Russia Ukraine War: ரஷ்ய போரால் 3.68 லட்சம் பேர் அகதிகளாகினர் : ஐ.நா அதிர்ச்சி தகவல்
ரஷ்ய போரால் 3.68 லட்சம் பேர் அகதிகளாக மாறியுள்ளனர் என்று ஐ.நா அவை அதிர்ச்சிகர தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
உக்ரைன் நாட்டில் ரஷ்ய படைகள் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் தலைநகர் கிவ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல பாதிப்பு ஏற்பட்டுள்ளன. அங்கு பயணிகள் விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அங்கு நேற்று முதல் இணையதள சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்ய படையெடுப்பால் உக்ரைனில் இருந்து கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் வெளியேறி அண்டை நாடுகளான போலந்து, மால்டோவா போன்ற நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். இதனால் 3.68 லட்சம் பேர் அகதிகளாக மாறியுள்ளனர் என்று ஐ.நா அவை அதிர்ச்சிகர தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
முன்னதாக இன்று காலை ரஷ்ய படைகள் உக்ரைன் நாட்டின் இரண்டு பெரிய நகரங்களை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாக கூறப்பட்டது.
The sad reality is humanity hasn't changed one bit. I thought we were better than war, but it turns out Hitler was still alive and kicking. Shame on you Putin.. I always believed in all lives matter, but sorry you need to go. You deserve the death penalty #PutinHitler #Ukraine pic.twitter.com/8EbK8xHhzz
— Andre Willemse (@andrewillemse18) February 27, 2022
ரஷ்யா-உக்ரைன் பிரச்னை என்ன?
உக்ரைன் நாடு 1991ஆம் ஆண்டு ரஷ்யாவிடம் இருந்து சுதந்திரம் பெற்றது. அதன்பின்னர் தொடர்ந்து அங்கு உக்ரைன் நாட்டு அரசிற்கு எதிராக அவ்வப்போது கிளர்ச்சியாளர்கள் இருந்து வந்தனர். எனினும் தொடர்ந்து அங்கு ரஷ்யாவின் தலையீடு இருந்து கொண்டே வந்தது. 2005ஆம் ஆண்டு அந்நாட்டின் அதிபராக வந்த விக்டர் யெஸ்சென்கோ ரஷ்யாவின் தலையீடுகளிலிருந்து உக்ரைன் நாட்டை முழுவதும் விடுபட வைப்பதாக கூறினார். 2010ஆம் ஆண்டு ரஷ்யா-உக்ரைன் இடையே ஒரு எரிவாயு ஒப்பந்தம் கையெழுத்தானது.
2013ஆம் ஆண்டு ரஷ்யா நாட்டு உடனான பொருளாதார வர்த்தகத்தை உக்ரைன் நாட்டு அதிபர் நிறுத்தினார். இதன்காரணமாக அங்கு தெற்கு பகுதியில் கடும் கிளர்ச்சி உருவானது. இதைத் தொடர்ந்து நாட்டின் தெற்கு பகுதியான கிரீமியாவை 2014ஆம் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர் ஆக்கிரமித்து ரஷ்ய கொடியை ஏற்றினர். அதன்பின்னர் கிரீமியா ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் ரஷ்ய ஆதரவாளார்கள் அதிகம் உள்ளனர். அந்தப் பகுதியில் உக்ரைன் நாட்டு அரசு அமைதியை சீர்குலைக்கும் விதகமாக கடந்த சில மாதங்களாக நடந்து வருவதாக ரஷ்ய குற்றம் சாட்டி வருகிறது. இதற்கு காரணம் கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உக்ரைன் நாட்டின் கிழக்குப் பகுதியில் அந்நாட்டு அரசு ஒரு டிரோனை பயன்படுத்தியது. இது தான் தற்போது இரு நாடுகளுக்கும் இடையே போர் மூழும் சூழல் உருவாக தொடக்க புள்ளியாக அமைந்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்