மேலும் அறிய

OpenAI ChatGPT: “தற்கொலை எண்ணத்துடன் ChatGPT உடன் பேசும் லட்சக்கணக்கானோர்“; OpenAI வெளியிட்ட பகீர் தகவல்.!

ChatGPT உடன் உரையாடும் லட்சக்கணக்கானோர் தற்கொலை எண்ணத்துடன் பேசுவதாக OpenAI நிறுவனம் பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ChatGPT-ஐ உருவாக்கும் OpenAI-ன் தரவுகளின்படி, அதன் ஜெனரேட்டிவ் AI சாட்போட்டைப் பயன்படுத்தும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள், தற்கொலையில் ஆர்வம் காட்டியுள்ளதாக கூறப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நவீனத்தால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மக்கள்

மனிதனின் வாழ்வில் தொழில்நுட்பங்கள் தேவை தான். ஆனால், அந்த தொழில்நுட்பத்தாலேயே அவர்கள் பாதிக்கப்படுவதுதான் கொடுமையான விஷயம். இன்றைய காலகட்டத்தில் அது தான் நடந்துகொண்டிருக்கிறது. ஆம், தொழில்நுட்பம் நவீனமாகி வரும் நிலையில், அதனால் மனிதர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.

அதிலும், மொபைல் ஃபோன்கள் வந்த பிறகு, வயது வித்தியாசம் இல்லாமல், அதில் மூழ்கிக் கிடப்போரே அதிகம். குறிப்பாக, சிறு குழந்தைகள் அதற்கு அடிமையாகிக் கிடக்கிறார்கள் என்றே கூறலாம். அதனால் இளம் வயதினர் பலர் மனநோய்க்கு ஆளாகும் அளவிற்கு நிலைமை வந்துவிட்டது. இந்த நிலையில், தற்போது ஏஐ-யின் ஆதிக்கம் நிலைமையை இன்னும் மோசமாக்கியள்ளது. கிட்டத்தட்ட மனிதர்களுக்கு இணையாக அதுவும் செயல்படுவதால், சக நிஜ மனிதர்களை விட்டுவிட்டு, கோடிக்கணக்கானோர் ஏஐ உடன் பழக ஆரம்பித்துவிட்டனர்.

தற்போது அந்த வரிசையில் மிகவும் பிரபலமாக உள்ள ChatGPT உடன் உரையாடுவோர் ஏராளம். இந்நிலையில் தான், அதை உருவாக்கிய ஓபன்ஏஐ நிறுவனம் ஒரு பகீர் தரவை வெளியிட்டுள்ளது. அது குறித்து இப்போது பார்க்கலாம்.

OpenAI கூறியுள்ளது என்ன.?

கடந்த திங்கட்கிழமையன்று வெளியிடப்பட்ட ஒரு வலைப்பதிவு இடுகையில், AI நிறுவனம் தோராயமாக 0.15 சதவீத பயனர்கள் "தற்கொலை திட்டமிடல் அல்லது நோக்கத்தின் வெளிப்படையான அறிகுறிகளை உள்ளடக்கிய உரையாடல்களைக்" கொண்டுள்ளதாக மதிப்பிட்டுள்ளது.

ஒவ்வொரு வாரமும் 800 மில்லியனுக்கும் அதிகமான மக்கள், ChatGPT-ஐ பயன்படுத்துவதாக OpenAI தெரிவிக்கும் நிலையில், இது சுமார் 1.2 மில்லியன், அதாவது 12 லட்சம் மக்களை குறிக்கிறது. வாராந்திர செயலில் உள்ள பயனர்களில் தோராயமாக 0.07 சதவீதம் பேர் மனநோய் அல்லது பித்து தொடர்பான மனநல அவசரநிலைகளின் சாத்தியமான அறிகுறிகளைக் காட்டுவதாகவும் அந்த நிறுவனம் மதிப்பிடுகிறது. அதாவது, சுமார் 6 லட்சம் மக்கள். இந்த தரவு பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பிரச்னை உருவானது எப்படி.?

இந்த ஆண்டின் தொடக்கத்தில், கலிபோர்னியாவைச் சேர்ந்த இளைஞர் ஆடம் ரெய்ன் தற்கொலை செய்து கொண்ட நிலையில், இந்த பிரச்சினை வெடித்துள்ளது. தற்கொலை செய்து கொள்வது எப்படி என்பது குறித்து ChatGPT அவருக்கு குறிப்பிட்ட ஆலோசனைகளை வழங்கியதாகக் கூறி, அவரது பெற்றோர் வழக்குத் தொடர்ந்தனர்.

அப்போதிலிருந்து, OpenAI, ChatGPT-க்கான பெற்றோர் கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளது. மேலும், நெருக்கடி நேர ஹாட்லைன்களுக்கான விரிவாக்கப்பட்ட அணுகல், முக்கியமான உரையாடல்களை பாதுகாப்பான மாதிரிகளுக்கு தானாக மாற்றியமைத்தல் மற்றும் நீட்டிக்கப்பட்ட அமர்வுகளின் போது பயனர்கள் இடைவேளை எடுக்க மென்மையான நினைவூட்டல்கள் உள்ளிட்ட பல பாதுகாப்பு அம்சங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

மனநல அவசர நிலைகளில் உள்ள பயனர்களை அடையாளம் கண்டு பதிலளிக்க, அதன் ChatGPT சாட்போட்டையும் புதுப்பித்துள்ளதாகவும், சிக்கலான பதில்களை கணிசமாகக் குறைக்க, 170-க்கும் மேற்பட்ட மனநல நிபுணர்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் OpenAI தெரிவித்துள்ளது.

