Lexus LM 350h Review: விமானமே தோத்துரும்..முதல்வர் விஜயின் Most Fav, சொகுசின் உச்சம்- லெக்சஸ் சாரில் இவ்ளோ அம்சங்களா?
Lexus LM 350h Review India: பல்வேறு பிரபலங்கள் பயன்படுத்தி வரும் லெக்ஸஸ் LM 350h சொகுசு கார் குறித்த முழுமையான ரிவ்யூ இதோ உங்களுக்காக!

முதல்வர் விஜய், நடிகர் ரன்பீர் கபூர், விளையாட்டு வீரர் ஹர்திக் பாண்டியா போன்ற பிரபலங்கள் பயன்படுத்தும் லெக்ஸஸ் LM 350h (Lexus LM 350h) சொகுசு கார் குறித்த முழுமையான ரிவ்யூ இதோ!
வெளிப்புற வடிவமைப்பு
பிரம்மாண்டமான தோற்றத்தைக் கொண்ட இந்த லெக்சஸ் காரின் முன்புறத்தில், மிகப்பெரிய லெக்ஸஸ் கிரில் மற்றும் ஏராளமான குரோம் வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அகலமான கண்ணாடிகள், எலக்ட்ரிக் மூலம் திறக்கப்படும் ஸ்லைடிங் கதவுகள் மற்றும் 19 இன்ச் அலாய் வீல்கள் இதன் முக்கிய வெளிப்புற சிறப்பம்சங்களாகும்.

உட்புற கட்டமைப்பு, சிறப்பம்சங்கள்
இதன் 4-சீட்டர் மாடல், விமானத்தின் முதல் வகுப்பு பயண அனுபவத்தை அப்படியே தருகிறது. சொல்லப்போனால் விமான ஜெட்டில் கூட இத்தனை இட வசதி இருக்காது. கேபினில் 48-இன்ச் பிரம்மாண்டமான அல்ட்ரா வைடு திரை கொடுக்கப்பட்டுள்ளது. இதனை இரண்டாகப் பிரித்து இரண்டு பயணிகளும் தனித்தனியாக திரையைப் பயன்படுத்தும் வசதியும், 23 ஸ்பீக்கர்கள் கொண்ட மார்க் லெவின்சன் ஆடியோ சிஸ்டமும் உள்ளன.
பிரைவசி வசதி
ஓட்டுநர் பகுதியையும், பின்னால் அமர்ந்திருக்கும் பயணிகள் பகுதியையும் பிரிக்க, தேவைப்படும்போது வெளிச்சம் தெரியாதவாறு டிம் செய்து கொள்ளக்கூடிய ஸ்மார்ட் கிளாஸ் தடுப்பு உள்ளது.

இருக்கைகள்
முழுமையாகப் படுத்துறங்கும் வசதி (Reclining), ஹீட்டிங், கூலிங் மற்றும் மசாஜ் வசதிகளுடன் கூடிய கேப்டன் இருக்கைகள் உள்ளன.
இருக்கை, ஏசி, திரை ஆகியவற்றை சுலபமாக இயக்க, ஸ்மார்ட்போன் வடிவிலான இரண்டு பிரத்யேக ரிமோட் கண்ட்ரோல்கள், மினி பிரிட்ஜ், குடை வைக்கும் இடம் மற்றும் இரண்டு சன்ரூஃப்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இன்ஜின், டிரைவிங்
இதில் 2.5 லிட்டர் செல்ஃப் சார்ஜிங் பெட்ரோல் ஹைப்ரிட் இன்ஜின் மற்றும் ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. சொகுசு கார் என்பதால், வேகத்தை விட, அதிர்வில்லாத, மென்மையான பயணத்தை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாக உள்ளது.
இதில் உள்ள சிறப்பான சஸ்பென்ஷன் அமைப்பு, மோசமான சாலைகளிலும் குலுங்காத பயணத்தை உறுதி செய்கிறது. காரின் உள்ளே எவ்வித இன்ஜின் அல்லது வெளிப்புற சத்தமும் துளியும் கேட்காதவாறு அமைதியான முறையில் கேபின் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஹைப்ரிட் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதால், இவ்வளவு பெரிய மற்றும் கனமான காராக இருந்தபோதிலும், லிட்டருக்கு 10 கி.மீ. என்ற மைலேஜை வழங்குகிறது.
விலை விவரம்
இந்தியாவில் இதன் விலை ரூ.2.5 கோடி முதல் ரூ.2.7 கோடி வரையாகும். இது 4-சீட்டர் மற்றும் 7-சீட்டர் என இரண்டு வடிவமைப்புகளில் கிடைக்கிறது. வழக்கமான ஆடம்பர செடான் கார்களை விட அதிக இடவசதியையும், சொகுசு வசதிகளையும் வழங்குவதாலேயே பிரபலங்கள் இதை அதிகம் வாங்குகின்றனர்
முழுமையான ஆடம்பரம், அமைதி மற்றும் பிரைவசியை எதிர்பார்ப்போருக்கான மிகச்சிறந்த கார் இதுவாகும்.
ட்ரெண்டிங் செய்திகள்























