என்னது ஏரோபிளேன் ‛ஸ்கிட்’ ஆச்சா... நம்ம ஊரு ரோடு பரவாயில்லையே!
நம்ம ஊரு ரோடு தான் மோசம்னு பார்த்தா... லண்டன் ரோடு(ரன் வே) அதை விட மோசமா இருக்கம்போல என்றெல்லாம் மீம்ஸ் போட ஆரம்பிச்சுட்டாங்க.
லண்டன் ஹீத்ரோ சர்வதேச விமான நிலையத்தில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 787 ரக டிரீம் லைனர் சரக்கு விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. சரக்கு விமானம் என்பதால் பயணிகள் யாரும் அந்த விமானத்தில் இல்லை. இதனால், உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
எப்படி நடந்தது விபத்து..
வழக்கமாக தரையிறங்கும் ஓடுதளத்தில் தான் அந்த விமானம் தரையிறங்கியது. ஆனால், விமானம் ஓடுதளத்தில் சறுக்கிச்சென்று விபத்தை சந்தித்தது. விமானத்தின் முன்பாகம் ஓடுதளத்தில் சரிந்தது. ஓடுதளத்தில் தேங்கியிருந்த மழைநீரால் விமானம் சறுக்கி விபத்தை சந்தித்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இருப்பினும், விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுவாக சாலையில் ஓடும் வாகனங்கள் தான் மேடு, பள்ளங்களில் சிக்கி விபத்திற்கு உள்ளாகும். சில நேரங்களில சாலைகளில் தேங்கும் மழை நீரில் பைக்குகள் சிக்கி விபத்திற்கு உள்ளாவதையும் பார்த்திருக்கிறோம். ஆனால் விமானமே மழை நீரில் சறுக்கிய விபத்திற்கு உள்ளானதை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். நம்ம ஊரு ரோடு தான் மோசம்னு பார்த்தா... லண்டன் ரோடு அதை விட மோசமா இருக்கம்போல என்றெல்லாம் மீம்ஸ் போட ஆரம்பிச்சுட்டாங்க. நல்வாய்ப்பாக பயணிகள் இல்லாத விமானம் என்பதால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது. இத்தனைக்கு அது புகழ் பெற்ற விமான நிலையம். என்னய்யா எதுக்கெடுத்தாலும் லண்டன் லண்டன்னு சொல்றீங்க... எங்க ஊர்ல வெள்ளக்காடா போனா கூட பிளைட்டெல்லாம் மிதக்குமே தவிர சறுக்காது என காலரை தூக்கிவிட்டுக்கொண்டும் சிலர் பதிவு செய்து வருகின்றனர்.
ஐரோப்பாவிலேயே முதலிடம்.. ஆண்டுக்கு 70 மில்லியன் பயணிகள்
ஹீத்ரோ விமான நிலையம் (ஹீத்ரோ விமான நிலையம்) லண்டனின் முக்கிய சர்வதேச விமான நிலையம் மற்றும் இங்கிலாந்தின் மிகப்பெரிய விமான மையமாகும். பயணிகள் போக்குவரத்தைப் பொறுத்தவரை ஐரோப்பாவில் முதலிடத்தில் உள்ளது. ஹில்லிங்டன் பகுதியில் லண்டனின் மையத்திலிருந்து 24 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. உலகெங்கிலும் 180 க்கும் மேற்பட்ட நகரங்களுடன் லண்டனை இணைக்கும் 90 க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு ஹீத்ரோ விமான நிலையம் சேவை செய்கிறது. ஆண்டுக்கு சுமார் 70 மில்லியன் பயணிகள் விமான நிலைய சேவைகளைப் பயன்படுத்துகின்றனர்.
ஹீத்ரோ விமான நிலைய முனையங்கள்..
ஹீத்ரோ விமான நிலையத்தில் (எல்.எச்.ஆர்) நான்கு டெர்மினல்கள் பயணிகளுக்கு சேவை செய்கின்றன: T 2, T 3, T 4, T 5.
முனையம் 2 - இரண்டாவது பெயர் குயின்ஸ் டெர்மினல், இது ஸ்டார் அலையன்ஸ் விமானங்களின் விமான சேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
முனையம் 3 - 2வது பெயர் ஓசியானிக் டெர்மினல். ஒன்வொர்ல்ட் கூட்டணி மற்றும் விர்ஜின் அட்லாண்டிக் விமானங்களின் விமானங்களுக்கு முக்கியமாக சேவை செய்கிறது.
முனையம் 4 - ஏரோஃப்ளோட் விமானங்கள் உட்பட ஸ்கைடீம் கூட்டணி விமானங்களின் விமானங்களுக்கு சேவை செய்கிறது.
முனையம் 5 - முக்கியமாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானங்களுக்கு சேவை செய்கிறது.
சரக்கு வளாகம் - முழு அளவிலான சரக்கு கையாளுதல் சேவைகளை செய்கிறது.