Pakistan Debt: ரூ. 79 லட்சம் கோடியை நெருங்கும் பாகிஸ்தான் கடன்; அதிர்ச்சியளிக்கும் அறிக்கை..!
Pakistan Dept: பாகிஸ்தான் நாட்டின் கடனானது, தொடர்ந்து அதிகரித்து வருவது அம்மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜூன் 2025க்குள் பாகிஸ்தான் நாட்டின் மொத்தக் கடனானது, பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 79 டிரில்லியனை எட்டும் என அறிக்கை தெரிவிக்கிறது.
கடன் சுமை:
ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் அரசாங்கமானது, மூன்றாண்டுக்கான பொருளாதாரத் திட்டத்தை வெளியிட்டது. அதில், 2027க்குள் மத்தியிலிருந்து மாநிலங்களுக்கான நிதி பங்கானது 39.4 சதவிகிதத்தில் இருந்து 48.7 சதவீதமாக அதிகரிக்க திட்டமிட்டிருப்பதாக ARY நியூஸ் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள், பாகிஸ்தானின் மொத்தக் கடன் அளாவனது, பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 79,731 பில்லியனை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. . அதாவது, உள்ளூர் கடன்கள் தோராயமாக PKR 7,671 பில்லியன் அதிகரிக்கும் என்றும், வெளிநாட்டு கடன்கள் PKR 818 பில்லியன் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஜூன் 2025க்குள் பாகிஸ்தானின் மொத்தக் கடனானது, பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 79 டிரில்லியனை ( 76 லட்சம் கோடி ) எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ( 1 பாகிஸ்தான் ரூபாய் = 30 பைசாக்கள்- இந்திய மதிப்பில் )
பாகிஸ்தான் திட்டம்:
ஜூலை 2023 முதல் ஜூன் 7, 2024 வரையிலான கால அளவில் ஏற்பட்டுள்ள PKR 7.39 டிரில்லியன் தொகையான கடன் அளவானது, முந்தைய இரண்டு நிதியாண்டுகளில் பெற்ற மொத்த அளவை ( PKR 7.16 டிரில்லியன் ) விட அதிகமாகும் (FY23 மற்றும் FY22) எனவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கடன் சுமையை குறைக்க முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகவும், வட்டி விகிதங்களில் மாற்றத்தை கொண்டுவர திட்டமிட்டிருப்பதாகவும் பாகிஸ்தான் அரசாங்கம் கூறியுள்ளது.
ஏற்கனவே பாகிஸ்தானில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாகவும், பணவீக்கம் அதிகரித்திருப்பதாகவும், இந்திய விண்வெளித் துறையில் சிறந்து விளங்குகிறது என்றும், பாகிஸ்தான் நிலையோ கவலைக்கிடமாக உள்ளது என்றும் நாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்.பி. தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையான நிலையில் , தற்போது வெளியாகியுள்ள கடன் சுமை அறிக்கையானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.