மேலும் அறிய

Sri Lanka Elections: தேர்தல் பரபரப்பு - இலங்கையின் அடுத்த அதிபர் யார்? மீண்டும் ராஜபக்‌ஷ குடும்பத்தின் ஆதிக்கமா?

Sri Lanka Elections: இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில், நாளை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

Sri Lanka Elections: இந்தியாவின் அண்டை நாடான இலங்கையின், அடுத்த பிரதமர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

இலங்கை அதிபர் தேர்தல்:

மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் இலங்கையில், புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. நிதிசிக்கலில் உள்ள அந்த நாடு தற்போது அதிபர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இயங்குகிறது. 2019ம் ஆண்டு பெரும்பான்மை பலத்துடன் கோத்தயபய ராஜபக்‌ஷ அதிபரானார். ஆனால், விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை போன்ற காரணங்களால், 2022ம் அண்டு உள்நாட்டில் பெரும் போராட்டம் வெடித்தது. கோத்தபய ராஜபக்க்ஷ நாட்டை விட்டு வெளியேறினார். இதையடுத்து, விக்கிரமசிங்க அதிபராக  பொறுப்பேற்று அமைதியை மீட்டெடுத்தார்.  சில கடினமான முடிவுகளை எடுத்து பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவினார். 

அடுத்த அதிபர் யார்?

இந்த சூழலில் தான், அடுத்த அதிபரை தேர்ந்தெடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு தேர்தலில் பல்வேறு சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தவிர, இரண்டு பெரிய கூட்டணிகளான SJB (சமகி ஜன பலவேகயா) மற்றும் NPP (தேசிய மக்கள் சக்தி) ஆகியவை ஆதிக்கம் செலுத்துகின்றன. இதில் 5 பேர் நட்சத்திர வேட்பாளர்களாக இருந்தாலும், 2 பேர் விக்ரமசிங்கவிற்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளனர்.

அதிபர் தேர்தலில் 5 நட்சத்திர வேட்பாளர்கள்: 

ரணில் விக்கிரமசிங்க:

75 வயதான ரணில் விக்கிரமசிங்க 6 முறை பிரதமராக பதவி வகித்தவர் ஆவார். அவரது கட்சி நாடாளுமன்றத்தில் ஒரே ஒரு இடத்தை மட்டுமே கொண்டுள்ளது.  அவரது வாய்ப்புகளை அதிகரிக்க முக்கிய கட்சிகளின் ஆதரவைப் பெற வேண்டும். ரணில் விக்கிரமசிங்கவின் மறுதேர்தல் முயற்சியானது 225 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் அதிக இடங்களைக் கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)வின் முறையான ஆதரவைப் பெறத் தவறியது. ஆனால் 90 க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு அவரை வலுவான நிலையில் வைத்துள்ளது. தற்போது அவர் சுயேச்சை வேட்பாளராக களம் கண்டுள்ளார்.

சஜித் பிரேமதாச

57 வயதான எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் அதிபர் ரணசிங்க பிரேமதாசவின் மகனுமான சஜித் பிரேமதாச, 2020ம் ஆண்டு விக்கிரமசிங்கவின் UNP யில் இருந்து பிரிந்த சமகி ஜன பலவேகய அல்லது SJBக்கு தலைமை தாங்குகிறார். அவரது மையவாத, அதிக இடதுசாரி கட்சி சர்வதேச நாணய நிதியத்துடன் $2.9 பில்லியன் கடன் பெறும் திட்டத்தில் மாற்றங்களை கோரியுள்ளது.  வாழ்க்கைச் செலவைக் குறைக்க வரிகளை மாற்றுவது போன்ற சில இலக்குகளை சரிசெய்யும் திட்டங்களை முன்வைத்துள்ளது. பிரேமதாச தலையீடு மற்றும் தடையற்ற சந்தை பொருளாதாரக் கொள்கைகளின் கலவையை ஆதரிக்கிறார்.

அனுர குமார திசாநாயக்க

55 வயதான அனுர குமார திசாநாயக்க, நாடாளுமன்றத்தில் வெறும் மூன்று இடங்களை மட்டுமே பெற்றுள்ளார். கடுமையான ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் ஏழைகளுக்கு ஆதரவான கொள்கைகள் மக்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளன. அவர் தேசிய மக்கள் சக்தி அல்லது NPP கூட்டணியின் கீழ் போட்டியிடுகிறார். தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு ஒன்றில், திசாநாயக்க 36% வாக்குகளுடன் முன்னிலை வகித்தார், அதைத் தொடர்ந்து பிரேமதாச மற்றும் விக்கிரமசிங்க மூன்றாவது இடம் பெற்றனர்.

நாமல் ராஜபக்‌ஷ

38 வயதான நாமல், இரண்டு அதிபர்களை உருவாக்கிய சக்திவாய்ந்த ராஜபக்‌ஷ குடும்பத்தின் வாரிசு ஆவார்.  அவரது தந்தை மஹிந்த மற்றும் மாமா கோத்தபய ஆகியோரை தொடர்ந்து,  நாமல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா அல்லது SLPP இன் அதிபர் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். விக்கிரமசிங்கவின் வெற்றி வாய்ப்புகளை எதிர்கொள்ள கட்சியை ஒற்றுமையாக வைத்திருக்கும் கடினமான பணியை அவர் எதிர்கொள்கிறார். ஆனால், நாமலின் வெற்றி வாய்ப்பு குறைவே என்று கூறப்படுகிறது.

நுவான் போபேஜ்

40 வயதான நுவான் போபகே மக்கள் போராட்டக் கூட்டணி அல்லது PSA இன் அதிபர் வேட்பாளர் ஆவார். அவர் வலுவான ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.  ஏழைகளுக்கு ஆதரவான கொள்கைகளை ஆதரிக்கிறார் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்துடன் இலங்கையின் இணக்கத்தை எதிர்க்கிறார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”உள்ள விட மாட்டோம்” கோயில் நிர்வாகம் பகீர்! இளையராஜா- ஜீயர் சர்ச்சைவிடாப்பிடியாக இருந்த பாஜக! சிக்கலில் ஏக்நாத் ஷிண்டே! மீண்டும் உடையும் சிவசேனா”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
"இங்கிலீஷ் நல்லாதான் பேசுறாங்க.. ஆனா, செயல் சரி இல்ல" நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த கார்கே!
TN Rain Alert: 2 நாட்களுக்கு கனமழை இருக்கு; சென்னைக்கு எப்படி?வானிலை அப்டேட்!
TN Rain Alert: 2 நாட்களுக்கு கனமழை இருக்கு; சென்னைக்கு எப்படி?வானிலை அப்டேட்!
"நிவாரணம் எங்களுக்கும் வேணும்" கொந்தளிக்கும் கிராம மக்கள்; தொடர் சாலை மறியல் - திணறும் விழுப்புரம் மாவட்டம்
Embed widget