Elon Musk: ”ஒருவேளை நான் மர்மமான முறையில் இறந்துபோனால்..” : எலான் மஸ்க்கின் ட்வீட்டும், அதற்கு வந்த பதில்களும்..!
எலான் மஸ்க் செய்த சர்ச்சை டிவீட்டும், அதற்கு குவிந்த பதிலகளும்...
"ஒருவேளை நான் மர்மமான முறையில் இறந்துபோனால்...” என்று எலான் மஸ்க் பதிவிட்டுள்ள ட்வீட் அதற்கு பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
எலான் மஸ்க் டிவிட்டர் தளத்தை வெகுவாக பயன்படுத்தும் நபர். அவரின் சின்னச் சின்ன ட்வீட்கள் எப்போதும் தனி கவனம் பெறுபவை.அவரின் டிவீட்டிற்கு பலரும் ரிப்ளை செய்வார்கள்.
அந்த வகையில்,அவர் பதிவிட்டுள்ள டிவீட்டில், "ஒருவேளை நான் மர்மமான முறையில் இறந்துபோனால்... இதை அறிந்துகொண்டதும் நல்லதே" என்று பதிவிட்டிருந்தார்.
If I die under mysterious circumstances, it’s been nice knowin ya
— Elon Musk (@elonmusk) May 9, 2022
எலன் டிவீட் செய்த சில நிமிடங்களிலேயே அவருக்கு பலரும் பதில் அளிக்க தொடங்கினர்.
If that happens can I have Twitter
— MrBeast (@MrBeast) May 9, 2022
எலனின் இந்த ட்வீட்டிற்கு ஒருவர், அப்படி நடந்தால், நான் டிவிட்டரின் உரிமையாளராக ஆகலாமா? என்று கேட்டிருக்கிறார்.
I’ll never forget this. https://t.co/sC5r21QDmi
— Stephen (@spcomstock) May 9, 2022
சிலரோ, எலான், அப்படி நடக்காது, இந்த உலகத்திற்கு நீங்கள் வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
The world needs Elon Musk
— Baby Doge (@BabyDogeCoin) May 9, 2022
Can you elaborate on "Mysterious"?
— Henry (@HenryGr8Trade) May 9, 2022
எலான் மஸ்க் இப்படி ட்வீட் செய்ததன் பின்னணி:
அவருடைய ஸ்டார் லிங்க் நிறுவனம் உக்ரைனுக்கு தொலைதொடர்பு சாதனங்களை வழங்கிவருவதாகவும். அந்த தவறுக்கு அவர் பொறுப்பேற்க வேண்டும் என்றும் ரஷ்ய மொழியில் எழுதப்பட்ட ஒன்றை பதிவிட்டிருந்தார்.
No, you will not die. The world needs you to reform ❤️❤️🌙🪐🚀💫⭐️ https://t.co/wxKWYHUHIV
— Farzad Ahangi «Dogecoin»🇺🇦 (@FarzadAhangi) May 9, 2022
கடந்த பிப்ரவரி மாதன் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தது. அப்போது, உக்ரைனின் இணைய சேவை முடக்கப்பட்டது. அப்போது உக்ரைன் வெளியுறவு அமைச்சர் குலேபா, எலான் மஸ்க்கை ட்விட்டரில் டேக் செய்து உதவி கோரியிருந்தார். அன்றைய தினமே உடனே ஸ்டார்லிங்க் தொலைதொடர்பு சேவைகளை இலவசமாக உக்ரைனுக்கு எலான் மஸ்க் வழங்க ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பதிவைத் தொடர்ந்து, எலான் மஸ்க் தான் மர்மான முறையில் இறந்துபோனால், என்று டிவீட் செய்தார்.
The word “Nazi” doesn’t mean what he seems to think it does pic.twitter.com/pk9SQhBOsG
— Elon Musk (@elonmusk) May 9, 2022
ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் தலைவரும் உலகப் பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் அண்மையில் ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு வாங்க ஒப்பந்தம் செய்திருக்கிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்