மேலும் அறிய

Watch video : உக்ரைன் - ரஷ்யா போர் : பதுங்கு குழியில் தமிழக மாணவர்கள் தஞ்சம்.. வெளியான அதிர்ச்சிகர வீடியோ!

உக்ரைன் பல்கலைக்கழகத்தின் அடித்தளத்தில் இந்திய மாணவர்கள் மறைந்திருக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேற்று அறிவித்தார். அவரின் அறிவிப்பைத் தொடர்ந்து உக்ரைன் தலைநகர் மீது, மற்ற சில பகுதிகளிலும் ரஷ்யா தாக்குதல் நடத்தியது ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனால் ஏராளமான சேதம் ஏற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்தியா இந்த விவகாரத்தில் நடுநிலை வகித்து வருகிறது. 

இந்தநிலையில், உக்ரைனில் சிக்கி தவித்து வரும் இந்தியர்களை மீட்க அதிகாரிகளை நியமனம் செய்தது வெளியுறவுத்துறை அமைச்சகம். உக்ரைன் எல்லை நாடுகளான ஹங்கேரி,போலந்து மூலம் இந்தியர்களை மீட்க ஏற்பாடு செய்து வருகிறது. மேலும், 200க்கு மேற்பட்ட இந்திய மாணவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கபட்டுள்ளதாக இந்திய தூதரகம் தகவல் தெரிவித்தது. 

இந்தசூழலில், தற்போது உக்ரைன் பல்கலைக்கழகத்தின் அடித்தளத்தில்  இந்திய மாணவர்கள் மறைந்திருக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை இம்ரான் சோலங்கி என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், உக்ரைனின் கார்கிவ் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தின் அடித்தளத்தில் இந்திய மாணவர்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். உணவு, பணம், அத்தியாவசிய பொருட்கள் தீர்ந்து போவதால் அவர்கள் கவலையடைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார். மேலும், பாரத பிரதமர் மோடி அவர்களே, 18000 இந்தியர்களில் பலர் மாணவர்கள், இன்னும் உக்ரைனில் சிக்கி தவித்து வருகின்றனர். அவர்கள் அனைவரும்  பாதுகாப்பாக இருக்க பிரார்த்தனை செய்யுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைன் மீது குண்டு மழை பொழியும் வீடியோக்களும், அதிரும் கட்டிடங்களின் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், ரஷ்ய படையெடுப்பில் இதுவரை 10 இராணுவ அதிகாரிகள் உட்பட 137 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 316 பேர் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார். 

நேற்றைய தாக்குதலை தொடர்ந்து தற்போது ரஷ்யா, உக்ரைனில் 2வது நாள் தாக்குதலை தொடங்கியுள்ளது. இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ISRO BlueBird: இன்று விண்ணில் பறக்கிறது பாகுபலி ராக்கெட் - டவரே இல்லாமல் சிக்னல் - ப்ளூபேர்டின் இலக்கு என்ன?
ISRO BlueBird: இன்று விண்ணில் பறக்கிறது பாகுபலி ராக்கெட் - டவரே இல்லாமல் சிக்னல் - ப்ளூபேர்டின் இலக்கு என்ன?
JanaNayagan Vs Parasakthi: எஸ்கேப் ஆன சூர்யா, சிக்கித் தவிக்கும் SK? கையில் துப்பாக்கி, பாடாய்படுத்தும் பராசக்தி?
JanaNayagan Vs Parasakthi: எஸ்கேப் ஆன சூர்யா, சிக்கித் தவிக்கும் SK? கையில் துப்பாக்கி, பாடாய்படுத்தும் பராசக்தி?
TVK Vijay: விஜய்க்கு முதல் ஆளாய் போன் அடித்த ராகுல் காந்தி.. என்ன சொன்னார்? போட்டுடைத்த ஆதவ் அர்ஜுனா
TVK Vijay: விஜய்க்கு முதல் ஆளாய் போன் அடித்த ராகுல் காந்தி.. என்ன சொன்னார்? போட்டுடைத்த ஆதவ் அர்ஜுனா
Lalit Modi Vijay Mallya:
"நாங்கள் மிகப்பெரிய தப்பியோடியவர்கள்" இந்தியாவை கேலி செய்து லலித் மோடி, விஜய் மல்லையா வீடியோ
ABP Premium

வீடியோ

Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக
ஆதவ் அர்ஜூனாவுடன் ஒரே மேடையில் காங்கிரஸ் கட்சியினர்! கூட்டணிக்கான அச்சாரமா?
விஜய் சொன்னது பொய் கதை?”மக்களை அடிமையாக்கிய ஜோசப்” சர்ச்சையான KUTTY STORY உண்மை இதுதான்? | Christmas TVK Vijay Speech |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ISRO BlueBird: இன்று விண்ணில் பறக்கிறது பாகுபலி ராக்கெட் - டவரே இல்லாமல் சிக்னல் - ப்ளூபேர்டின் இலக்கு என்ன?
ISRO BlueBird: இன்று விண்ணில் பறக்கிறது பாகுபலி ராக்கெட் - டவரே இல்லாமல் சிக்னல் - ப்ளூபேர்டின் இலக்கு என்ன?
JanaNayagan Vs Parasakthi: எஸ்கேப் ஆன சூர்யா, சிக்கித் தவிக்கும் SK? கையில் துப்பாக்கி, பாடாய்படுத்தும் பராசக்தி?
JanaNayagan Vs Parasakthi: எஸ்கேப் ஆன சூர்யா, சிக்கித் தவிக்கும் SK? கையில் துப்பாக்கி, பாடாய்படுத்தும் பராசக்தி?
TVK Vijay: விஜய்க்கு முதல் ஆளாய் போன் அடித்த ராகுல் காந்தி.. என்ன சொன்னார்? போட்டுடைத்த ஆதவ் அர்ஜுனா
TVK Vijay: விஜய்க்கு முதல் ஆளாய் போன் அடித்த ராகுல் காந்தி.. என்ன சொன்னார்? போட்டுடைத்த ஆதவ் அர்ஜுனா
Lalit Modi Vijay Mallya:
"நாங்கள் மிகப்பெரிய தப்பியோடியவர்கள்" இந்தியாவை கேலி செய்து லலித் மோடி, விஜய் மல்லையா வீடியோ
Trump Epstein Files: புதிய எப்ஸ்டீன் கோப்புகள்; ட்ரம்ப் மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு; நீதித்துறை சொல்வது என்ன.?
புதிய எப்ஸ்டீன் கோப்புகள்; ட்ரம்ப் மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு; நீதித்துறை சொல்வது என்ன.?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
Embed widget