Vaccination | தடுப்பூசி செலுத்திக்கொள்ளாவிட்டால் சிறை தண்டனை - எச்சரிக்கும் அதிபர்..!
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள மறுப்பவர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்படும் என்றும் பிலிப்பைன்ஸ் அதிபர் எச்சரித்துள்ளார்.
உலக அளவில் பல நாடுகளில் கொரோனாவின் தாக்கம் ஓர் ஆண்டை கடந்தும் இன்னும் குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா உள்பட ஆசியா மற்றும் ஐரோப்பிய கண்டங்களில் இன்னும் பல நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்தவண்ணமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மறுப்பவர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் ரோட்ரிகோ துதர்தே எச்சரித்துள்ளார்.
சர்ச்சைக்கு பெயர்பெற்ற பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ துதர்தே கொரோனா வைரஸ் தாக்கம் தொடங்கியபோது பிற நாடுகளை போல ஊரடங்கு பிறப்பித்தார். ஆனால் அப்போது நாட்டில் தேவை இன்றி வெளியில் சுற்றுபவர்களை சுடுவதற்கு போலீசார் மற்றும் ராணுவத்திற்கு அனுமதி அளித்து, மக்களை பீதியில் ஆழ்த்தினார். இந்நிலையில் தற்போது பிலிப்பைன்ஸ் நாட்டில் கொரோனாவின் இரண்டாம் அலை உருவாகி வரும் நிலையில் மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பெரிய அளவில் ஆர்வம் காட்டுவதில்லை என்று கூறப்படுகிறது.
சுமார் 11 கோடி மக்கள்தொகை கொண்ட அந்த நாட்டில் இதுவரை வெறும் 21 லட்சம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தொலைக்காட்சியில் தோன்றிய அதிபர் ரோட்ரிகோ துதர்தே நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துவருகின்றது. மேலும் கொரோனாவை வெல்ல தடுப்பூசி ஒன்றே தீர்வு என்பதால் மக்கள் தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மறுப்பவர்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று கூறிய அவர், தடுப்பூசி செலுத்திக்கொள்ள விருப்பம் இல்லாதவர்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்றும் காட்டமாக கூறினார்.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் நேற்று 6 ஆயிரத்து 895 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,65,375 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 6,895 ஆக உள்ளது.
TN Corona Update: தென் மண்டல கொரோனா பாதிப்பு நிலவரம் என்ன? மாவட்ட வாரியாக தகவல்!
ஆயிரத்து 819 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 30 ஆயிரத்து 34 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் நேற்று 410 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை 870, ஈரோடு 741, சேலம் 485, திருப்பூர் 434, தஞ்சாவூர் 372, செங்கல்பட்டு 286, நாமக்கல் 274, திருச்சி 231, திருவள்ளூர் 191, கடலூர் 179, திருவண்ணாமலை 178, கிருஷ்ணகிரி 155, நீலகிரி 139, கள்ளக்குறிச்சி 134, மதுரை 125, ராணிப்பேட்டை 116, குமரி 110, நாகை 107, தருமபுரி 104, விழுப்புரம் 103 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.