குடிச்சா தப்பா? ஏர்போர்ட்டில் ரகளை செய்த போதை ஜோடி! ஊழியருக்கு முகத்தில் பஞ்ச்!
பொதுவாக பஸ், ரயில்,விமானம் போன்ற எந்த பயணமாக இருந்தாலும் குடிபோதையில் அருகில் பயணிக்கும் நபர்களின் செயல்களை கண்டால் நமக்கு கொஞ்சம் கோபம் வரும்.
இங்கிலாந்தில் குடிபோதையில் இருந்த பயணி ஒருவர் விமான நிலைய ஊழியர்களை தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
பொதுவாக பஸ், ரயில்,விமானம் போன்ற எந்த பயணமாக இருந்தாலும் குடிபோதையில் அருகில் பயணிக்கும் நபர்களின் செயல்களை கண்டால் நமக்கு கொஞ்சம் கோபம் வரும். இவர்களை எல்லாம் ஏன் வாகனத்தில் ஏற்றுகிறீர்கள் என கண்டக்டர், டிரைவரிடம் சக பயணிகள் மல்லுகட்டுவதை பார்த்திருப்போம். இதுபோன்ற பயணிகளால் என்ன நிலை ஏற்படும் என சினிமாவிலும் காட்சிகள் வைக்கப்பட்டிருக்கும்.
சக பயணிகளுக்கு இடையூறாக இருக்கும் அந்த மதுபோதை ஆசாமியை இறக்கி விட நேரும் போது அவர்கள் போதையில் வாக்குவாதம் செய்வார்கள்.சில நேரம் இது கைக்கலப்பில் கூட முடியும். அப்படியான ஒரு சம்பவம் தான் இங்கிலாந்தில் நடைபெற்றுள்ளது. கடந்த ஜூன் 17 ஆம் தேதி இங்கிலாந்தில் பிரிஸ்டல் விமான நிலையத்தில் இருந்து அலிகாண்டா செல்லும் ஈஸி ஜெட் விமானத்தில் ஒரு ஆணும், பெண்ணும் பயணம் செய்வதற்காக காத்திருந்தனர்.
Last call for easy jet flight 268 to Benidorm pic.twitter.com/xCoXK9R7YS
— ONE HAG (@hag_one) June 25, 2022
அப்போது அவர்களை சோதனை செய்த அதிகாரிகள் இருவரும் மதுபோதையில் இருப்பதை அறிந்து இருவரையும் தடுத்து நிறுத்தினர். இதனைத் தொடர்ந்து ஊழியர்களுக்கும், பயணிகள் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் அப்பெண் ஆத்திரத்தில் போர்டிங் பாஸ்ஸை ஊழியர்கள் முகத்தில் தூக்கி எறிந்தார்.
ஒருகட்டத்தில் பின்னால் நின்ற அவருடன் வந்த இளைஞர் அப்பெண்ணை ஓரமாக தள்ளிவிட்டு விமான நிலையர் ஊழியர் ஒருவரை சரமாரியாக தாக்கினார். இதனையடுத்து மற்றொரு ஊழியர் அங்கு வந்து இதனை தடுக்க அந்த இளைஞர் அமைதியானார். இந்த சம்பவத்தை தொடர்ந்து பயணிகள் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டு பின்னர் நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டனர். இந்த தாக்குதலை நேரில் கண்ட தனது குழந்தைகள் விமானத்தில் சம்பந்தப்பட்ட பயணிகளுடன் பயணம் செய்ய அச்சப்பட்டதாக அதே விமானத்தில் பயணிக்கவிருந்த பயணி ஒருவர் தெரிவித்தார். இதற்கிடையில் விமான நிலையத்தில் நடந்த இந்த தாக்குதல் சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாக பரவியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்