Ukraine Zelensky At Cannes 2022: புதிய சார்லி சாப்ளின் தேவை..கேன்ஸ் திரைப்பட விழாவில் நெகிழ்ந்த உக்ரைன் அதிபர்.. எழுந்து நின்று கைதட்டிய கலைஞர்கள்
உக்ரைன் அதிபரான விளாடிமீர் ஜெலன்ஸ்கி கேன் திரைப்பட விழாவில் திடிரென்று வீடியோ கால் வழியாக தோன்றி பேசினார். அவரது பேச்சை கேட்ட கலைஞர்கள் எழுந்து நின்று கைத்தட்டினர்.
உக்ரைன் அதிபரான விளாடிமீர் ஜெலன்ஸ்கி கேன்ஸ் திரைப்பட விழாவில் திடீரென்று வீடியோ கால் வழியாக தோன்றி பேசினார்.
சினிமா அமைதியாக இருக்குமா..?
அப்போது பேசிய அவர், “போரில் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். சினிமா அமைதியாக இருக்குமா இல்லை பேசுமா.. இங்கு ஒரு சர்வாதிகாரி இருந்தால், மீண்டும் இங்கு விடுதலைக்கான போர் நடந்தால், இவையெல்லாம் நமது ஒற்றுமையை பொறுத்தே இருக்கிறது. சினிமா இந்த ஒற்றுமைக்கு வெளியே இருக்க முடியுமா..?
புதிய சார்லி சாப்ளின் தேவை
தொடர்ந்து இராண்டாம் உலகப்போரின் போது சினிமா ஏற்படுத்திய தாக்கத்தை பற்றி பேசிய அவர் 1940-ஆம் ஆண்டு வெளியான தி கிரேட் டிக்டேட்டர் திரைப்படம் நாஜி தலைவர் அடால்ஃப் ஹிட்லரை கிண்டலடித்தது பற்றி பகிர்ந்தார்.
சாப்ளினின் டிக்டேட்டர் உண்மையான டிக்டேட்டரை அழிக்கவில்லை. ஆனால் இந்த நேரத்தில் சினிமாவுக்கு நான் நன்றி சொல்லிக்கொள்கிறேன். அந்தத்திரைப்படத்திற்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். சினிமா அமைதியாக இருப்பதில்லை. சினிமா அமைதியாக இருக்காது என்பதை நிரூபிக்க நமக்கு புதிய சாப்ளின் தேவைப்படுகிறார். இந்த நேரத்தில் சினிமா பேசுமா.. இல்லை அமைதியாக இருக்குமா.. இதிலிருந்து சினிமா விலகி நிற்கப்போகிறதா..” என்றார்
எழுந்து நின்று கைதட்டிய கலைஞர்கள்
அதிபரின் இந்தப் பேச்சைக் கேட்ட கலைஞர்கள் மற்றும் பார்வையாளர்கள் எழுந்து நின்று கைத்தட்டினர். 75 ஆவது கேன்ஸ் திரைப்பட விழாவில் உக்ரைனில் நடந்து வரும் போரானது ஒரு கருப்பொருளாக எடுத்துக்கொள்ளப்பட்டது. அதே போல உக்ரைன் திரைப்பட கலைஞர்களுக்கு ஒரு நாள் சிறப்பு நாளாக அர்ப்பணிக்கப்பட்டது.
போரை பற்றி மந்தாஸ் குவேதரவிசியஸ் இயக்கிய ‘மேரியூபொலிஸ்’ ஆவணப்படம் சிறப்பு திரையிடலுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தை இயக்கிய மந்தாஸ் குவேதரவிசியஸ் ரஷ்ய படையினரால் சுட்டு கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. லாஸ் வேகஸில் நடைபெற்ற கிராமிய விருது நிகழ்ச்சியிலும் உக்ரைன் அதிபர் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்