Phaethon Asteroid : பூமியை நோக்கி வேகமாக வரும் ’ஃபேத்தான்’ சிறுகோள்.. விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
வெகு நாட்களாகவே இது ஆபத்தான கோளாக கருதப்படுவதால் இதனை டெஸ்டினி+ தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது.
விண்வெளியில் உள்ள பைத்தான் என்னும் சிறுகோள் பூமியை நோக்கி வேகமாக வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
விண்வெளி கேலக்ஸிகள் , பாறைகள் , நட்சத்திரங்கள் என சூழப்பட்ட ஒரு ஆச்சர்யமான இடம். இதில் சூரிய குடும்பத்தை சுற்றி ஏராளமான கோள்களும் , வால் நட்சத்திரங்களும் , சிறு கோள்களும் , துணைக்கோள்களும் உள்ளன. குறிப்பாக வியாழனை சுற்றி வளைய வடிவில் நிறைய சிறு கோள்களை பார்க்க முடியும் . சூரியனில் ஏற்பட்ட வெடிப்பால் உண்டானை பாறைகள் போன்ற அமைப்புதான் இந்த சிறுகோள்கள் . வெண்வெளியில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கும் அதிகமான சிறுகோள்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
Asteroid 3200 Phaethon. What‘s all the fuss about? Read the article: https://t.co/H9UQKFewhG pic.twitter.com/jcSXUrYEw5
— Asteroid Day ☄ (@AsteroidDay) November 25, 2017
அப்படியான சிறு கோள்களுள் ஒன்றுதான் ஃபேத்தான். கிரேக்க புராணங்களில் சூரியக் கடவுளான ஹீலியோஸின் மகன் பைத்தான் என்பதால் , இந்த கோள் சூரியனில் இருந்து உருவானதால் விஞ்ஞானிகள் இந்த பெயரை வைத்திருக்கின்றனர். இந்த பைத்தான் சிறுகோள் 6 கிமீ நீளமுள்ள ராட்சத சிறுகோள். அதன் சுற்றுப்பாதை, அதை அவ்வப்போது சூரியனுக்கு அருகில் கொண்டு வருவதால் இது வானியலாளர்களால் 'ஆபத்தானதாக' கருதப்படுகிறது. சமீப நாட்களாக இந்த கோளின் சுழற்சி வேகம் விசித்திரமாக அதிகரித்து வருகிறது. ஃபேத்தான் விசித்திரமாக நடந்து கொள்வது இது முதல் முறை அல்ல. உண்மையில், சிறுகோள் விசித்திரமான குணாதிசயங்களைக் கொண்டுள்ளது, ஏனெனில் அதன் சுற்றுப்பாதை (விண்வெளியில் இடப்பெயர்ச்சியின் வளைவு) ஒரு வால்மீனை ஒத்திருக்கிறது, எனவே அதனை 'பாறை வால்மீன்'. என்றும் அழைக்கின்றனர்.
Astronomers have discovered that the active #asteroid 3200 Phaethon has a variable rotation period. It will be the target of the future DESTINY+ mission by @JAXA_jp. See more details in this @SPACEdotcom article:https://t.co/vFQS9EwCD1 pic.twitter.com/bK9SyhPdsY
— Asteroid Day ☄ (@AsteroidDay) October 25, 2022
வெகு நாட்களாகவே இது ஆபத்தான கோளாக கருதப்படுவதால் இதனை டெஸ்டினி+ தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. எப்போதும் ஃபேத்தான் பிரகாசமானதாக காணப்பட்ட இடங்களில் அது உண்மையிலேயே பிரகாசமாக இல்லை. ஏனென்றால் அதன் சுழற்சி வேகத்தில் மாறுபாடு ஏற்பட்டுள்ளது. ஃபேத்தான் அதன் சுழற்சி வேகத்தை வருடத்திற்கு நான்கு மில்லி விநாடிகள் அதிகரிக்கிறது. இந்த ராட்சத சிறுகோளானது வருகிற 2028-ம் ஆண்டில் பூமிக்கு மிக அருகில் வர இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். எனவே இது குறித்த தீவிர ஆராய்ச்சியை அவர்கள் முன்னெடுத்துள்ளனர்.