இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை பிரதமர் மோடி சந்திக்க வாய்ப்பு-எங்கே.. எப்போது தெரியுமா..?
பாலியில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டில் இங்கிலாந்தின் புதிய பிரதமரான ரிஷி சுனக்கை பிரதமர் மோடி சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாலியில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டில் இங்கிலாந்தின் புதிய பிரதமரான ரிஷி சுனக்கை பிரதமர் மோடி சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இங்கிலாந்தின் பிரதமரான லிஸ் டிரஸ் 44 நாட்களில் பதவியைவிட்டு விலகிய நிலையில், புதிய பிரதமராக ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், பாலியில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டில் முதல் முறையாக பிரதமர் மோடியும், இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ரிஷி சுனக்கும் சந்திக்கவுள்ளனர்.
இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான முக்கிய முடிவு இரு தலைவர்களுக்கு இடையேயான சந்திப்பைத் தொடர்ந்து உத்வேகம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 20ம் தேதி பிரிட்டன் பிரதமர் பதவியிலிருந்து லிஸ் டிரஸ் (Liz Truss) தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அடுத்த பிரதமர் பதவிக்கு யார் வருவார்? என்று எதிர்பார்ப்பு எழுந்து வந்த நிலையில், முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகின.
இந்நிலையில், பிரதமர் பதவிக்கு ரிஷி சுனக் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். பிரிட்டன் பிரதமருக்கான போட்டியில் இருந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் திடீரென விலகியதை அடுத்து, புதிய பிரதமராக ரிஷி சுனக் வருவது உறுதியானது.
இதையடுத்து, லிஸ் டிரஸ் ராஜினாமா செய்ததை தொடர்ந்து அடுத்த பிரதமராகும் போட்டியில் பிரிட்டன் நாடாளுமன்றத்தின் கீழ் சபை தலைவர் பென்னி மோர்டான்ட் குதித்தார். ஆனால், அவரால் தகுந்த ஆதரவை பெற முடியாத சூழ் நிலவியது. பிரிட்டன் பிரதமராவதற்கு 100 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இந்நிலையில் ரிஷி சுனக்கிற்கு 142 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தது.
கோடை காலத்தில் நடைபெற்ற பிரிட்டன் பிரதமர் பதவிக்கான போட்டியில் லிஸ் டிரஸிடம் ரிஷி சுனக் தோல்வி அடைந்தார். ஆனால், கொடுக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்ற முடியாததால் லிஸ் டிரஸ் பிரதமர் பதவியில் இருந்து விலகினார். இதனை தொடர்ந்து, பிரதமர் பதவிக்கான போட்டியில் ரிஷி சுனக் மீண்டும் நுழைந்துள்ளார்.
பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதாக நேற்று அறிவித்த இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி, "நமது பொருளாதாரத்தை சரிசெய்யவும், எங்கள் கட்சியை ஒன்றிணைக்கவும், நம் நாட்டுக்கு சிறப்பான ஆட்சியை வழங்கவும் விரும்புகிறேன்" என்றார்.
கரீபியன் தீவுகளில் விடுமுறையை கழித்து வந்த போரிஸ் ஜான்சன், பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதற்காக விடுமுறையில் இருந்து பாதியிலேயே பிரிட்டனுக்கு திரும்பினார். 100 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஆதரவை பெறுவதற்காக அவர் முயற்சி மேற்கொண்டார். ஆனால், திடீரென அதிலிருந்து விலகினார்.
தன்னால் நாடாளுமன்றத்தில் கன்சர்வேட்டிவ் கட்சியை ஒருங்கிணைத்து வழிநடத்த முடியாது என போரிஸ் தெரிவித்திருந்தார். இதுகுறித்து விரிவாக பேசியிருந்த அவர், "என்னால் பிரதமராக வந்திருக்க முடியும். ஆனால், சுனக்கையும் பென்னி மோர்டான்டையும் தேசிய நலனுக்காக ஒன்றுசேர்க்கத் தவறிவிட்டேன். நான் நிறைய வழங்க வேண்டும் என்று நம்புகிறேன். ஆனால், இது சரியான நேரம் அல்ல என்று நான் பயப்படுகிறேன்" என்றார்.
பிரதமர் போட்டியில் இருந்து போரிஸ் விலகியது குறித்து ரிஷி சுனக் தனது ட்விட்டர் பக்கத்தில், "பிரெக்சிட், கொரோனா தடுப்பூசியை வழங்குதல் மற்றும் உக்ரைனில் நடந்த போர் உள்ளிட்ட சில கடினமான சவால்களுக்கு மத்தியிலும் நாட்டை வழிநடத்தியதற்காக போரிஸ் ஜான்சனை பாராட்ட விரும்புகிறேன்.
Also Read | Traffic Rules Fine: அன்று அவ்வளவு.. இன்று இவ்வளவு.. புதிய கட்டண விதிமுறைகளும், அபராதமும்.. முழு விவரம்!