Watch Video : ஒரு வருடமாக நாய் உடையில் நாயாகவே வாழ்ந்து வரும் நபர்: நண்பர்களுக்கு கூட தெரியாதாம்!
டோகோ இப்படி செய்வதை அவர்களது சுற்றத்தார் மிகவும் வித்தியாசமாக பார்ப்பார்கள் என்று பயப்படுவதால் முகத்தை வெளிக்காட்டாமல் இருப்பதாக தெரிவிக்கிறார்.

‘டோகோ’ என்ற ட்விட்டர் பெயர் கொண்ட ஜப்பானியர் ஒருவர் சில மாதங்களாக நாயாகவே வாழ்ந்து வருகிறார். கடந்த ஆண்டு டோகோ, சுமார் ரூ.12 லட்சம் செலவழித்தது ஒரு அற்புதமான நாய் உடையை வாங்கியுள்ளார். அப்போதிலிருந்து, அவர் தனது ட்விட்டர் பக்கத்திலும் தனது யூடியூப் கணக்கிலும் தான் நாயாக வாழும் வாழ்க்கை குறித்து தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
உடையை உருவாக்கிய நிறுவனம்
ஜப்பானிய நிறுவனமான Zeppet, தொலைக்காட்சி விளம்பரங்கள் மற்றும் திரைப்படங்களுக்கான ஆடைகளை உருவாக்கி வருகிறது. அவர்கள் தான் டோகோ -விற்கு அவ்வளவு ரியலான தோற்றம் அளிக்கும் நாய் உடையை உருவாக்கி கொடுத்துள்ளனர். அந்த ஹைப்பர்-ரியலிஸ்டிக் நாய் உடையை உருவாக்க அவர்களுக்கு 40 நாட்கள் ஆனதாக கூறப்படுகிறது.
A Japanese man, known only as Toco, spent $16K on a realistic rough collie costume to fulfill his dream of becoming a dog.
— BoreCure (@CureBore) July 28, 2023
His identity remains anonymous, even to friends and coworkers.pic.twitter.com/9sfdph3Kb5
யாருக்கும் தெரியாமல் மாறியுள்ளார்
தற்போது சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு வீடியோவில், டோகோ தனது முதல் நடைப்பயணத்திற்குச் செல்வதைக் காணமுடிகிறது. அவர் சாலையில் உள்ள ஒரு சில உண்மையான நாய்களுடன் சேர்ந்து நடக்கிறார். டோகோவின் நட்பு வட்டத்திற்கு கூட அவர் இப்படி மாறியது குறித்து தெரியாது என்று கூறப்படுகிறது. அவரது வீடியோக்களில் எப்போதுமே அவர் நாய் உடையில் தான் தோன்றுகிறார். அதனால் அவரது முகம் ஒருபோதும் வெளிப்பட்டதில்லை.
சுற்றத்தாரிடம் மறைப்பது ஏன்?
டோகோ இப்படி செய்வதை அவர்களது சுற்றத்தார் மிகவும் வித்தியாசமாக பார்ப்பார்கள் என்று பயப்படுவதால் முகத்தை வெளிக்காட்டாமல் இருப்பதாக தெரிவிக்கிறார். வைரலான வீடியோவில், புதிய மனிதர்களை சந்திக்கும் டோகோ ஒரு நாயாக பூங்காவில் சுற்றித் திரிவதைக் காட்டுகிறது. "டோகோ என்று மட்டுமே அறியப்படும் இந்த ஜப்பானியர், நாயாக வேண்டும் என்ற தனது கனவை நிறைவேற்றுவதற்காக இப்படி மாறியுள்ளார்.

நினைவு தெரிந்ததில் இருந்து தோன்றியது
முன்னதாக டெய்லிமெயிலுடன் பேசிய டோகோ, "இது மாற்றுவதற்கான விருப்பம் என்று நான் நினைக்கிறேன். எனக்கு நினைவு தெரிந்ததிலிருந்து நான் அதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன்," என்றார். டோகோ தனது நண்பர்கள் மற்றும் சக ஊழியர்ககள் என்ன நினைப்பார்களோ என்பது பற்றி கவலைப்படுகிறார் என்றாலும், அவர் தனது ஆன்லைன் நண்பர்கள் மற்றும் ஃபாலோயர்களிடம் இருந்து நிறைய ஆதரவைப் பெற்று வருகிறார்.






















