Viral news: டேட்டிங் செய்ய வராமல் ஏமாற்றிய நபர்... 8 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றம் சென்ற பெண்
டேட்டிங் செய்ய வராமல் ஏமாற்றிய நபரிடம் 8 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு பெண் ஒருவர் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
வெளிநாடுகளில் பொதுவாக காதலர்கள் டேட்டிங் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அப்படி டேட்டிங் செய்ய ஒப்புக் கொண்ட நண்பர் ஒருவர் வரவில்லை என்பதால் அவருடைய தோழி 8 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.
அமெரிக்காவின் மிச்சிகன் பகுதியைச் சேர்ந்தவர் குவாசோண்டே ஷார்ட். இவருக்கும் ரிச்சர்ட் ஜோர்டன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து இருவரும் சந்தித்து டேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளனர். இதற்கான நேரம் மற்றும் இடத்தை உறுதி செய்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து டேட்டிங் நாளன்று திடீரென்று வரவில்லை என்று ரிச்சர்ட் ஜோர்டன் தெரிவித்துள்ளார். இதனால் ஷார்ட் மிகவும் மன உளச்சலுக்கு உள்ளாகியுள்ளார். மேலும் தனக்கு மன உளச்சல் ஏற்பட்டதாக கூறி 2020ஆம் ஆண்டு ஷார்ட் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அந்த மனுவில் ரிச்சர்ட் வேண்டுமென்றே தன்னுடைய உணர்வுகளை மதிக்காமல் காயப்படுத்தியதாக தெரிவித்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தது. அதில் வாதாடிய ரிச்சர்ட், “நாங்கள் டேட்டிங் செல்ல ஒருநாளை முடிவு செய்தோம். ஆனால் அந்த நாளில் டேட்டிங் செல்லவில்லை. அதற்காக என்மேல் 10 ஆயிரம் டாலர் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது நிச்சயம் தேவையில்லாத ஒன்று. இதை விசாரித்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்காதீர்கள்” எனக் கூறப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இந்த வழக்கை ஒரு மாவட்ட நீதிமன்றம் விசாரிக்க முடியாது. இந்த வழக்கு தொடர்பான மனுவை சர்கியூட் நீதிமன்றத்தில் முதலில் தாக்கல் செய்யவேண்டும். அங்கு தான் இது முறையாக விசாரிக்கப்படும் என்று கருத்து தெரிவித்து வழக்கை தள்ளுப்படி செய்தார். இதைத் தொடர்ந்து இந்த வழக்கை ஷார்ட் சர்கியூட் நீதிமன்றத்தில் தொடர உள்ளார். தன்னை ஏமாற்றிய நபர் தனக்கு உரிய நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று ஷார்ட் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே இந்த வழக்கின் விசாரணை தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோ காரணமாக இந்த வழக்கு தொடர்பான விவரங்கள் மீண்டும் வைரலாகி வருகிறது. டேட்டிங் செய்ய வரவில்லை என்பதற்காக ஆண் நண்பரிடம் 8 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கேட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்