அதன்படி, புதுப்பிக்கப்பட்ட GPT-5 மாடல், தற்கொலை தொடர்பான உரையாடல்களில், பாதுகாப்பு விதிகளை பின்பற்றுவதில், பழைய மாடல் 77 சதவீதம் வெற்றி பெற்ற நிலையில், புதிய மாடல் 91 சதவீதம் துல்லியத்துடன் செயல்படுவதாக OpenAI தெரிவித்துள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

'MONTHA' Cyclone: யப்பா, என்னா வேகம்.! 110 கி.மீ குறைக்காற்றுடன் ஆந்திராவில் கரையை கடந்த ‘மோன்தா‘ புயல்
யப்பா, என்னா வேகம்.! 110 கி.மீ குறைக்காற்றுடன் ஆந்திராவில் கரையை கடந்த ‘மோன்தா‘ புயல்
Melissa Cyclone: ஜமைக்காவை புரட்டிப்போட்ட மெலிசா புயல்.. மோன்தாவை விட பயங்கரம்.. புயலுக்குள் புகுந்த விமானம்
Melissa Cyclone: ஜமைக்காவை புரட்டிப்போட்ட மெலிசா புயல்.. மோன்தாவை விட பயங்கரம்.. புயலுக்குள் புகுந்த விமானம்
வடகிழக்குப் பருவமழை: TN-ALERT செயலி மூலம் வானிலை எச்சரிக்கை.. பாதுகாப்பாக இருக்க உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
வடகிழக்குப் பருவமழை: TN-ALERT செயலி மூலம் வானிலை எச்சரிக்கை.. பாதுகாப்பாக இருக்க உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
Gold Rate Today: உடனே புறப்படுங்க.. ஒரே நாளில் ரூபாய் 3 ஆயிரம் குறைந்த தங்கம் விலை - இன்ப மழையில் மக்கள்!
Gold Rate Today: உடனே புறப்படுங்க.. ஒரே நாளில் ரூபாய் 3 ஆயிரம் குறைந்த தங்கம் விலை - இன்ப மழையில் மக்கள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

திமுக கூட்டணிக்கு OPS தூது காதர்பாட்சாவுடன் 1Hour MEETING ஆபரேஷன் ராமநாதபுரம் | OPS Joins DMK
TVK Vijay Slams DMK | ”வீட்டுக்கு போவது உறுதி விவசாயிக்கு என்ன பண்ணீங்க” comeback கொடுத்த விஜய்
TVK Vijay | ’’20 லட்சம் வேணாம்விஜய் நேர்ல தான் வரணும்’’பணத்தை திருப்பி கொடுத்த பெண்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
'MONTHA' Cyclone: யப்பா, என்னா வேகம்.! 110 கி.மீ குறைக்காற்றுடன் ஆந்திராவில் கரையை கடந்த ‘மோன்தா‘ புயல்
யப்பா, என்னா வேகம்.! 110 கி.மீ குறைக்காற்றுடன் ஆந்திராவில் கரையை கடந்த ‘மோன்தா‘ புயல்
Melissa Cyclone: ஜமைக்காவை புரட்டிப்போட்ட மெலிசா புயல்.. மோன்தாவை விட பயங்கரம்.. புயலுக்குள் புகுந்த விமானம்
Melissa Cyclone: ஜமைக்காவை புரட்டிப்போட்ட மெலிசா புயல்.. மோன்தாவை விட பயங்கரம்.. புயலுக்குள் புகுந்த விமானம்
வடகிழக்குப் பருவமழை: TN-ALERT செயலி மூலம் வானிலை எச்சரிக்கை.. பாதுகாப்பாக இருக்க உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
வடகிழக்குப் பருவமழை: TN-ALERT செயலி மூலம் வானிலை எச்சரிக்கை.. பாதுகாப்பாக இருக்க உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
Gold Rate Today: உடனே புறப்படுங்க.. ஒரே நாளில் ரூபாய் 3 ஆயிரம் குறைந்த தங்கம் விலை - இன்ப மழையில் மக்கள்!
Gold Rate Today: உடனே புறப்படுங்க.. ஒரே நாளில் ரூபாய் 3 ஆயிரம் குறைந்த தங்கம் விலை - இன்ப மழையில் மக்கள்!
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
CTET 2025: கனவு காண்போருக்கு காத்திருப்பு! தாமதமாகும் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிக்கை; கவலையில் தேர்வர்கள்!
CTET 2025: கனவு காண்போருக்கு காத்திருப்பு! தாமதமாகும் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிக்கை; கவலையில் தேர்வர்கள்!
Anbumani: அமைச்சர் முத்துசாமியுடன் விவாதம் நடத்த தயார்.. சவாலுக்கு சம்மதம் சொன்ன அன்புமணி!
Anbumani: அமைச்சர் முத்துசாமியுடன் விவாதம் நடத்த தயார்.. சவாலுக்கு சம்மதம் சொன்ன அன்புமணி!
Artificial Rain: டெல்லியில் திடீரென பெய்த செயற்கை மழை.. எதற்காக தெரியுமா?
Artificial Rain: டெல்லியில் திடீரென பெய்த செயற்கை மழை.. எதற்காக தெரியுமா?
Embed widget