Russia Ukraine War: ரஷ்யாவின் பாதையில் குறுக்கே யார் வந்தாலும் வரலாறு காணாத அழிவு உறுதி...! புதின் எச்சரிக்கை
Russia Ukraine War: உக்ரைன் மீது தொடுத்துள்ள போரில் யார் குறுக்கே வந்தாலும் வரலாறு காணாத அழிவைச் சந்திப்பார்கள் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா தீவிரமாக வெடிகுண்டு மழையை பொழிந்து வருகிறது. அந்த நாட்டின் முக்கிய நகரங்களில் ரஷ்யா ராணுவப்படையினர் நுழைந்துள்ள சூழலில், ரஷ்யாவிற்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், ரஷ்யா உக்ரைன் மீது தொடுக்கப்பட்டது போர் அல்ல. சிறப்பு ராணுவ நடவடிக்கை ஆகும் என்று ரஷ்யா புது விளக்கம் கொடுத்துள்ளது.
மேலும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ரஷ்யாவின் குறுக்கே யார் வந்தாலும் அவர்கள் வரலாறு காணாத அழிவைச் சந்திப்பார்கள் என்று எச்சரித்துள்ளார். மேலும், எங்களுக்கு வாழ்வா? சாவா? போர் என்ற நிலையில் இந்த போர் நடக்கிறது என்றும் ரஷ்ய அதிபர் புதின் பேசியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியுள்ளதால் உலகம் முழுவதும் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை 100 டாலரை கடந்துள்ளது. இந்தியாவில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.