கோடைகாலம் தொடங்கி விட்டாலே அதிக வியர்வை, உடல்சூடு என பல பிரச்னைகளை நம்மை சீண்டிப் பார்க்கும்.
அதில் மிக மோசமானது தொடை இடுக்குகளிலும், அந்தரங்க பகுதிகளிலும் உண்டாகும் அரிப்பு. இதனை தடுப்பதே பெரும்பாடான விஷயமாகும்.
இத்தகைய அரிப்பை சில விஷயங்களைப் பயன்படுத்தி நம்மால் எளிதாக தடுக்க முடியும்.
முதலில் கோடை காலத்தில் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். காலை, மாலை இருவேளைகளிலும் குளிக்கலாம்.
சுத்தமான, நன்கு காய்ந்த பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். பிற ஆடைகள் வியர்வையால் சருமத்தில் ஒட்டி பாதிப்பை உண்டாக்கலாம்.
உள்ளாடைகளை நன்கு துவைத்து பயன்படுத்த வேண்டும். ஈரமாகவோ அல்லது மிகவும் இறுக்கமாகவோ அணியக்கூடாது.
இடுப்புப்பகுதிக்கு கீழ் காற்றோட்டமாக இருக்கும் வகையில் ஆடை அணிய வேண்டும். சரும பிரச்னை இருப்பவர்கள் வெந்நீரில் துணிகளை துவைக்கலாம்.
தொடை இடுக்கு, அந்தரங்க பகுதிகளில் அரிப்பு, சிவத்தல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் எக்காரணம் கொண்டும் சுயமாக மருத்து எடுக்கக்கூடாது.
பவுடர் தொடங்கி சென்ட் வரையிலான பொருட்களை கோடைக்காலத்தில் தவிர்ப்பது நல்லது. இது வியர்வையுடன் கலந்து சரும பிரச்னையை உண்டாக்கும்.
தொடை இடுக்கில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட மருத்துவரை அணுகி தீர்வு காண வேண்டும். இல்லாவிட்டால் அது தீர்க்க முடியாத பிரச்னையாக சீசன் காலத்தில் நம்மை தொடர வாய்ப்புள்ளது.