந்துள்ளனர். எனவே, இறப்பின் எண்ணிக்கை மேலும் அதிகமாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.
BREAKING: The Saudi-led coalition just bombed a youth soccer game in Hodeida, Yemen, killing at least 2 children & injuring countless others. Despite the onslaught against Yemen, the US continues to sell weapons to Saudi. The bomb that just took innocent lives was likely US-made.
— CODEPINK (@codepink) January 20, 2022
இந்த தாக்குதலில், ஏமன் நாட்டின் இணைய தொடர்பு வசதி முற்றிலும் துண்டிக்கப்பட்டதாக NetBlocks அமைப்பு தெரிவித்துள்ளது.
⚠️ Confirmed: #Yemen is in the midst of a nation-scale Internet blackout following airstrike on telecom building in #Hudaydah; real-time network data show collapse of connectivity on leading provider; incident ongoing 📉 pic.twitter.com/ZM77WdUpwm
— NetBlocks (@netblocks) January 21, 2022
நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் மீட்புப் பணிகள் மேலும் தாமதமாகலாம் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
இதற்கிடையே, அபுதாபியில் உயிரிழந்த இரண்டு இந்தியர்களின் உடல்கள் இந்தியா கொண்டுவரப்பட்டது. பஞ்சாபில் உள்ள அவர்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து, இதையடுத்து, இரண்டு பேரின் உடல்களும் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்