Elon Musk: ஆத்தாடி..! சம்பளமே, ரூ.8,86,59,40,00,00,000 - குத்தாட்டம் போட்டு கொண்டாடிய எலான் மஸ்க்
Elon Musk 1 Trillion: உலகில் இதுவரை எவரும் பெறாத வகையில், டெஸ்லா நிறுவன தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்கிற்கு ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களை ஊதியமாக வழங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

Elon Musk 1 Trillion: எலான் மஸ்க் தலைமையில் டெஸ்லா நிறுவனம் குறிப்பிட்ட இலக்குகளை அடைந்தால், ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஊதியமாக வழங்கப்பட உள்ளது.
எலான் மஸ்கிற்கு $1 ட்ரில்லியன் ஊதியம்
டெஸ்லா தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்கிற்கு, பல பில்லியன் அமெரிக்க டாலர்களை ஊதியமாக அள்ளி வழங்குவதற்கான ஒப்பந்தத்தை, நிறுவன பங்குதாரர்கள் அங்கீகரித்துள்ளனர். இதன் மூலம் எலான் மஸ்க் தலைமையில் நிறுவனம் நீண்ட கால இலக்குகளை எட்டினால், ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.8,86,59,40,00,00,000) வாரை சம்பாதிக்க முடியும். இதுதொடர்பாக வியாழனன்று நடைபெற்ற கூட்டத்தில், 75 சதவிகிதத்திற்கும் அதிகமான பங்குதாரர்கள் இந்த ஒப்பந்தத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். உலகில் இதுவரை எந்தவொரு நபரும், இந்த அளவிலான மிகப்பெரிய ஊதிய தொகுப்பை பெற்றதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மஸ்கிற்கு ஏன் இவ்வளவு ஊதியம்?
டெஸ்லா நிறுவனத்திற்காக எலான் மஸ்கால் நிர்ணயிக்கப்பட்ட தொழில்நுட்ப இலக்குகளை தொடர, நீண்ட காலத்திற்கு அவரை நிறுவனத்தில் தக்கவைக்கவே இந்த பிரமாண்ட ஊதிய தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மஸ்க் டெஸ்லா நிறுவனத்தில் 7.5 ஆண்டுகள் தக்கவைக்கப்பட உள்ளார். பங்குதாரர்கள் கூட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட அனைத்து இலக்குகளையும் மஸ்க் அடைந்தால், அவர் உலகின் முதல் டிரில்லியனராக உருவெடுக்க முடியும்.
Elon Musk puts on a dance performance alongside robots after $TSLA shareholders voted to approve his $1,000,000,000,000 pay package:
— Yahoo Finance (@YahooFinance) November 6, 2025
"What we're about to embark upon is not what we're about to embark upon is not merely a new chapter of the future of Tesla, but a whole new book." pic.twitter.com/UIB2uzJWzd
குத்தாட்டம் போட்ட மஸ்க்:
இந்த நிகழ்ச்சியில் மேடையேறி அங்கிருந்த ரோபோக்களுடன் சேர்ந்து எலான் மஸ்க் நடனமாடி அசத்தினார். மேலும், “நாங்கள் தொடங்கப் போவது டெஸ்லாவின் எதிர்காலம் குறித்த ஒரு புதிய அத்தியாயத்தை மட்டுமல்ல, ஒரு புதிய புத்தகத்தையும்" தான் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து, செயற்கை நுண்ணறிவு, செல்ஃப்- ட்ரைவிங் தொழில்நுட்பம் மற்றும் ரோபாட்டிக்ஸ் போன்ற துறைகளில் டெஸ்லாவின் முன்னேற்றம் போட்டியாளர்களை விட முன்னணியில் இருக்கும் என்றும் மஸ்க் உறுதியளித்தார். ஏற்கனவே, 500 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான சொத்து மதிப்புகளுடன், உலக பணக்காரர்கள் பட்டியலில் மஸ்க் முதலிடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.
மஸ்கிற்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள் என்ன?
அங்கீகரிக்கப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம், மஸ்க் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் எனும் ஊதியத்தை பெற, நிறுவனத்தின் சந்தை மதிப்பு தொடர்பான பல்வேறு மைல்கற்களை அடைய வேண்டியுள்ளது. அதில் முதல் பகுதியானது,
- டெஸ்லா நிறுவனத்தின் சந்தை மதிப்பு 2 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களாக உருவெடுக்கும்போது மஸ்கிற்கு கிடைக்கும்.
- 10 ஆண்டுகளுக்குள் 20 மில்லியன் டெஸ்லா கார்களை விற்பனை செய்வதும் இதில் அடங்கும். இது கடந்த 12 ஆண்டுகளில் டெஸ்லா நிறுவனம் விற்பனை செய்திருப்பதை காட்டிலும் 2 மடங்கு அதிகம் ஆகும்.
- ஒரு ரோபோவை கூட டெஸ்லா நிறுவனம் பயனர்களுக்கு விநியோகிக்காத நிலையில், 10 லட்சம் ரோபோக்களின் விநியோகத்தையும் எலான் மஸ்க் ஒப்பந்தப்படி கண்காணிக்க வேண்டும்
- அனைத்து இலக்குகளையும் மஸ்க் அடையாவிட்டாலும், அவர் மிகப்பெரிய தொகையை ஊதியமாக பெறக்கூடும். நிறுவனத்தின் சந்தை மதிப்பை 80% உயர்த்தினால், வாகன விற்பனையை இரட்டிப்பாக்கி, இயக்க லாபத்தை மூன்று மடங்காக உயர்த்தினால் - அல்லது மற்ற செயல்பாட்டு இலக்குகளில் ஏதேனும் இரண்டை எட்டினாலே, எலான் மஸ்கிற்கு டெஸ்லா பங்குகளில் 50 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




















