Iranian President Raisi: ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. ஈரான் ஊடகங்கள் தகவல்
Iranian President Raisi: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த விமானம் விபத்துக்குள்ளான நிலையில், அவர் பலியானதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Iranian President Raisi: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த விமானம் விபத்துக்குள்ளான நிலையில், அதில் பயணித்த யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் பிரதமர் இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு:
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர், கடும் மூடுபனியில் மலைப்பகுதியைக் கடக்கும்போது விபத்துக்குள்ளானது என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அந்த ஹெலிகாப்டரில் ஈரானிய வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் உள்ளிட்ட சில முக்கிய பிரமுகர்களுடம் இருந்தனர். மலைமுகடுகளில் ஹெலிகாப்டர் மோதி நேர்ந்த விபத்தில், அதில் பயணித்த அனைவரும் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரானின் வடமேற்கில் உள்ள அஜர்பைஜானுடனான எல்லைக்கு சென்று திரும்பும்போது விபத்து நடந்துள்ளது. அதன்படி, தலைநகர் தெஹ்ரானில் இருந்து வடமேற்கே 600 கிலோமீட்டர் (375 மைல்) தொலைவில் உள்ள அஜர்பைஜான் நாட்டின் எல்லையில் உள்ள, ஜோல்ஃபா நகருக்கு அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.
🎥Tasnim publie le moment de la découverte des débris de l'hélicoptère de Raïssi pic.twitter.com/r2pVrvEhhM
— Le Vieux Tchapalo ® (@LeTchapalo) May 20, 2024
ஆபத்தில் இப்ராஹிம் ரைசியின் உயிர்..!
ஹெலிகாப்டர் விபத்து நடந்து சுமார் 15 மணி நேரத்திற்கும் மேலாக தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்ராஹிம் ரைசியின் உயிர் ஆபத்தில் இருப்பதாக ஏற்கனவே ஈரான் அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்து நடந்த பகுதிக்கு ஆம்புலன்ஸ்கள் மற்றும் மீட்புக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. நாட்டின் ஆயுதப் படைகளும் தேடுதல் நடவடிக்கையில் இணைந்துள்ளன. மலை, காடுகள் நிறைந்த நிலப்பரப்பு மற்றும் கடும் மூடுபனி ஆகியவை தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருப்பதாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்தனர். அதோடு, தற்போது அங்கு கனமழையும் கொட்டியது. 40 குழுக்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில், ரஷ்யா, ஈராக் மற்றும் கத்தார் உள்ளிட்ட நாடுகள் தேடுதல் நடவடிக்கைகளுக்கு உதவ முன்வந்தன. இந்நிலையில் தான் விமானம் விபத்துக்குள்ளான இடத்தை, தேடுதல் குழுவினர் கண்டறிந்துள்ளனர்.
ஈரானின் புதிய அதிபர் யார்?
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் பாதுகாவலராகவும் நாட்டின் ஷியைட் இறையாட்சிக்குள் அவரது பதவிக்கு சாத்தியமான வாரிசாகவும் ரைசி இருந்தார். ஈரானிய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, அவர் இறந்ததால், அந்நாட்டின் முதல் துணை அதிபரான முகமது மொக்பர் இடைக்கால அதிபராக செயல்பட உள்ளார். அடுத்த 50 நாட்களுக்குள் அங்கு தேர்தல் நடத்தப்படும்.
அமெரிக்க அதிபர் அவசர ஆலோசனை:
ஈரான் அதிபர் ரைசி பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான செய்தியை அறிந்ததும், அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தனது விடுமுறையை ரத்து செய்துவிட்டு வெள்ளை மாளிகையில் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். ஈரான் அதிபர் படுகொலை செய்யப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் நம்புவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.