மேலும் அறிய

Israel Hamas War: கடந்த 7 நாட்களாக நடைபெறும் இஸ்ரேல் ஹமாஸ் போர்.. உயிரிழப்பு எண்ணிக்கை 2,800 ஆக அதிகரிப்பு..

ஹமாஸ் குழுவினர் மீது இஸ்ரேல் தரைவழி தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் குழுவினர் இடையே நடைபெறும் தாக்குதலில் இதுவரை 2,800 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த சனிக்கிழமையன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை ஏவி தாக்குதலை தொடங்கியது. பல ஆண்டு காலமாக இஸ்ரேல் பாலஸ்தீன் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இது இஸ்ரேல் தனி நாடாக உருவானதில் இருந்து இந்த பிரச்சனை இருந்து வருகிறது. இஸ்ரேலுடன் பலமுறை போரிட்ட பாலஸ்தீன போராளிக் குழுவான ஹமாஸ் காஸாவை ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில் தான் கடந்த சனிக்கிழமை போர் தொடங்கியது.  

ஹமாஸின் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலும் தாக்குதலை தொடங்கியுள்ளது. தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே கடும் போர் நிலவி வருகிறது. இதனால் இஸ்ரேல் எல்லை பகுதியில் சுமார் 3 லட்சம் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் இஸ்ரேலுக்கு உதவிடும் வகையில் அமெரிக்க ஆயுதங்கள் மற்றும் படை வீரர்களை அனுப்பியுள்ளது. கடுமையான போர் தொடர்ந்து வரும் நிலையில் உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ளது. இந்த இக்கட்டான சூழலில் அமெரிக்கா நிச்சயம் உடன் இருக்கும் என உறுதியதியுள்ளது. 

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் குழுவினர் இடையே கடும் போர் நிலவி வரும் நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,800 கடந்து பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து புதன்கிழமையன்று பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒவ்வொரு ஹமாஸ் உறுப்பினரும் இறந்த மனிதர்களுக்கு சமம் ஹமாஸை நசுக்கி அழிப்போம் என்று குறிப்பிட்டுள்ளார். வடக்கு காசாவில் உள்ள 11 லட்சம் பாலஸ்தீன மக்கள் அடுத்த 24 மணி நேரத்தில் தங்கள் பதிகுதியை விட்டு வெளியேறும்படி இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடக்கு  காசாவில் இருக்கும் மக்கள் அனைவரும் தெற்கு பகுதிக்கு செல்லும்படி இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுவரை வான்வழி தாக்குதலை நடத்திய இஸ்ரேல், இதன் மூலம் தரை தாக்குதலுக்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  

இஸ்ரேலில் 18,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளனர். இஸ்ரேலில் சுமார் 85,000 இந்திய வம்சாவளி யூதர்கள் உள்ளனர். இவர்களில்,  27 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாக மேகாலயா முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் சிக்கி தவித்து வருகின்றனர். இஸ்ரேலில் சிக்கித்தவித்து வரும் இந்தியர்களை பத்திரமாக மீட்கும் முயற்சியில் இந்தியா இறங்கியுள்ளது. இதற்காக ஆப்ரேஷன் அஜய் என்ற திட்டத்தை இந்தியா அறிமுகம் செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ளார். சிறப்பு தனி விமானம் மற்றும் இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல்கள் மூலம் இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  அங்கு இருக்கும் இந்தியர்களுக்காக வெளியுறவு அமைச்சகம் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையை அமைத்தது. கட்டுப்பாட்டு அறையின் தொடர்பு விவரங்கள்: 1800118797 (கட்டணமில்லா), +91-11 23012113, +91-11-23014104, +91-11-23017905, +91996829 , மற்றும் situationroom@mea.gov.in.  என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம். இந்திய  தூதரகம் இஸ்ரேலில் உள்ள இந்திய குடிமக்களுக்கு https://indembassyisrael.gov.in/whats?id=dwjwb என்ற இணைப்பில் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget