Worst Traffic Cities: உலகளவில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள் பட்டியலில் கொல்கத்தா, பெங்களூர், புனே! - சென்னைக்கு எந்த இடம்?
Worst Traffic Cities in India: இதுகுறித்து டாம் டாம் நிறுவனம் நடத்திய ஆய்வில், உலகின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் முதல் 5 இடங்களுக்குள் இந்தியாவைச் சேர்ந்த 3 நகரங்கள் இடம் பிடித்துள்ளன.
2024ஆம் ஆண்டின் இந்தியாவின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் பட்டியலில் கொல்கத்தா முதலிடம் பிடித்துள்ளது. கொல்கத்தாவில் 10 கி.மீட்டரை கடக்க 34 நிமிடங்கள் 33 நொடிகள் தேவைப்படுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து டாம் டாம் நிறுவனம் நடத்திய ஆய்வில், உலகின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் முதல் 5 இடங்களுக்குள் இந்தியாவைச் சேர்ந்த 3 நகரங்கள் இடம் பிடித்துள்ளன.
அதன்படி கொல்கத்தா நகரம் முதலிடத்தை பிடித்துள்ளது. கொல்கத்தாவில் 10 கி.மீட்டரை கடக்க 34 நிமிடங்கள் 33 நொடிகள் தேவைப்படுகிறது. இரண்டாவது இடத்தை பெங்களூரு பிடித்துள்ளது. மூன்றாவது இடத்தை பூனே பிடித்துள்ளது. கடந்த ஆண்டு, இந்தியாவின் மிகவும் நெரிசலான நகரமாக பெங்களூரு இருந்தது.
ஆச்சரியப்படும் விதமாக டெல்லி இந்த முறை மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. பட்டியலில் அது 122வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு, டெல்லி உலக அளவில் 44வது இடத்தில் இருந்தது.
நெதர்லாந்தை தளமாகக் கொண்ட இட தொழில்நுட்ப நிறுவனமான டாம்டாம், சாலைகளில் போக்குவரத்து மற்றும் நெரிசல் குறித்து நடத்திய சமீபத்திய கணக்கெடுப்பின்படி, நகர ஓட்டுநர்கள் 10 கி.மீ தூரம் பயணிக்க சராசரியாக 34 நிமிடங்கள் 33 வினாடிகள் செலவிடுவதாக தெரிவித்துள்ளது. போக்குவரத்து நெரிசல் சதவீதம் 32. கொல்கத்தாவைத் தொடர்ந்து பெங்களூரு உள்ளது, அங்கு ஓட்டுநர்கள் 10 கி.மீ. தூரத்தை கடக்க 34 நிமிடங்கள் 10 வினாடிகள் எடுத்துக் கொண்டனர். இங்கு போக்குவரத்து நெரிசல் அளவு 38 சதவீதம் ஆகும்.
புனே நகரம் இதே தூரத்தை 33 நிமிடங்கள் 22 வினாடிகளில் கடந்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவைச் சேர்ந்த மூன்று நகரங்கள் உலகின் முதல் ஐந்து இடங்களில் இடம்பிடித்துள்ளன. இங்கு நெரிசல் அளவு 32 ஆகும்.
போக்குவரத்து நெரிசல் காரணமாக கொல்கத்தாவில் ஒரு வருடத்தில் 117 மணிநேரமும், பெங்களூருவில் 110 மணிநேரமும், புனேவில் 108 மணிநேரமும் ஓட்டுநர்கள் போக்குவரத்தில் வீணடிப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகெங்கிலும் உள்ள முக்கிய நகரங்களில் போக்குவரத்து நிலைமைகளை ஆண்டுதோறும் மதிப்பிடும் டாம்டாம், இந்த ஆண்டு அறிக்கை கொல்கத்தா, பெங்களூரு மற்றும் புனேவை போக்குவரத்து நெரிசலுக்கு மோசமான நகரங்களாகக் குறிப்பிட்டுள்ளது.
ஆச்சரியப்படும் விதமாக, புது தில்லி 10 கி.மீ.க்கு சராசரி பயண நேரம் 23 நிமிடங்கள் என்ற விகிதத்தில் மிகவும் பின்தங்கிய இடத்தில் உள்ளது. 2023 கணக்கெடுப்பில் உலகெங்கிலும் உள்ள 387 நகரங்களில் டெல்லி 44வது மிகவும் நெரிசலான நகர மையமாக தரவரிசைப்படுத்தப்பட்டது.
டெல்லியில் மார்ச் 31, 2023 வரை 79.5 லட்சம் வாகனங்கள் இருந்தன. அவற்றில் 20.7 லட்சம் தனியார் கார்கள். பதிவு செய்யப்பட்ட மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 1.2 கோடியாக இருந்தது. அவற்றில் 33.8 லட்சம் தனியார் கார்கள்.
உலகளவில் முதல் 20 இடங்களில் உள்ள மற்றொரு இந்திய நகரமாக ஹைதராபாத் 18வது இடத்தைப் பிடித்துள்ளது. 10 கி.மீ தூரத்தை கடக்க 31.5 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆசியாவில், சென்னை 31வது இடத்தைப் பிடித்துள்ளது. மும்பை 10 கி.மீ.க்கு சராசரியாக 28 நிமிடங்கள் பயண நேரம் எடுத்து 39வது இடத்தைப் பிடித்துள்ளது. அகமதாபாத் 29 நிமிடங்கள் சராசரியாக பயண நேரம் எடுத்து 43வது இடத்தைப் பிடித்துள்ளது. எர்ணாகுளம் 50வது இடத்தில் உள்ளது. சராசரியாக 28 நிமிடங்கள் பயண நேரம் எடுத்து 50வது இடத்தைப் பிடித்துள்ளது.