வசூலில் கலக்கும் IDENTITY...மலையாள சினிமாவின் சாதனை ஆரம்பம்.. மலையாள நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் ஜனவரி 2 ஆம் தேதி திரையரங்கில் IDENTITY வெளியானது. அகில் பால் மற்றும் அனஸ் கான் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர். இப்படத்தில் த்ரிஷா, வினய் ராய், மந்திரா பேடி, அஜு வர்கீஸ் என பலர் நடித்துள்ளனர். இப்படம் மொத்தம் ரூ.12 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. திரையரங்கில் வெளியான முதல் நாளில் இந்தியளவில் ரூ .1.8 கோடி வசூலித்தது. நல்ல விமர்சனம் பெற்று நான்காவது நாளில் ரூ.6.55 கோடி வசூல் செய்துள்ளது. உலகளவில் இப்படம் இதுவரை ரூ. 23.20 கோடி வசூலித்துள்ளது. இந்த ஆண்டின் முதல் மலையாள வெற்றிப்படமாக அமைந்துள்ளது.