Russia Ukraine War: ”உக்ரைன் நாட்டு அதிகாரத்தை ராணுவத்திடம் தர வேண்டும்” - ரஷ்ய அதிபர் புடின் திட்டவட்டம்
உக்ரைன் ராணுவம் சண்டையிடுவதை நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று ரஷ்யா திடீர் அறிவிப்பு வெளியிட்டது
உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேற்று அறிவித்தார். அவரின் அறிவிப்பைத் தொடர்ந்து உக்ரைன் தலைநகர் மீது, மற்ற சில பகுதிகளிலும் ரஷ்யா தாக்குதல் நடத்தியது ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனால் ஏராளமான சேதம் ஏற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்தியா இந்த விவகாரத்தில் நடுநிலை வகித்து வருகிறது.
உக்ரைன் ராணுவம் சண்டையிடுவதை நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று ரஷ்யா திடீர் அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பை ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கி லாவ்ரோவ் வெளியிட்டார். இந்நிலையில், ஆட்சி அதிகாரத்தை கையில் எடுக்குமாறு உக்ரைன் ராணுவத்தினருக்கு ரஷ்ய அதிபர் புடின் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். உக்ரைன் ராணுவம் அதிகாரத்தை கைப்பற்றும் நிலையில், பேச்சு வார்த்தை மூலம் எளிதான தீர்வை எட்ட முடியும் என அவர் தெரிவித்திருக்கிறார்.
Russian President Vladimir Putin to Ukrainian military- "Take power into your own hands": Reuters pic.twitter.com/JYdqmNTm4t
— ANI (@ANI) February 25, 2022
முன்னதாக, ரஷ்யப் பிரதமர் விளாடிமிர் புடினுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, வன்முறையை உடனடியாக நிறுத்தி, பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். மேலும் உக்ரைனில் இருந்து இந்தியக் குடிமக்களை உச்சபட்ச முக்கியத்துவம் கொடுத்து வெளியேற அனுமதிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துப் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''அனைத்துத் தரப்பில் இருந்தும் ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார். ரஷ்யா மற்றும் நேட்டோ இடையிலான முரண்பாடுகளை நேர்மையான பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்க முடியும். இந்த விவகாரத்தில் தலைவர்கள் தங்கள் அதிகாரிகள் மற்றும் இராஜதந்திரக் குழுக்கள் மூலம் பிரச்சினைகளைத் தொடர்ந்து பேசித் தீர்ப்பதாக ஒப்புக்கொண்டனர்'' என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்