Liver : குழந்தைகளுக்கு கல்லீரல் நோய் தொற்று.. என்ன செய்யவேண்டும்? உலக சுகாதார மையம் எச்சரிப்பது என்ன?
குழந்தைகளில் ஹெபடைடிஸ் அல்லது கல்லீரல் வீக்கத்துடன் குறைந்தது 74 புகார்களை இங்கிலாந்து விசாரித்து வருகிறது என்று உலக சுகாதார அமைப்பு கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது
பல நாடுகளில் உள்ள சுகாதார அலுவலர்கள், அந்த நாட்டில் குழந்தைகளுக்கு கடுமையான கல்லீரல் நோய்த் தாக்கம் இருப்பது குறித்து புகார்களை பதிவு செய்து வருகின்றனர். வந்திருக்கும் புகார்களின் அடிப்படையில் இது பொதுவாக சளியுடன் தொடர்புடைய ஒரு வகையான வைரஸால் உண்டானதாக இருக்கலாம் என அவர்கள் கருதுகின்றனர்.
குழந்தைகளில் ஹெபடைடிஸ் அல்லது கல்லீரல் வீக்கத்துடன் குறைந்தது 74 புகார்களை இங்கிலாந்து விசாரித்து வருகிறது என்று உலக சுகாதார அமைப்பு கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. ஸ்பெயினில் இதேபோன்ற மூன்று புகார்ஜ மற்றும் அயர்லாந்தில் ஒரு சில புகார்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றன என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இதேபோன்ற ஒன்பது கேஸ்களை தாங்கள் ஆராய்ந்து வருவதாக அமெரிக்க சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். அனைத்து புகார்களும் அலபாமாவில் இருந்து பதிவாகியுள்ளன. வேறு எங்கிருந்தும் புகார் வருகிறதா என்றும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
"கடந்த ஒரு மாதத்தில் பதிவு செய்யப்பட்ட கேஸ்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் மேம்பட்ட புகார்களைத் தேடும் நடவடிக்கை ஆகியவற்றின் மூலம் மேலும் புகார் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.அதனால் வரும் நாட்களில் மேலும் வழக்குகள் அதிகமாகும்" என்று உலக சுகாதார மைய அதிகாரிகள் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இந்த மாத தொடக்கத்தில், ஸ்காட்லாந்தில் கல்லீரல் பிரச்சனைகள் உள்ள 10 குழந்தைகள் பற்றி அறிந்தபோதுதான் உலக சுகாதார மையம் இந்த நோய் பரவலைப் பற்றி முதலில் அறிந்து கொண்டது. குழந்தைகளில் ஒருவர் ஜனவரியிலும், ஒன்பது பேர் மார்ச் மாதத்திலும் நோய்வாய்ப்பட்டனர். அனைவரும் கடுமையாக நோய்வாய்ப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பிறகு ஹெபடைடிஸ் இருப்பது கண்டறியப்பட்டது.
கல்லீரல் உடலுக்கான ஊட்டச்சத்துக்களை செயல்படுத்துகிறது. இரத்தத்தை வடிகட்டுகிறது மற்றும் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுகிறது. ஆனால் இந்த நோய்த்தொற்றுகள் உண்டான நிலையில் அவை மஞ்சள் காமாலை, வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தியது என்றும் அதற்கு ஹெபடைடிஸ் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் உயிருக்கு ஆபத்தானதாக முடிகிறது என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்
ஆய்வக சோதனையானது ஹெபடைடிஸ் வகை A, B, C மற்றும் E வைரஸ்கள் பொதுவாக இத்தகைய நோய்களை உண்டாக்குவதை நிராகரித்துள்ளது. சர்வதேச பயணம் காரணமா அல்லது குழந்தைகளை பாதிக்கக் கூடிய பிற காரணிகள் ஏதும் இருக்குமா என்பது குறித்து தங்களுக்குத் தெரியாது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஆனால் அடினோவைரஸ்கள் பரவுவது சமீபத்தில் அதிகரித்து இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். இதுவரை மொத்தம் டஜன் கணக்கிலான அடினோவைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன, அவற்றில் பல சளி போன்ற அறிகுறிகள், காய்ச்சல், தொண்டை புண் போன்ற அறிகுறிகளுடன் தொடர்புடையவை. ஆனால் சில பதிப்புகள் வயிறு மற்றும் குடலில் வீக்கம் உட்பட பிற பிரச்சனைகளை தூண்டலாம். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தொற்றூநோய் ஆய்வு மையம் அடினோ வைரஸ்தான் இதற்குக் காரணம் என அனுமானிக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளது. மர்ம நோய் தாக்கத்தால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )