Queen Elizabeth II Funeral: ராணியின் இறுதிச்சடங்கு 'ஆபரேஷன் யூனிகார்ன்'.! தயாராகும் அதிகாரிகள்! இறுதி ஊர்வல விவரம்!
ராணி இரண்டாம் எலிசபெத் கோட்டையின் கிங் ஜார்ஜ் VI நினைவு தேவாலயத்தில் அடக்கம் செய்யப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டின் மகாராணி எலிசபெத் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். இதையடுத்து அவரது மறைவிற்கு உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். உலகின் நீண்டகாலம் ராணியாக ஆட்சி செய்த பெருமைக்குரிய இரண்டாவது நபர் என்ற பெருமைக்கு ராணி எலிசபெத் சொந்தக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆபரேஷன் யூனிகார்ன் :
ஸ்காட்லாந்தின் பால்மோரலில் ராணி இரண்டாம் எலிசபெத் இறந்ததைத் தொடர்ந்து பிரிட்டிஷ் அரசாங்கத்தின் "ஆபரேஷன் யூனிகார்ன்" நடந்து வருகிறது.
ராணியின் மரணம் மற்றும் இறுதிச் சடங்கிற்கு இடையேயான முதல் 10 நாட்களில் நிகழ்வுகளை நிர்வகிக்க இங்கிலாந்து அதிகாரிகள் ”ஆபரேஷன் பிரிட்ஜ்” என பெயர் வைத்திருந்தனர். ஆனால், இங்கிலாந்து ராணி ஸ்காட்லாந்தில் இறந்ததால் தற்போது ”ஆபரேஷன் யூனிகார்ன்” பெயரை மாற்றியுள்ளனர்.
ஆபரேஷன் யூனிகார்ன் என்பது ராணி இரண்டாம் எலிசபெத் இறந்தநாளில் இருந்து அடுத்த 10 நாட்களுக்கு நடைமுறைபடுத்தப்படும் திட்டமாகும். அதன்படி, இன்று மறைந்த இங்கிலாந்து ராணியின் உடல் லண்டனுக்கு திரும்ப இருக்கிறது. தி பொலிட்டிகோ பார்த்த ஆவணங்களின்படி, நேற்று " டி நாள்" என்று அறிவிக்கப்படும், மேலும் இறுதிச் சடங்கிற்கு முதல் நாளுக்கு ஒவ்வொரு நாள் அதாவது 10வது நாள் வரை "D+1," "D+2" என்று குறிப்பிடப்படும்.
A statement from His Majesty The King: pic.twitter.com/AnBiyZCher
— The Royal Family (@RoyalFamily) September 8, 2022
பொலிட்டிகோ பார்த்த ஆவணங்களின்படி, அரச குடும்பம் அடுத்ததாக ராணியின் இறுதிச் சடங்கிற்கான திட்டங்களை அறிவிக்கும். ராணி இறந்த பத்து நாட்களுக்குப் பிறகு, புதிதாக நியமிக்கப்பட்ட இங்கிலாந்து பிரதமர் லிஸ் ட்ரஸ் ஒரு அறிக்கையை வெளியிடும் அரசாங்கத்தின் முதல் உறுப்பினராக இருப்பார்.
பிரதமர் மற்றும் அரசாங்கத்தின் மற்ற உறுப்பினர்களின் அறிக்கையைத் தவிர, பிற முக்கிய இடங்களில் துப்பாக்கி முழங்க மரியாதை செலுத்தப்பட இருக்கிறது. அரசு இறுதி சடங்கு வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் என்றும், வின்ட்சர் கோட்டையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் பிற அரசாங்க மரியாதைகள் நடைபெறும் என்றும் தெரிகிறது.
அதன் பிறகு, ராணி இரண்டாம் எலிசபெத் கோட்டையின் கிங் ஜார்ஜ் VI நினைவு தேவாலயத்தில் அடக்கம் செய்யப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணி இரண்டாம் எலிசபெத் :
ராணி இரண்டாம் எலிசபெத் ஏப்ரல் 21, 1926 அன்று லண்டனில் உள்ள மேஃபேரில் உள்ள 17 புருடன் தெருவில் பிறந்தார். விக்டோிய மகாராணி 63 ஆண்டுகள் ராணியாக அலங்கரித்த ராணி மகுடத்தை, ராணி எலிசபெத் 70 ஆண்டுகள் அலங்கரித்துள்ளார். அவர் கடந்த 1947ம் ஆண்டு மறைந்த மன்னர் பிலிப்பை திருமணம் செய்து கொண்டார். புகழ்பெற்ற பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் முதல் தற்போதைய இங்கிலாந்து பிரதமர் லிஸ் ட்ரஸ் வரை சுமார் 15 இங்கிலாந்து பிரதமர்களை மகாராணி எலிசபெத் நியமித்துள்ளார்.
எலிசபத் மகாராணி வரலாறு:
உலகையே உள்ளங்கையில் வைத்து ஆட்சி செய்த பெயர் இங்கிலாந்துக்கு உண்டு. அந்த நாட்டிற்கு 70 ஆண்டுகளாக ராஜ மாதாவாக இருப்பவர் தான் இரண்டாம் எலிசபத் மகாராணி. ஜனநாயகம் தழைத்தோங்கும் காலத்திலும் இங்கிலாந்து ராஜ குடும்பம் மட்டும் வசீகரம் குறையாமல் அப்படியே இருக்கிறது. இதற்கு இரண்டாம் எலிசபத் ராணியின் புரட்சிகளும் காரணம் தான். ராஜா, ராணி மட்டுமே வரி வசூலித்த காலம் போய், அரசாங்கத்திற்கு ராஜ குடும்பம் வரி செலுத்தும் முறையையும் நடைமுறைப்படுத்தினார் இரண்டாம் எலிசபத் ராணி. அதுமட்டுமல்ல தனது மாளிகைக்கு உட்பட்ட பகுதியை தனி நாடாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வந்தபோதும் கூட அதை பொது வாக்கெடுப்பு மூலம் எதிர்கொண்டு சர்வதேச கவனத்தைப் பெற்றார். உணையில் இங்கிலாந்தின் ராணி இரண்டாம் எலிசபத்துக்கு வானளாவிய அதிகாரங்கள் இருந்தும் கூட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக ஆட்சிக்கு தலை வணங்கி வாழ்ந்து வருபவர் எலிசபத் ராணி. எல்லோரையும் ஜனநாயகப்படுத்தும் அவரது அணுகுமுறைக்கு ஜனநாயக நாடுகளிலும் வரவேற்பு உண்டு.