(Source: ECI/ABP News/ABP Majha)
Mars Sample Return: செவ்வாய் கிரகணத்திலிருந்து மாதிரிகளை பூமிக்கு கொண்டு வர முயற்சி: சாதனை படைக்குமா நாசா?
அமெரிக்க விண்வெளி நிறுவனமான NASA மற்றும் ESA விஞ்ஞானிகள், மண் மற்றும் பாறையின் முதல் மாதிரிகளை செவ்வாய் கிரகத்திலிருந்து பூமிக்கு திருப்பி கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி (ESA) விஞ்ஞானிகள், மண் மற்றும் பாறையின் முதல் மாதிரிகளை செவ்வாய் கிரகத்திலிருந்து பூமிக்கு திருப்பி கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்கனவே நிலவு மற்றும் சிறுகோள்களில் (asteroids) இருந்து மாதிரிகளை பூமிக்கு கொண்டு வந்திருந்தாலும், செவ்வாய் கிரகத்தில் இருந்து அத்தகைய மாதிரிகளை திரும்பப் பெறுவதற்கான முதல் முயற்சி இதுவாகும். இரண்டு விண்வெளி நிறுவனங்களும் ஏற்கனவே செவ்வாய் கிரகத்தில் ஒரு மாதிரி குழாயை உருவாக்க முடிவு செய்துள்ளன. இது பற்றி நாசா தனது ட்விட்டர் பக்கத்தில் கோப்புக்காட்சியை வெளியிட்டுள்ளது.
Mars Sample Return would be one of the most ambitious campaigns ever attempted in space.
— NASA JPL (@NASAJPL) November 17, 2022
But bringing those samples to Earth will be no easy feat, requiring multiple spacecraft to pick up the samples, launch off the Martian surface, and ferry them back to our planet. pic.twitter.com/CCWjeO87WU
இது ஜெஸெரோ க்ரேட்டரில் உள்ள பண்டைய நதி டெல்டாவின் அடிவாரத்திற்கு அருகில் அமைந்துள்ள "three forks" பகுதியில் உள்ளது. மாதிரியை கொண்டு வரும் பணி செவ்வாய் கிரகத்தில் உள்ள perseverance rover மேற்கொள்ளும். perseverance rover ஏற்கனவே அதன் மாதிரி உறையில் மேற்பரப்பில் இருந்து கோர்க்கப்பட்ட பாறை மற்றும் மண்ணின் மாதிரிகளை சேமித்து வருகிறது.
மாதிரிகள் ஜெஸெரோ க்ரேட்டரின் வரலாறு மற்றும் செவ்வாய் கிரகணம் எவ்வாறு பரிணாம வளர்ச்சியடைந்தது என்பதைச் சொல்ல உதவும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. டெல்டாவின் நுண்ணிய வண்டல் பாறைகளிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் - பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஏரியில் டெபாசிட் செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
செவ்வாய் கிரகத்தின் காலநிலை இன்று இருப்பதை விட மிகவும் வித்தியாசமாக இருந்தபோது நுண்ணுயிர் வாழ்க்கை இருந்ததா என்பதற்கான ஆதாரங்களை கொண்டிருக்க அதிக வாய்ப்புள்ளது. ஜெஸெரோ க்ரேட்டரின் பழங்கால நதி டெல்டாவின் அடிவாரத்திற்கு அருகில் "யோரி பாஸ்" என்று அறிவியல் குழு அழைக்கும் ஒரு பகுதியை perseverance rover ஏற்கனவே ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளது.
"கரிம மற்றும் சாத்தியமான உயிரியலுக்கான எங்கள் தேடலில் இது போன்ற நுண்ணிய வண்டல் பாறைகளின் ஆய்வுக்கு அடிக்கடி முன்னுரிமை வழங்கப்படுகிறது, குறிப்பாக yori pass outcrop பற்றிய சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் பாறைப் படுக்கையானது ‘Hogwallow Flats, இல் இருப்பது போலவே அமைந்துள்ளது”என்று perseverance rover துணை திட்ட விஞ்ஞானி கேட்டி ஸ்டாக் மோர்கன் தெரிவித்தார். 14 ராக்-கோர் மாதிரிகளுடன், ரோவர் ஒரு வளிமண்டல மாதிரியையும் மூன்று சாட்சிக் குழாய்களையும் (three witness tubes) சேகரித்துள்ளது, இவை அனைத்தும் ரோவரின் வயிற்றுப் பகுதியில் சேமிக்கப்பட்டுள்ளன.