மேலும் அறிய

குறைகளைக் கொட்டிய சமூகநீதி விடுதி மாணவர்கள்.. ஒரே நாளில் ஆக்‌ஷன் எடுத்த விஜய்..குவியும் பாராட்டு!

முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சமூக நீதி விடுதிக்கு திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சமூக நீதி விடுதியில் முதலமைச்சர் விஜய் ஆய்வு செய்த நிலையில், அங்கு மாணவர்கள் வைத்த கோரிக்கைகள் அனைத்தும் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய அளவில் பாராட்டைப் பெற்றுள்ளது. 

சைதாப்பேட்டை சமூக நீதி விடுதி

சென்னை, சைதாப்பேட்டையில் மெட்ரோ ரயில் நிலையம் அருகே எம்.சி. ராஜா சமூக நீதி மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதி கடந்த திமுக ஆட்சியில்  10 தளங்களுடன் ரூ. 44.5 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டது. இந்த விடுதியில் சென்னையில் பல கல்லூரிகளில் பயிலும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்கியுள்ளனர். 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி அப்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த விடுதியை திறந்து வைத்தார்.

முதல்வர் விஜய் திடீர் ஆய்வு

இதனிடையே தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், நேற்று திடீரென இந்த விடுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு தங்கியிருக்கும் மாணவர்கள் தங்களுக்கு நிகழ்ந்த அநீதி குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். 

அதாவது குடீநீர் பிரசினை, தரமற்ற உணவு, அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மரியாதையின்றி பேசுவது, விடுதிக்கான விளையாட்டு மைதானம் பூட்டப்பட்டு கிடப்படது, பகுதி நேர பணி செய்பவர்கள் இரவில் வெளியில் கொசுக்கடியில் தூங்க விடுவது, பணியாளர் பற்றாக்குறை என பல வகையான புகார்கள் முன்வைக்கப்பட்டது. 

முதலமைச்சர் விஜய் இந்த ஆய்வை எவ்வித முன்னறிவிப்புமின்றி மேற்கொண்டார். கழிவறை முதற்கொண்டு அவரே நேரடியாக ஆய்வு செய்தார். இந்த நிகழ்வின்போது சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார்  ஆகியோர் உடனிருந்தனர். கைகளைக் கட்டிக்கொண்டு மாணவர்கள் சொன்ன அனைத்து குறைகளையும் பொறுமையுடன் கேட்டு விஜய் குறித்துக் கொண்டார். அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கண்டு தருவதாகவும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் வன்னி அரசு, சம்பத் குமார் இருவரும் அந்த விடுதியின் இரவு உணவினை உண்டு ஆய்வு செய்தனர். 

Also Read: N Anand: தலைவருடன் தொடரும் நிழலே.. அன்புள்ள அப்பா.. அமைச்சர் ஆனந்துக்கு விதவிதமாக பிறந்தநாள் வாழ்த்து!

ஒரே நாளில் பிரச்னைகளுக்கு தீர்வு

முதலமசிசர் விஜயிடம் எம்.சி.ராஜா சமூக நீதி விடுதி மாணவர்கள் முன்வைத்த அனைத்து கோரிக்கைகளும் சமூகநீதி துறை மூலம் உடனடியாக நிறைவேற்றப்பட்டன. அதன்படி தரமான உணவு வழங்க விடுதி உணவுப் பட்டியல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எரிவாயு தட்டுப்பாட்டால் நிறுத்தப்பட்ட இட்லி, சப்பாத்தி மீண்டும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. நீண்டநாளாக மூடப்பட்டிருந்த வாலிபால் மைதானம் மாணவர்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும். பகுதி நேர பணி செய்யும் மாணவர்கள் இரவு 12 மணி வரை விடுதிக்குள் நுழைய அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தரமான உணவு வழங்கலை கண்காணிக்க சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை பொதுமக்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

பழனிகோயில் பத்திரப்பதிவு விவகாரம்... வழக்கறிஞர் அன்வர்தீன் மரணம்: சிறையில் நடந்தது என்ன? நீதிபதி விசாரணை!
பழனிகோயில் பத்திரப்பதிவு விவகாரம்... வழக்கறிஞர் அன்வர்தீன் மரணம்: சிறையில் நடந்தது என்ன? நீதிபதி விசாரணை!
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
சிறையில் வழக்கறிஞர் மரணம் சாதாரணமானதல்ல.. உடனே சிபிஐ-க்கு மாற்றணும்! பழனி கோயில் விவகாரத்தில் கொதிக்கும் டிடிவி தினகரன்
சிறையில் வழக்கறிஞர் மரணம் சாதாரணமானதல்ல.. உடனே சிபிஐ-க்கு மாற்றணும்! பழனி கோயில் விவகாரத்தில் கொதிக்கும் டிடிவி தினகரன்
சுதந்திரத்திற்குப் பின் முதல்முறையாக கிராமத்திற்குள் நுழைந்த அரசு பேருந்து! கொண்டாட்டத்தில் கிராம மக்கள்!
சுதந்திரத்திற்குப் பின் முதல்முறையாக கிராமத்திற்குள் நுழைந்த அரசு பேருந்து! கொண்டாட்டத்தில் கிராம மக்கள்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget