மேலும் அறிய

Viral Video: திடீரென கழன்று வந்த பற்கள்.. அழகிப்போட்டியில் பங்கேற்ற பெண்ணுக்கு இப்படியா? - வைரல் வீடியோ!

தாய்லாந்து நாட்டில் மிஸ் கிராண்ட் தாய்லாந்து 2026 என்ற அழகிப்போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கலந்துக் கொண்ட போட்டியாளர் கமோல்வான் சனகோ மேடையில் நின்றபோது அவரின் பற்கள் கழன்றது.

தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற அழகிப்போட்டியில் கலந்துக் கொண்ட பெண் பேசிக்கொண்டிருக்கும்போது அவரின் செயற்கை பற்கள் கழன்ற சம்பவம் அடங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

தாய்லாந்து நாட்டில் மிஸ் கிராண்ட் தாய்லாந்து 2026 என்ற அழகிப்போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கலந்துக் கொண்ட போட்டியாளர் கமோல்வான் சனகோ மேடையில் தன்னை அறிமுகப்படுத்த வருகை தந்தார். அப்போது அவரின் செயற்கைப் பற்கள் கழன்றது. நேரலையில் நடந்த இந்த சம்பவத்தை கண்ட நடுவர்களும் பார்வையாளர்களும் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. பலரும் அந்த போட்டியாளரான கமோல்வான் சனகோவை உண்மையான அழகி என்றும் புகழ்ந்தனர். 

காரணம், ஒரு மேடையில் அதுவும் மிகப்பெரிய நிகழ்வில் தான் பேச வந்தபோது நடைபெற்ற இந்த சம்பவத்தைக் கண்டு கமோல்வான் சனகோ கொஞ்சம் கூட பதற்றப்பட்டாமல் அமைதியாக அந்த சூழலை கையாண்டார். பற்கள் கழண்டதும் அவர் மேடையை விட்டு விலகி செல்வார் என பலரும் எதிர்பார்த்த நிலையில் கமோல்வான் சனகோ சில வினாடிகள் பின்னால் திரும்பி தனது பற்களை சரி செய்து பேச தொடங்கினார். இந்த சம்பவம் அவருக்கான பாராட்டுகளைப் பெற்றுக் கொடுத்தது. 

தன்னம்பிக்கையுடன் செயல்பட்ட நிலையில் கமோல்வான் சனகோ அங்கிருந்த அனைவரின் மனதையும் வென்றிருக்கிறார். தொடர்ந்து அங்கிருந்த புகைப்படக்காரர்களுக்கு உற்சாகமாக போஸ் கொடுத்தார்.  கமோல்வான் சனகோவுக்கு கிடைத்த கைதட்டலும் பாராட்டும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. பலரும் அவரின் நளினத்தையும், நிதானத்தையும் பாராட்டினர்.

இணையத்தில் வைரலாகும் வீடியோ

தனக்கு ஏற்பட்ட பதற்றமான சூழலை சமாளிக்க அவர் கையாண்ட விதத்திற்காகவே கமோல்வான் சனகோ அழகி போட்டியில் பட்டம் வெல்ல வேண்டும் என சமூக வலைத்தளத்தில் பலரும் தெரிவித்துள்ளனர். கமோல்வான் சனகோ மீம் டெம்பிளேட் ஆக மாறியுள்ளார். இப்போதெல்லாம் மிகச் சிறிய தவறுகள் கூட இணையத்தில் டிரெண்ட் ஆகிவிடுகிறது. இதனிடையே கமோல்வான் சனகோ போட்டியில் மேலும் பிரபலமடைய இந்த சம்பவம் காரணமாக மாறிவிடும் என பலரும் கணித்துள்ளனர். 

