இரண்டாம் முறையாக செக்ஸ் பொம்மையை திருமணம் செய்த பாடிபில்டர்: அடுத்த ஹனிமூனுக்கு இதோ தயார்!
கஜகஸ்தானி பாடிபில்டரான யூரி டோலோச்கோ தனது முதல் செக்ஸ் பொம்மை உடைந்ததால் இரண்டாவது பாலின பொம்மை மனைவியை திருமணம் செய்துள்ளார்.
உலகம் முழுவதும் ஒரு சில நபர்கள் தங்களை உலகம் உற்றுநோக்க வேண்டும் என்ற காரணத்திற்காக வித்தியாசமான முயற்சிகளை செய்து வருகின்றனர். அதிலும், ஒரு சிலர் தன் பாலின ஈர்ப்பாளர்களை திருமணம் செய்து கொள்ளுதல், தன்னை தானே திருமணம் செய்து கொள்ளுதல் போன்ற வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல், சமீபத்தில் கஜகஸ்தானை சேர்ந்த யூரி டோலோச்கோ என்ற பாடிபில்டர் செக்ஸ் பொம்மையை திருமணம் செய்துகொண்டு உலகம் முழுவதும் பிரபலமானவர். இந்தநிலையில், தனது முதல் செக்ஸ் பொம்மை உடைந்து விட்டதாகவும், தற்போது அதேபோல் இரண்டாவது செக்ஸ் பொம்மையை திருமணம் செய்து கொண்டதாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், எனது முதல் செக்ஸ் பொம்மை உடைந்த பிறகு, இரண்டாவது பாலின பொம்மை மனைவியை திருமணம் செய்துகொண்டு ஆடம்பரமான தேனிலவிற்கு அழைத்து செல்கிறேன். இது எனது இரண்டாவது மனைவி மார்கோவுடன் தான். முதல் மனைவி லூனாவுடன் இல்லை. இப்பொழுது நாங்கள் வந்த பல்கேரியா பயணம், வணிக ரீதியாக இருந்தாலும், நாங்கள் இது முழுமையான காதல் பயணமாக உணர்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பாடிபில்டர் யூரி டோலோச்கோ ஒரு போட்டோ ஷூட்டின் போதுதான் எனக்கு பொம்மையின் மீதான காதலை உணர்ந்தேன் என்று தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்