Scotland Job: ரூ.4 லட்சம் சம்பளம்.. ரெண்டே வருடத்தில் ரூ. 1 கோடியாக உயரும்.. ஆனாலும் வேலைக்கு ஆளில்லை: எங்கே தெரியுமா?
ஸ்காட்லாந்தில் ரூ.4 லட்சம் ஊதியமாக வழங்க தயாராக இருந்தாலும், குறிப்பிட்ட வேலையை செய்ய ஆளில்லாத சூழல் நிலவுகிறது.
ஸ்காட்லாந்தில் ரூ.4 லட்சம் ஊதியமாக வழங்க தயாராக இருந்தாலும், குறிப்பிட்ட வேலையை செய்ய ஆளில்லாத சூழல் நிலவுகிறது. இதுதொடர்பான விவரங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வேலை மீதான எதிர்பார்ப்புகள்:
ஒவ்வொரு தனிநபரும் தனது வாழ்நாள் முழுவதும் சரியான வேலை வாய்ப்பை பெறவே விரும்புகின்றனர். சிறந்த சம்பளம், கவர்ச்சிகரமான சலுகைகள் மற்றும் வேலைபாதுகாப்பு ஆகியவை ஒரு பணியின் மீதான அடிப்படை எதிர்பார்ப்புகளாகும். அப்படி அனைத்து அம்சங்களையும் கொண்டிருந்தும் ஸ்காட்லந்தில் ஒரு நிறுவனம் வழங்கும் வேலைக்கு யாரும் ஆர்வம் காட்டாமல் உள்ளனர். விடுமுறைப் பயணம் போன்ற சலுகைகளுடன் 4 லட்சம் மாதச் சம்பளம் மற்றும் தங்களது விருப்பத்திற்கேற்றவாறு செய்யும் ஒரு வேலை. இது ஒரு கனவு வேலை போல் தெரிகிறது இல்லையா, ஆனால் இந்த வாய்ப்பை ஏற்கவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது.
ஊழியருக்கான பலன்கள்:
ஆண்டிற்கு ஒன்றிலிருந்து ஆறு மாதங்கள் வரை இந்த பணி இருக்கும். விடுப்பு தினங்களுக்கான ஊதியம் நாளொன்றிற்கு ரூ.3,877 ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கம்பெனி பாலிசியின்படி, பணிக்காலத்தில் ஒருவார நோய்வாய் விடுப்பு உள்ளது. பணிக்கு தேர்வானால், 12 மணி நேர வேலைக்கு நாளொன்றிற்கு 36 ஆயிரம் ரூபாய் ஊதியமாக வழங்கப்படும். ஆண்டிற்கு 6 மாதங்கள் என இரண்டு ஆண்டுகளுக்கு ஒருவர் தொடர்ந்து பணியாற்றினால், பின்பு அவரது ஊதியம் இந்திய மதிப்பில் ஒரு கோடி ரூபாயாக உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடிப்படை தகுதி:
காலியாக உள்ள 5 பணியிடங்களுக்கான விண்ணப்பதாரர்கள் தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு பயிற்சி பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக, BOSIET எனப்படும் அடிப்படை கடல்சார் பாதுகாப்பு தூண்டல் மற்றும் அவசர பயிற்சி, FOET எனப்படும் கடல்சார் அவசர பயிற்சி, CA-EBS எனப்படும் அமுக்கப்பட்ட காற்று அவசர சுவாச அமைப்பு மற்றும் OGUK எனப்படும் மருத்துவ பயிற்சி போன்றவற்றை உள்ளடக்கியிருக்க வேண்டும் எனா தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்னதான் வேலை:
ஸ்காட்லாந்தின் அபெர்டீன் கடற்கரை பகுதியில் எண்ணெய் கிணறுகளை தோண்டி, அதிலிருந்து எண்ணெய், ரசாயன வாயுக்கள் ஆகியவற்றை பத்திரமாக கரைக்கு கொண்டு வரவேண்டும் என்பதே இந்த வேலை ஆகும். குறிப்பிட்ட பணியில் உடல்நலம் பாதிக்கப்பட அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது என்பதும், மேலேகுறிப்பிடப்பட்ட அனைத்து அடிப்படை தகுதிகளையும் ஒருவர் பெற்றிருப்பது சிரமம் என்பதாலும், அந்த பணிக்கு மிகவும் குறைவான நபர்களே இதுவரை விண்ணப்பித்துள்ளனர். தற்போது வரையிலும் அந்த பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.