இந்த அழகி போட்டியின் வெற்றியாளர் மார்ச் 28ம் தேதி அறிவிக்கப்படவுள்ளார். இதில் இந்தியாவில் நடைபெறும் மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் 2026 அழகிப் போட்டியில் தாய்லாந்து சார்பாகப் பங்கேற்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Russia Crude Oil Tariff: ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதல்; இந்தியா மீது 100% வரி விதிக்குமா அமெரிக்கா.? வெளியுறவு அமைச்சகம் பதில்
ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதல்; இந்தியா மீது 100% வரி விதிக்குமா அமெரிக்கா.? வெளியுறவு அமைச்சகம் பதில்
US Iran War: 7-வது நாளாக அடித்து நொறுக்கும் அமெரிக்கா; அசராமல் பதிலடி கொடுக்கும் ஈரான்; CENTCOM கூறுவது என்ன.?
7-வது நாளாக அடித்து நொறுக்கும் அமெரிக்கா; அசராமல் பதிலடி கொடுக்கும் ஈரான்; CENTCOM கூறுவது என்ன.?
Iraq Vs Donald Trump: 'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
US Iran War: பின்னி பெடலெடுக்கும் ஈரான்! அமெரிக்க போர் விமானங்கள், ஜோர்டான் விமானப்படை தளம் அழிப்பு என அறிவிப்பு
பின்னி பெடலெடுக்கும் ஈரான்! அமெரிக்க போர் விமானங்கள், ஜோர்டான் விமானப்படை தளம் அழிப்பு என அறிவிப்பு

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
குறைகளைக் கொட்டிய சமூகநீதி விடுதி மாணவர்கள்.. ஒரே நாளில் ஆக்‌ஷன் எடுத்த விஜய்..குவியும் பாராட்டு!
குறைகளைக் கொட்டிய சமூகநீதி விடுதி மாணவர்கள்.. ஒரே நாளில் ஆக்‌ஷன் எடுத்த விஜய்..குவியும் பாராட்டு!
Lexus LM 350h Review: விமானமே தோத்துரும்..முதல்வர் விஜயின் Most Fav, சொகுசின் உச்சம்- லெக்சஸ் சாரில் இவ்ளோ அம்சங்களா?
Lexus LM 350h Review: விமானமே தோத்துரும்..முதல்வர் விஜயின் Most Fav, சொகுசின் உச்சம்- லெக்சஸ் சாரில் இவ்ளோ அம்சங்களா?
Russia Crude Oil Tariff: ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதல்; இந்தியா மீது 100% வரி விதிக்குமா அமெரிக்கா.? வெளியுறவு அமைச்சகம் பதில்
ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதல்; இந்தியா மீது 100% வரி விதிக்குமா அமெரிக்கா.? வெளியுறவு அமைச்சகம் பதில்
நாம் தமிழர் கட்சியே வேண்டாம்.. விலகிய இயக்குநர் மு.களஞ்சியம்.. பரபரப்பு குற்றச்சாட்டு!
நாம் தமிழர் கட்சியே வேண்டாம்.. விலகிய இயக்குநர் மு.களஞ்சியம்.. பரபரப்பு குற்றச்சாட்டு!
Chennai Bengaluru Bullet Train: ரூ.18,000 கோடி பட்ஜெட், சென்னை டூ பெங்களூரு புல்லட் ரயில், 350KM ஸ்பீட், 73 நிமிடங்கள் போதும்
ரூ.18,000 கோடி பட்ஜெட், சென்னை டூ பெங்களூரு புல்லட் ரயில், 350KM ஸ்பீட், 73 நிமிடங்கள் போதும்
Upcoming Hybrid SUVs Diwali: தீபாவளிக்கு டபுள் தமாகா.! வெளியாகும் கியா சொரெண்டோ, ரெனால்ட் டஸ்டர் ஹைப்ரிட் SUV-க்கள்; முழு விவரம்
தீபாவளிக்கு டபுள் தமாகா.! வெளியாகும் கியா சொரெண்டோ, ரெனால்ட் டஸ்டர் ஹைப்ரிட் SUV-க்கள்; முழு விவரம்
US Iran War: 7-வது நாளாக அடித்து நொறுக்கும் அமெரிக்கா; அசராமல் பதிலடி கொடுக்கும் ஈரான்; CENTCOM கூறுவது என்ன.?
7-வது நாளாக அடித்து நொறுக்கும் அமெரிக்கா; அசராமல் பதிலடி கொடுக்கும் ஈரான்; CENTCOM கூறுவது என்ன.?
சென்னை CMDA திவால்: ஊதியத்திற்கே பணமில்லை! - வெள்ளை அறிக்கை வெளியிட அன்புமணி கோரிக்கை
சென்னை CMDA திவால்: ஊதியத்திற்கே பணமில்லை! - வெள்ளை அறிக்கை வெளியிட அன்புமணி கோரிக்கை
Embed widget