மேலும் அறிய

பிரிட்டிஷ் மன்னர் சார்லஸ் மீது முட்டை வீச்சு! ஒரு மாதத்தில் இரண்டாவது சம்பவம்… என்ன காரணம்?

லண்டனுக்கு வடக்கே 30 மைல் (46 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள லூடனில் உள்ள டவுன் ஹாலுக்கு வெளியே மன்னர் சார்லஸ் பொதுமக்களைச் சந்தித்துக் கொண்டிருந்தபோது, முட்டை வீசப்பட்டதாகத் தெரிகிறது.

லண்டனுக்கு அருகிலுள்ள ஒரு நகரத்திற்கு சென்றபோது மூன்றாம் சார்லஸ் மன்னர் மீது முட்டை வீசப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர்.

மன்னர் மீது முட்டை வீச்சு

பெட்ஃபோர்ட்ஷையர் காவல் துறையினர் கூறுகையில், 20 வயதுடைய ஒரு நபர் ஒரு பொதுவான தாக்குதல் தொடர்பாக கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. லண்டனுக்கு வடக்கே 30 மைல் (46 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள லூடனில் உள்ள டவுன் ஹாலுக்கு வெளியே மன்னர் சார்லஸ் பொதுமக்களைச் சந்தித்துக் கொண்டிருந்தபோது, முட்டை வீசப்பட்டதாகத் தெரிகிறது. அவர் தனது பாதுகாவலர்களால் வேறு பகுதிக்கு மாற்றப்பட்ட பிறகு சிறிது நேரம் சென்று மீண்டும் பொதுமக்களை சந்தித்து கை குலுக்கி உள்ளார். 

பிரிட்டிஷ் மன்னர் சார்லஸ் மீது முட்டை வீச்சு! ஒரு மாதத்தில் இரண்டாவது சம்பவம்… என்ன காரணம்?

இரண்டாம் முறையாக தொடரும் சம்பவம்

செப்டம்பரில் அவரது தாயார் இரண்டாம் எலிசபெத் இறந்த பிறகு மன்னரான பிறகு அவர் பிரிட்டன் முழுவதும் பரவலாக பயணம் செய்து வருகிறார். அவர் கடந்த செவ்வாயன்று லூடனில் உள்ள ஒரு போக்குவரத்து நிலையம் மற்றும் ஒரு சீக்கிய வழிபாட்டு இல்லம், குருத்வாரா உட்பட பல தளங்களைப் பார்வையிட இருந்தார். இந்த நிலையில் தான் இந்த முட்டை வீச்சு சம்பவம் நடந்துள்ளது. கடந்த மாதம், இதே போன்று வடக்கு இங்கிலாந்தின் யார்க் நகருக்கு சென்றிருந்த மன்னர் சார்லஸ் மற்றும் அவர் மனைவியான கமிலா மீது முட்டை வீசப்பட்ட சம்பவத்தில் 23 வயது இளைஞன் கைது செய்யப்பட்டார். பின்னர் அந்த நபர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 

தொடர்புடைய செய்திகள்: அடிக்கடி செல்போனில் பேசிய மனைவி... ஆத்திரத்தில் தாலியால் கழுத்தை நெரித்து கொன்ற காதல் கணவன் - நடந்தது என்ன?

நெட்ஃப்ளிக்ஸ் டாக்குமெண்ட்ரி காரணமா?

மன்னரின் இளைய மகன் இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் பற்றிய நெட்ஃபிக்ஸ் ஆவணத் தொடரை அரச குடும்பம் வியாழன் அன்று வெளியிடத் தயாராகி வருவதையும், அரச குடும்பத்தைப் பற்றிய அவர்களின் சமீபத்திய எதிர்பார்க்கப்பட்ட விமர்சனங்களையும் தொடர்ந்து இந்த முட்டை வீச்சு சம்பவங்கள் வந்துள்ளதால் அதுவும் காரணமாக இருக்கலாம் என்று காவல்துறையினர் கருதுகின்றனர்.

பிரிட்டிஷ் மன்னர் சார்லஸ் மீது முட்டை வீச்சு! ஒரு மாதத்தில் இரண்டாவது சம்பவம்… என்ன காரணம்?

1995 முதல் தொடர்ந்து வரும் சம்பவம்

பக்கிங்ஹாம் அரண்மனை விழாவில் ஒரு விருந்தினர்களால் இனம் மற்றும் தேசியம் குறித்து "ஏற்றுக்கொள்ள முடியாத" கருத்துக்களைத் தெரிவித்த பின்னர், சார்லஸின் மூத்த மகன் இளவரசர் வில்லியமின் தெய்வமகள் சம்பந்தப்பட்ட புதிய சர்ச்சையில் அரச குடும்பம் சிக்கிய ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. முட்டை வீச்சுகள் இங்கிலாந்து அரச குடும்பத்திற்கு ஒரு புதிய நிகழ்வு அல்ல, 2002 இல் எலிசபெத்தின் மத்திய இங்கிலாந்தின் நாட்டிங்ஹாமிற்குச் சென்றபோது அவரது அரச காரின் மீது முட்டைகள் வீசப்பட்டன. மேலும் 1995 இல் மத்திய டப்ளினில் நடந்த ஒரு நடைப்பயணத்தின் போது பிரிட்டிஷ் எதிர்ப்பாளர்கள் அப்போது இளவரசராக இருந்த சார்லஸ் மீதும் முட்டைகளை வீசினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
லேட்டா வந்தா அவ்ளோதான்! ஊழியரை வேலையை விட்டு தூக்கிய AI மேனேஜர்... உச்சக்கட்ட பரபரப்பு!
லேட்டா வந்தா அவ்ளோதான்! ஊழியரை வேலையை விட்டு தூக்கிய AI மேனேஜர்... உச்சக்கட்ட பரபரப்பு!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget