Madonna: இன்ஸ்டா லைவில் அரை நிர்வாண புகைப்படங்கள்! சாட்டை சுழற்றிய இன்ஸ்டாகிராம்! கடுப்பான மடோனா!
பாப் பாடகி மடோனாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு தடை விதித்து ஒரு எச்சரிக்கையை வெளியிட்டது இன்ஸ்டாகிராம். அதில் இன்ஸ்டாகிராமில் உள்ள மற்றவர்களை மதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
மடோனா அதிர்ச்சி:
பாப் பாடகி மடோனா அடிக்கடி இன்ஸ்டாவில் லைவ் வந்து ரசிகர்களோடு கலந்துரையாடுவார். தனக்கே உரித்தான ஸ்டைலில், விதவிதமான ஆடைகளில் மிகவும் கவர்ச்சியாக அவர் லைவ் வருவது உண்டு. ஆனால் இந்த முறை அவரது லைவுக்கு இன்ஸ்டா தடையை விதித்துள்ளது. அரைநிர்வாணமாக லைவில் வந்ததே இதற்கு காரணம் என இன்ஸ்டாவும் குறிப்பிட்டுள்ளது.
இன்ஸ்டாகிராமில் நேரலைக்குச் செல்ல முயற்சிக்கும் போது, அவரால் நேரலைக்குச் செல்ல முடியவில்லை. மேலும் "சமூக வழிகாட்டுதல்களை மீறியதாக" அறிவிப்பு வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
கருத்து தெரிவித்துள்ள மடோனா:
இன்ஸ்டாகிராமில் நேரலைக்கு செல்ல முடியாதது குறித்து கருத்து தெரிவித்துள்ள மடோனா, நண்பர்களே, இன்ஸ்டாகிராமில் நேரலைக்குச் செல்ல முடியாமல் என்னுடைய ஐடி தடை செய்யப்பட்டுள்ளது; என்ன நடக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
View this post on Instagram
இன்ஸ்டாகிராம் எச்சரிக்கை:
மடோனாவிற்கு, இன்ஸ்டாகிராம் எச்சரிக்கையை வெளியிட்டது. அதில் சட்டத்தைப் பின்பற்றுங்கள் என்று எச்சரித்தது. மேலும் வெளிப்பாட்டிற்கான உண்மையான மற்றும் பாதுகாப்பான இடமாக இன்ஸ்டாகிராம் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று, நாங்கள் விரும்புகிறோம். இந்த சமூகத்தை வளர்க்க எங்களுக்கு உதவுங்கள். உங்கள் சொந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மட்டுமே பதிவிடவும், இன்ஸ்டாகிராமில் உள்ள அனைவரையும் மதிக்கவும். மேலும் உங்கள் நிர்வாண புகைப்படங்களை பதிவிட வேண்டாம் என எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
விளக்கம்:
இது குறித்து மேலும் தெரிவித்துள்ள மடோனா , என் இன்ஸ்டாகிராம் கணக்கை தடை செய்வதற்கு இன்ஸ்டா தெரிவித்துள்ள விளக்கமானது, என் மார்பு பகுதி தெரிந்ததால் தடை செய்வதாக கூறியுள்ளது. உடலில் மார்பகத்தை தவிர மற்றவையெல்லாம் காட்ட அனுமதிக்கும் ஒரு கலாச்சாரத்தில் நாம் வாழ்கிறோம் என்பது எனக்கு இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்