Pakistan Economic Crisis: பாகிஸ்தானில் கடும் பஞ்சம்... வரலாறு காணாத அளவுக்கு வட்டி அதிகரிப்பு... திணறும் மக்கள்...!
பாகிஸ்தானில் உணவு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், பாகிஸ்தான் மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை உயர்த்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Pakistan Economic Crisis : பாகிஸ்தானில் உணவு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், பாகிஸ்தான் மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை உயர்த்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடும் பஞ்சம்
பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. விலைவாசி உயர்வு, பணவீக்கம் ஆகியவற்றால் திணறி வரும் பாகிஸ்தான், வரும் மாதங்களில் மேலும் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் எனவும் பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஒரு வேளை உணவிற்கே நடுத்தர மற்றும் கீழ்தட்டில் இருக்கும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் சுமார் 16 பேர் உயிரிழந்ததாக தெரிகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அதன்படி, வெங்காயத்தின் விலை மட்டும் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 228.28 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதேபோல் கோதுமை மாவின் விலை 120.66 சதவீதம் அதிகரித்துள்ளது. சிகரெட்டின் விலை 165.88 சதவீதம் அதிகரித்துள்ளது. லிப்டன் தேயிலையின் விலை 94.60 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2023ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஏரிவாயுவின் விலை 108.38 சதவீதம் அதிகரித்துள்ளது.
பணவீக்கம் அதிகரித்து வருவதால், பெட்ரோல் டீசல் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, மருந்து தட்டுப்பாடு போன்ற பிரச்சனைகள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
வட்டி விகிதம் உயர்வு
இந்நிலையில், பாகிஸ்தானின் மத்திய வங்கியான ஸ்டேட் பங்க் ஆஃப் பாகிஸ்தான் (SBP) 100 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து, அதன் வட்டி விகிதத்தை 21 சதவீதம் ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே வரலாறு காணாத அளவில் நிதி பற்றாக்குறை, உணவுக்கு பஞ்சம் என்று இருக்கும் நிலையில், தற்போது இந்த வட்டி விகித உயர்வு மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
1/4 Monetary Policy Committee decided to increase policy rate by 100bps to 21% in its meeting today.https://t.co/JeUhdtDFrq pic.twitter.com/6avIFg4S6c
— SBP (@StateBank_Pak) April 4, 2023
இந்த வட்டி விகித உயர்வு பாகிஸ்தானின் நிலைமை மோசமாகும் என்று கூறப்படுகிறது. அந்தளவுக்கு வட்டி விகிதம் என்பது வரலாறு காணாத அளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. வாராந்திர பணவீக்கம் 45 சதவீதத்தை தொட்டுள்ளது. இதனால் அத்தியவசிய பொருட்களின் விலை கிடுகிடு உயர்ந்து வருகிறது. இப்படி ஒரு நெருக்கடியான சூழலில் தான் பாகிஸ்தானின் மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை 21 சதவீதம் கடுமையாக உயர்த்தியுள்ளது.
ஏற்கனவே விலைவாசி உயர்வால் மக்கள் திணறி கொண்டிருக்கும் நிலையில், இந்த வட்டி விகித உயர்வு மேற்கொண்டு வரும் தேவையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க
NASA Asteroid: பூமியை நெருங்கும் 150 அடி விண்கல்.. பேராபத்து ஏற்படுமா? நாசா கொடுத்த விளக்கம்..