Mayan city: 1500-ஆண்டுகள் பழமையான நகரம்- மெக்சிகோ தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு!
மாயன் காலத்தில் கட்டப்பட்ட அரண்மனை, கட்டிடம் தொடர்பானவைகளை மெக்சிகோவில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்களாக கருதப்படும் மாயன் சமுதாய மக்களின் நாகரிகத்தை பிரதிபலிக்கும் கலைப் பொருட்கள், அவர்கள் பயன்படுத்திய ஜாடிகள் மற்றும் குகை ஓவியங்கள் ஆகியவை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் அவ்வபோது கண்டெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது மாயன் காலத்தில் கட்டப்பட்ட வணிக வளாகங்கள், படிக்கட்டுகள், கல்லில் செதுக்கிய உருவங்கள், cenote என்றழைக்கப்படும் நீர் தேக்கங்கள் இருந்ததற்கான அடையாளங்கள் போன்றவைகள் மெக்சிகோ நகரில் கட்டிடம் கட்டும் பணியின்போது கண்டறியப்பட்டுள்ளது.
Un proyecto conducido por investigadoras del INAH y del Centro Nacional para la Investigación Científica de Francia, cuestiona los orígenes de 786 piezas líticas antropomorfas recuperadas en #Xochicalco.
— INAHmx (@INAHmx) May 28, 2022
Lee más en nuestro #boletin: https://t.co/xGuHvjExDa#ContigoEnLaDistancia pic.twitter.com/BMjEGAdqmw
மெக்சிகோ மாயன் அரண்மனை கண்டுபிடுப்புகள் கண்காட்சி
மெக்சிகோவில் Yucatan பகுதியில் நடைபெற்ற கட்டிடம் கட்டும் பணியின்போது, மாயன் நாகரீகம் இருந்த காலத்தில் அரண்மனை மற்றும் அவர்கள் பயன்படுத்தியவைகளை காட்சிப்படுத்தியுள்ளனர். மெக்சிகோ தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்.
Xiol என்ற பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட நிலத்தின் உரிமையாளர்களில் ஒருவரான Mauricio Montalvo, EFE க்கு விளக்கினார், “முதலில் நாங்கள் ஒரு மாபெரும் கல்லைக் கண்டெடுத்தோம். நாங்கள் மண்ணை தோண்டியபோது பல மகத்தான கட்டிடங்கள் குறித்தவைகளை கண்டெடுத்தோம்.” என்றார்.
Archaeologists discover ancient Mayan city on construction site https://t.co/fymFfACIGS pic.twitter.com/9SxAqR8vsj
— Reuters (@Reuters) May 27, 2022
கிளாசிக் காலத்திற்கு முந்தைய (கிமு 700-350) பல கருவிகள் மற்றும் மட்பாண்டங்கள் ஆராய்ச்சியாளர்களால் காட்சிப்படுத்தப்பட்டன.
இதில், மாயன் காலத்தில் கட்டப்பட்ட அரண்மனை, படிக்கட்டுகள், போன்றவைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். 15 நபரின் இறந்த உடல்களின் எலும்புகள், குழந்தைகளின் எலும்புகள் ஆகியவகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
National Institute for Anthropology and History (INAH) -இன் ஆராய்ச்சியாளர்கள் 2018 ஆம் ஆண்டில் இருந்து மெக்சிகோ நகரில் தென் கிழக்கு பகுதியில் மாயன் நாகரீக மக்களின் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் கண்டெடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பல ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது.
யார் இவர்கள்? மாயன் நாகரிகம்:
கிறிஸ்து பிறப்பு முன்னமே இந்த மாயா நாகரீகம் இருந்ததாக கூறப்படுகிறது.
'மாயா நாகரிகம்'' என்பது மெசோ அமெரிக்கா (மத்திய கால அமெரிக்கா) என்ற இடத்தில் தோன்றியதாகும். மிகப்பெரிய பரப்பளவைக் கொண்ட இந்த இடம், மத்திய அமெரிக்காவின் மெக்சிகோவை உள்ளடக்கியது.
அந்த காலத்தில் மாயா (மாயா என்பது மக்கள் பின்பற்றிய நாகரிகம், அவர்கள் பேசும் மொழி மாயன்) இம்மக்கள், பிரமிப்பூட்டும் வகையில் போன்ற பல நகரங்களை கட்டியெழுப்பினார்கள்.
அவர்கள் தங்களுக்கென ஒரு பொதுவான நம்பிக்கை மற்றும் பாரம்பரியத்தை பின்பற்றி வந்தார்கள்.
வானில் நட்சத்திரங்களை படிப்பது, விண்ணுலக வரைபடத்தை பிரதிபலிக்கும் நகரங்களை கட்டியெழுப்பியது என வியத்தகு படைப்புகளை அவர்கள் உலகுக்கு வழங்கினர்.
மழைக்காடுகளில் வாழும் உயிரினங்களால் ஈர்க்கப்பட்ட அவர்கள், விலங்குகள், தாவரங்கள், ஆவிகளுடன் தொடர்பில் இருத்தல் போன்ற பல வழக்கங்களை கொண்டிருந்தார்கள். ஸ்பெயின் இப்பகுதியை கைப்பற்றியதற்கு பின் மாயன் நாகரிகம் அழிய தொடங்கியதாக வரலாறு கூறுகிறது. இது தொடர்பாக பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்