Mark Zuckerberg: புத்தாண்டுக்கு இனிப்பான செய்தி சொன்ன ஃபேஸ்புக் சி.இ.ஓ...! குவியும் வாழ்த்துகள்
ஃபேஸ்புக் சி.இ.ஓ. மார்க் ஜூக்கர்பெர்க் - ஷான் தம்பதிகளுக்கு விரைவில் மூன்றாவது குழந்தை பிறக்க உள்ளது.
உலகெங்கிலும் மிகப்பெரிய சமூக வலைதளமான ஃபேஸ்புக்கை உருவாக்கியவர் மார்க் ஜூக்கர்பெர்க். தற்போது, இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் நிறுவனங்களையும் இவர்தான் நிர்வகித்து வருகிறார். இந்த நிலையில், மார்க் ஜூக்கர்பெர்க் 2023ம் ஆண்டு பிறந்ததை முன்னிட்டு, மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களுடன் இனிப்பான செய்தியையும் தெரிவித்துள்ளார்.
மார்க் ஜூக்கர்பெர்க்:
மெட்டா நிறுவனத்தின் சி.இ.ஓ.வான மார்க் ஜூக்கர்பெர்க் தனது மனைவி ஷான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தங்களுக்கு மூன்றாவதாக குழந்தை பிறக்கப்போவதை அறிவித்துள்ளார். கர்ப்பமாக உள்ள தனது மனைவி ஷானுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து மேக்ஸ் மற்றும் ஆகஸ்ட் ஆகிய இருவருக்கும் தங்கை பிறக்க உள்ளதாக பகிர்ந்துள்ளார்.
மார்க் ஜூக்கர்பெர்க் – ஷான் ஆகிய இருவருக்கும் இடையே 2012ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
View this post on Instagram
விரைவில் 3வது குழந்தை:
இந்த தம்பதியினருக்கு கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பெண் குழந்தை பிறந்தது. மேக்சிமா என்று அந்த குழந்தைக்கு பெயர் வைத்துள்ளனர். பின்னர், 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2வதாக பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஆகஸ்ட் என்று பெயர் வைத்துள்ளனர்.
தற்போது இந்த தம்பதியினருக்கு மூன்றாவது பெண் குழந்தை பிறக்க உள்ளது. 2003ம் ஆண்டு ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் படிக்கும்போது இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. கடந்தாண்டு இவர்கள் இருவரும் தங்களது 10வது திருமண நாளை கொண்டாடினர்.
மார்க் ஜூக்கர்பெர்க் மனைவி குழந்தை நல மருத்துவர். இவர் ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் படித்த பிறகு கலிபோர்னியா பல்கலைகழகத்தில் மருத்துவ படிப்பை முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.