Russia Seized Chernobyl: செர்னோபில் அணு உலையில் இருந்து பயங்கர கதிர்வீச்சு வெளியேறியதா?
உக்ரைன் அணு உலை நிறுவனம், செர்னோபில் அணு உலையில் இருந்து அதிக அளவில் கதிர்வீச்சு வெளியேறியது பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேற்று அறிவித்தார். அவரின் அறிவிப்பைத் தொடர்ந்து உக்ரைன் தலைநகர் மீது, மற்ற சில பகுதிகளிலும் ரஷ்யா தாக்குதல் நடத்தியது ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனால் ஏராளமான சேதம் ஏற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்தியா இந்த விவகாரத்தில் நடுநிலை வகித்து வருகிறது.
இந்நிலையில் செர்னோபில் அணு உலையை ரஷ்ய ராணுவம் நேற்று கைப்பற்றியது. அதனை அடுத்து, செர்ன்னோபில் அணு உலையில் இருந்து அதிக அளவில் கதிர்வீச்சு வெளியேறி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
Ukraine's nuclear agency said on Friday it was recording increased radiation levels from the site of the defunct Chernobyl nuclear power plant: Reuters
— ANI (@ANI) February 25, 2022
இன்று, உக்ரைன் அணு உலை நிறுவனம், செர்னோபில் அணு உலையில் இருந்து அதிக அளவில் கதிர்வீச்சு வெளியேறியது பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
The Chernobyl nuclear power plant has been captured by Russian forces, reports Reuters quoting an adviser to the Ukrainian presidential office, Mykhailo Podolyak
— ANI (@ANI) February 24, 2022
முன்னதாக, 1986 ஆம் ஆண்டு செர்னோபில் பேரழிவு நடந்தது. கெய்வ் நகருக்கு வடக்கே 130 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆலையில் உள்ள செர்னோபில் அணு உலை வெடித்து, ஐரோப்பா முழுவதும் கதிர்வீச்சை அதிக அளவில் அனுப்பியது. அப்போது சேதமடைந்த அணு உலையில் இருந்து கசிவைத் தடுக்க பல பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.