MC Donalds : பர்கரால் ஒரு நொடி அதிர்ந்துபோன வாடிக்கையாளர்... மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்திற்கு அதிரடி உத்தரவு... என்ன நடந்தது தெரியுமா...?
வாடிக்கையாளருக்கு பரிமாறிய சீஸ் பர்கரில் எலியின் எச்சம் இருந்ததால் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
MC Donalds : வாடிக்கையாளருக்கு பரிமாறிய சீஸ் பர்கரில் எலியின் எச்சம் இருந்ததால் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மெக்டொனால்ட்ஸ்
மெக்டொனால்ட்ஸ் ஒரு புகழ்பெற்ற துரித உணவகம். இது 1940 ஆண்டில் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டு, இன்று உலகின் பல பகுதிகளிலும் 31,000 கிளைகளைக் கொண்டுள்ளது. 1940-ம் ஆண்டு, கலிபோர்னியாவைச் சேர்ந்த ரிச்சர்ட் மற்றும் மோரிஸ் மெக்டொனால்டு சகோதரர்களால் மிகவும் சிறியளவில் ஆரம்பிக்கப்பட்ட `டிரைவ்-இன்' ஹாம்பர்கர் ரெஸ்டாரன்ட்தான் இன்று உலகமே கண்டு வியக்கும் `மெக்டொனால்ட்ஸ்' ஆக செயல்படுகிறது.
பர்கரில் எலி எச்சம்
இப்படி அனைவரும் விரும்பி செல்லக்கூடிய மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் கிழக்கு லண்டனில் உள்ள ஒரு மெக்டொனால்ட் கடைக்கு பெண் ஒருவர் சென்றிருந்தார். அப்போது சீஸ் பர்கரை ஆர்டர் செய்துள்ளார். சிறிது நேரம் அந்த வாடிக்கையாளருக்கு பரிமாறப்பட்ட சீஸ் பர்கரை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அந்த சீஸ் பர்கரில் எலி எச்சம் இருந்துள்ளது. இதனால் இதை பார்த்து அதிர்ந்துபோன வாடிக்கையாளர் இது பற்றி புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரை அடுத்து, சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதிகாரிகள் கடையயை பார்வையிட்டு, அசுத்தமான நிலையில் இயங்கி வருவதை கண்காணித்தனர். எலியின் எச்சங்கள் சிதைந்து கிடைப்பதையும், உணவு தயாரிக்கும் இடம் அசுத்தமாக இருப்பதையும் அதிகாரிகள் கண்டறிந்தனர். மேலும், அங்கு வேலை பார்க்கும் பணியாளர் அறையும், உணவு சேமிப்பு பகுதியும் சுகாதாரமற்றதாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
அபராதம்
இதனை அடுத்து, இதுபோன்று அசுத்தமாக கடையை வைத்திருப்பது உடல்நலத்திற்கு கேடு என்று கூறி உடனடியாக கடையை மூட உத்தரவிட்டனர். அதேபோன்று எலி எச்சம் இருந்த பர்கரை வாடிக்கையாளருக்கு வழங்கியதற்காக மெக்டெனால்ட் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதன்படி, சம்பந்தபட்ட வாடிக்கையாளருக்கு நஷ்ட ஈடாக ரூ. 5 கோடி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் அடிப்படையில் சோதனை செய்ததில் தவறு உறுதி செய்யப்பட்டது. இதனால், சுகாதாரமின்மை காரணங்களுக்காக 10 நாட்களுக்கு உணவுகத்தை மூடவும், நஷ்ட ஈடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட உணவுகம் மன்னிப்பு கோரியுள்ளது.
முன்னதாக, குழந்தைகளை வேலைக்கு அமர்த்தியதாக எழுந்த புகாரில் மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள கென்டக்கி மாநிலத்தில் உள்ள மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்தில் சட்டவிரோதமாக குழந்தைகளை வேலைக்கு வைத்துள்ளதாக புகார் எழுந்தது. இதனை அடுத்து அமெரிக்காவில் உள்ள 3 மெக்டொனால்ட் உணவகத்திற்கு தலா ரூ.2.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.