Vladimir Putin: ரஷ்ய அதிபருக்கு கேன்சர்!? பதவி விலகும் விளாடிமிர் புதின்?! அடுத்த அதிபர் யார்?
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இதனால் சில நாட்கள் பதவிலியிருந்து விலகி, சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இதனால் சில நாட்கள் பதவியிலிருந்து விலகி, சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா , பல மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது.இதனால் உக்ரைன் நாடு மிகுந்த பாதிப்படைந்துள்ளது.இப்பாதிப்பில் இருந்து எப்பொழுது மீண்டும் வருவோம் என்று உக்ரைன் மக்கள் கவலையில் உள்ளனர்.
இந்நிலையில் போர் தொடர்பான செய்திகளை விட ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் உடல்நிலை குறித்த செய்திகள் அதிகம் பரவி வருகிறது.புதின் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் , இதனால் சில நாட்கள் சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் சிகிச்சையின் போது அதிபரின் பதவியை, புதினின் நம்பிக்கை உரியவரான, அந்நாட்டு பாதுகாப்பு கவுன்சில் செயலாளரான நிகோலாய் பட்ருஷேவிடம் தற்காலிகாமாக ஒப்படைக்க வாய்ப்பு உள்ளதாக அமெரிக்காவின் நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டு உள்ளது. ஆனால் இந்த தகவலை உறுதியாக கூறவில்லை. புதின் கட்டாயமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறியாக டெலிகிராம் சேனலை மேற்கோள் காட்டி, ANI செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
சமீப காலங்களாக புதின் நோய் தாக்கியது போன்ற தோற்றத்தில் உள்ளதாக குறிப்பிட்டுள்ள நியூயார்க் போஸ்ட், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், மேலும் சில கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளதாக செய்தி வெளியிட்டது .இந்நிலையில் புதின் நோயால் பாதிக்கப்பட்டது குறித்த தகவலை உறுதிப்படுத்தவில்லை என பெண்டகன் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அதிபராக வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் புதினின் நம்பிக்கைக்கு உரிய கூட்டாளியான நிகோலாய் பட்ருஷேவ் குறித்து கருத்து தெரிவித்துள்ள டெலிகிராம் சேனலின் உரிமையாளர், பட்ருஷேவ் மிகுந்த மோசமானவர் என்றும் புதினை விட சிறப்பானவர் இல்லை என்றும் புதினைவிட நயவஞ்சகமானவர் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் அதிபரானால் ரஷ்ய மக்களின் பிரச்னை அதிகரிக்கும் என்றும் உக்ரைன் தொடர்பான பிரச்னை மோசமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ரஷ்ய அதிபர் பதவியை கை மாற்றினால், அந்த நாட்களில் உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் எப்படி இருக்கும், ரஷ்யாவில் எவ்வாறு நிர்வாகம் செய்லபடும், அமெரிக்கா இது போன்ற தருணங்களில், ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விகள் மக்களிடம் கேள்வி எழுந்துள்ளது
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்