இசை நிகழ்ச்சிக்கு நடுவே தன்னை தானே தாக்கி கொண்ட பாடகர்...தாரை தாரையாக வழிந்த ரத்தம்
பிரபல இசைக் கலைஞர் மெஷின் கன் கெல்லியின் நிகழ்ச்சி ஜூன் 28ஆம் தேதி அன்று மேடிசன் ஸ்கொயர் கார்டனில் நடைபெற்றது.
பிரபல இசைக் கலைஞர் மெஷின் கன் கெல்லியின் நிகழ்ச்சி ஜூன் 28ஆம் தேதி அன்று மேடிசன் ஸ்கொயர் கார்டனில் நடைபெற்றது.
அப்போது, அரங்கம் முழுவதும் ரசிகர்கள் கூடியிருக்க, நிகழ்ச்சியின் நடுவே, அமைதியை இழந்து அவர் விசித்திரமாக நடந்து கொண்டார்.
திடீரென, பாட்டிலை எடுத்து தனது தலையிலேயே அடித்து கொண்டார். இது பார்ப்பவர்களை அச்சத்தியில் ஆழ்த்தியது.
View this post on Instagram
அமெரிக்க ராப் பாடகரான அவர், பார்வையாளர்கள் பகுதியில் நின்று கொண்டிருந்த ரசிகர்களிடம் கடிந்து கொண்டார். பின்னர் அவரது கிதாரை அடித்து நொறுக்கினார். நியூயார்க் நகரத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின்போது, தனது முகத்தை ஷாம்பெயின் கண்ணாடியை கொண்டு அவரே தாக்கி கொண்டார். இதன் காரணமாக, அவரின் நெற்றியில் இருந்து ரத்தம் தாரை தாரையாக வழிந்தது.
பின்னர், சிறிது தூரம் நடந்து சென்று கத்திக்கொண்டிருந்தபோது இசை குழுவினரில் ஒருவர் அவரைப் பிடித்து இழுத்தார். இதற்கு மத்தியிலும், இசைக்குழு பொருட்படுத்தாமல் நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தினர். இறுதியில், மெஷின் கன் மீண்டும் மேடைக்கு திரும்பினார்.
பாடகர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுகுறித்து பகிர்ந்துள்ளார். சம்பவம் நடந்த பிறகு எடுத்த படங்களையும் பகிர்ந்துள்ளார். நிகழ்ச்சியின் நடுவே இசை கலைஞர் இப்படி நடந்து கொண்டது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்